அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து காலத்தால் அழியாத புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவர் தான் தகடூரை (இப்போதைய தர்மபுரி) தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த அதியமான்.
வெற்றிமேல் வெற்றி கொடுக்கும் கால பைரவர் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து காலத்தால் அழியாத புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவர் தான் தகடூரை (இப்போதைய தர்மபுரி) தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த அதியமான். இவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக அதியமான் கோட்டை தட்சணக் காசி காலபைரவர் கோயில் திகழ்கிறது. இந்தியாவிலேயே காலபைரவருக்கு 2 இடங்களில் மட்டுமே கோயில் உள்ளது. ஒன்று கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள காசி, மற்றொன்று அதியமான் கோட்டையில் அமைந்துள்ள இந்த கோயில். கி.பி. 9-ம் நூற்றாண்டில் அதியமான் இந்தப் பகுதியில் ஆட்சி செய்து வந்தார். அப்போது இந்தப் பகுதியில் படையெடுப்பு நடந்தது. இதனால் அதியமான் தனது ஆஸ்தான ஜோதிடரை அணுகி போரில் வெற்றி பெறுவது பற்றிக் கேட்டார். அதற்கு ஜோதிடர், இந்தப் பகுதியில் கால பைரவருக்கு தனியாக கோயில் கட்டி பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, அதியமான் ஆணைப்படி வேத மகரிஷிகள் காசி சென்று கருவறை சிலையைக் கொண்டு வந்தனர். அந்த சிலையை தென் திசை நோக்கி பிரதிஷ்டை செய்தனர். அந்த கோயில் 'ஸ்ரீ தட்சணக்காசி காலபைரவர் கோயில்' என்று பெயர்பெற்றது. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்ட மன்னன் அதியமான், போரில் வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் எதிர்கொண்ட போர்களிலும் வெற்றிகளைக் குவித்தார். இப்படி சிறப்பு பெற்ற இந்த கோயிலின் மகா மண்டபம் 9 நவக்கிரக கோள்கள் போல பாவித்து அமைக்கப்பட்டுள்ளது. பைரவர்களில் 64 வகை உண்டு. இந்த 64 பைரவர்களும் ஒரே சொரூபமாக காட்சி அளித்து உன்மத்த பைரவராக இந்த கோயிலில் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள மூலவரின் திருவுருவில் 12 ராசிகளும் 27 நட்சத் திரங்களும் 9 நவக்கிரக கோள்களும் அடங்கும். எதிரிகளுக்கு பயம் தந்து, தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் பைரவர் செய்து வருகிறார். காவல் தெய்வமாக இவரைக் கூறுவதால் நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். மன்னன் அதியமான் ஆட்சிசெய்த காலத்தில் தினமும் 2 முறை இந்த கோயிலுக்கு வந்து பூஜை செய்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. நாமும் இங்கு வந்து வழிபட்டால் 9 நவக்கிரக தோஷங்களும் விலகி மும்மூர்த்திகளின் அருளும் கிடைத்து, எடுத்து காரியத்தில் வெற்றி பெறலாம் என்கிறார்கள். குறிப்பாக, திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள் இங்கு வந்து பைரவரை வணங்கி மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. * இங்கு வந்து வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட தோஷமும் விலகி விடும். * ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகுகால பூஜை நடைபெறும். அதேபோல தேய்பிறை அஷ்டமியிலும் இந்த பூஜை நடைபெறும். இதில் பங்கேற்பது சிறப்பு. * திருமண பாக்கியத்திற்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து. 12 வாரம் கோயிலுக்கு வர வேண்டும். * மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் 3 மாதம் தொடர்ந்து வந்து தேங்காயில் விளக்கு ஏற்றி மஞ்சள், குங்கும மாலை அணிவித்து வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும். * குழந்தை பாக்கியம் வேண்டுவோர் முந்திரிமாலை அணிவிப்பதை இங்கு வழக்கத்தில் கொண்டுள்ளனர். * குடும்ப பிரச்சனைகள் தீர பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபட வேண்டும். * தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை குறிஞ்சி பூஜை நடைபெறுகிறது. * எதிரிகள் தொல்லை விலக வரமிளகாய், மிளகு, வேப்ப எண்ணெய் கொண்டு நடத்தப்படும் யாகமும் சிறப்புப் பெற்றது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்குழந்தை பாக்கியம்
கோயிலின் மேலும் சில சிறப்புகள்
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : வெற்றிமேல் வெற்றி கொடுக்கும் கால பைரவர் - குழந்தை பாக்கியம், கோயிலின் மேலும் சில சிறப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Kala Bhairava gives victory after victory - Child blessing, some other special features of the temple in Tamil [ spirituality ]