தூத்துக்குடி மாவட்டம் சுழுகுமலையில் உள்ள கழுகாசல மூர்த்தி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
கழுகுமலை கழுகாசல மூர்த்தி!
தூத்துக்குடி மாவட்டம் சுழுகுமலையில்
உள்ள கழுகாசல மூர்த்தி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகப்பெருமானே இத்தலத்தில்
கழுகாசல மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்)" மலையைக் குடைந்து, கோவிலை மலைக்குள் அமைத்திருப்பது. தாள்
இக்கோவிலின் விசேஷம். இந்தக் குடைவரைக் கோவிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோவிலை
வலம் வர வேண்டுமானால்
மலையையே சுற்றிவர வேண்டும்!.
இங்கு அருள்பாலிக்கும் கழுகாசல மூர்த்திக்கு
முகம் ஒன்று, கரம் ஆறு. தன் இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலைத் தொங்க விட்டும், கையில் கதிர்வேலுடன் காட்சி தருகின்றார்
இவர்.
பிற முருகன் கோயில்களில் அசுரன் தான்
மயிலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். ஆனால் இத்தலத்தில்
இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது.!
இதன் காரணமாக, சூரசம்ஹாரத்தின்போது இந்த மயிலின் முகம்
மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) மருகனும் (செவ்வாய்) இருப்பது
இன்னொரு சிறப்பு. எனவே குருமங்கலஸ்தலம் என்றும் இதை அழைக்கிறார்கள் இங்கு முருகனுக்குத்
தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு
தனி பள்ளியறையும் அமைந்திருப்பது அதிசயமாகக் கருதப்படுகிறது!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன் : கழுகுமலை கழுகாசல மூர்த்தி! - முருகன் [ முருகன் ] | Murugan : Kalkumalai Kalkasala Murthy! - Murugan in Tamil [ Murugan ]