இனிய வாழ்வளிக்கும் கரும்பாயிரம் பிள்ளையார்!

விநாயகர்

[ விநாயகர் ]

Karumbairam ganesa who gives a happy life! - Ganesha in Tamil

இனிய வாழ்வளிக்கும் கரும்பாயிரம் பிள்ளையார்! | Karumbairam ganesa who gives a happy life!

மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம். உடலை வருத்திச் செய்யும் எந்தத் தவமும் தேவையில்லை.

இனிய வாழ்வளிக்கும் கரும்பாயிரம் பிள்ளையார்!

 

மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம். உடலை வருத்திச் செய்யும் எந்தத் தவமும் தேவையில்லை. இரண்டு கொத்து அறுகம்புல்லை எடுத்து பிள்ளையாரின் திருவடிகளில் போட்டாலே போதும்! குளிர்ந்து அருளும் தயாபரன் அவர். பக்தர்கள் தங்கள் ஆசைக்கு ஆயிரம் திருப்பெயர்கள் இட்டு வணங்குவதும் இவருக்குத்தான். அப்படித்தான் இவருக்கு கரும்பாயிரம் என்றும் பெயர் வைத்தார்கள்!!

 

எதைத் தொடங்கினாலும், விநாயகரை வணங்கித் தொடர்ந்தால் காரியம் நிறைவேறுவது சகஜமானது. அதுபோல இந்த ஆலயத்திற்குச் செய்யும் சேவை சிறு புல் அளவாக இருந்தாலும் சரி. வண்டி வண்டியாக திருப்பிக் கொட்டிக் கொடுத்துவிடும் வள்ளல் இவர்!

 

திருக்குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையார் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்திட ஆர்வத்துடன் காத்திருக்கிறார். பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிடத் திருவுளம் கொண்டுள்ளார்.

 

இந்த ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது!

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : இனிய வாழ்வளிக்கும் கரும்பாயிரம் பிள்ளையார்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Karumbairam ganesa who gives a happy life! - Ganesha in Tamil [ Ganesha ]