கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் வழியில் வடக்கன்சேரி என்ற இடத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கஞ்சேரி அமைந்துள்ளது.
கேரள கணபதி!
கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்சூர்
செல்லும் வழியில் வடக்கன்சேரி என்ற இடத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில்
கிழக்கஞ்சேரி அமைந்துள்ளது. இங்கு ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து இருக்கிறார் கணபதி.
இங்கு வாழ்ந்து வரும் மக்கள் பிழைப்புக்காக
பல இடங்களில் இருந்தாலும், தங்கள்
கிராமம், தங்கள் மக்கள், தங்களுடைய கோவில் என்று வருடத்துக்கு
ஒருமுறை இங்கு வந்து, இந்த
கணபதிக்கு நடத்தப் படும் தேர்த்திருவிழாவில் கலந்துகொள்கிறார்கள். கணபதிக்காக நடத்தப்படும்
இந்தத் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வேறு எங்குமே காணமுடியாதது
இந்த கேரள கணபதி கிழக்கு நோக்கி தரிசனம்
தருகிறார். சன்னிதிக்கு நேரே சில படிகள் இறங்கினால், வற்றாத கண்ணாடி போன்ற தெளிந்த நதி ஓடுகின்றது. மிகவும் அமைதியான
சூழ்நிலை நம்மை பெரிதும் கவர்கின்றது. நதியில் குளித்து படிகள் ஏறிவரும் போது, வலது பக்கத்தில் நாகப் பிரதிஷ்டை காணப்படுகின்றது.
நாக கன்னியைத் தரிசித்து மேலும் படிகள் ஏறினால் கணபதியைத் தரிசிக்கலாம். இந்த கணபதியின்
கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீ காமாட்சி அம்மனின் வெகு அழகான ஆலயமும் உள்ளது.
எல்லா வருடமும் மார்கழி மாதம் பத்தாம்
தேதி இங்கு கணபதிக்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. நினைத்த காரியம் நிறைவேற இந்தக்
கேரள கணபதியைத் தரிசிக்க வருகிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விநாயகர் : கேரள கணபதி! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Kerala Ganapati! - Ganesha in Tamil [ Ganesha ]