கண் திருஷ்டி கணபதி

விநாயகர்

[ விநாயகர் ]

Khan Trishti Ganapati - Ganesha in Tamil

கண் திருஷ்டி கணபதி | Khan Trishti Ganapati

'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.' என்று சொல்வார்கள்.

கண் திருஷ்டி கணபதி

 

'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.' என்று சொல்வார்கள். அதாவது, கல்லால் அடி வாங்கி விடலாம், பிறரது கண்களின் பொறாமைப் பார்வை மட்டும் நம்மீது படக்கூடாது என்பதுதான் இதன் பொருள்.

 

ஒருவர் நம்மைப் பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதே சமயம் அந்தப் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதித்தே தீரும் என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் நம்பிக்கை. இதைத்தான் நாம் கண்திருஷ்டி என்கிறோம்.

 

தன் குழந்தைக்கு மற்றவர்களின் கண் திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக அதன் தாய் கன்னத்தில் மட்டுமின்றி கை, கால்களிலும் திருஷ்டிப் பொட்டு இடுகிறாள்!

 

ஆக, கண் திருஷ்டிக்கான பரிகாரம் என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையில் கலந்து விட்டது.

 

அகத்திய முனிவர் கண் திருஷ்டியிலிருந்து விடுபட, சுப திருஷ்டி கணபதி' என்ற மகா சக்தியைத் தோற்றுவித்தார். இது கணபதியின் 33வது மூர்த்தமாகும். இவர் விஷ்ணுவின் அம்சமாக சங்கு, சக்கரம், மூன்று கண்கள் (சிவாம்சம்), சூலம் (சக்தி அம்சம்) அனைத்து தெய்வங்களின் ஆயுதங்கள், சீறும் சிங்கம், மூஞ்சுறு வாகனம் ஆகியவற்றுடன், மகாலட்சுமிக்குரிய விரிந்த செந்தாமரையில் போர்க்கோலத்துடன் அவதரித்தார். இவரது தலையைச் சுற்றி ஒன்பது நாகங்களும், அக்னிப் பிழம்புகளும் உள்ளன. 51 கண்களையும் கொண்டுள்ளார்.

 

இந்த கண் திருஷ்டி கணபதியை வீடு, வியாபாரத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வடக்கு திசை நோக்கி வைத்து வழிபட்டால் கண் திருஷ்டி விலகும் என்பது நன்னம்பிக்கை. புதன் கிழமை அன்று இந்த திருஷ்டி கணபதியை வழிபாடு செய்வது உத்தமம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : கண் திருஷ்டி கணபதி - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Khan Trishti Ganapati - Ganesha in Tamil [ Ganesha ]