கிருஷ்ண உபதேசம்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்

[ கிருஷ்ணர் ]

Krishna Upadesha - Sermons of Sri Ramakrishna Paramahamsa_ in Tamil

கிருஷ்ண உபதேசம் | Krishna Upadesha

"புலன் விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்திற்கு காரணமானவைகள் ஆகும். குந்தியின் மகனே! ஆதி, அந்தமுடைய அவைகளில் ஞானி இன்பமுறுவது இல்லை"

கிருஷ்ண உபதேசம்:

"புலன் விஷயங்களில் தோன்றிய போகங்களே  துன்பத்திற்கு காரணமானவைகள் ஆகும். குந்தியின் மகனே! ஆதி, அந்தமுடைய அவைகளில் ஞானி இன்பமுறுவது இல்லை".🙏

 

விளக்கம்:   மனிதனுக்கு வருகிற எல்லா துயரங்களுக்கும் காரணம்  புலன் சுகத்தை நாடுவதேயாகும். புலன் விஷயங்களில்  மனிதன் தொடர்பு வைக்கும் பொழுதுசுகம் ஆரம்பிக்கிறதுஅதுவே பின்னர் துக்கமாக பரிணமிக்கிறது.

      மின்னல் போன்ற சிறிது இன்பம் முதலில் மனிதனுக்குத்  தென்பட்டாலும்,   பின்னர் அதுவே  துயரத்திற்கும் காரணமாகிறதுஅறிவு இல்லாத விலங்குகளும்,   மனிதர்களும் அவைகளை நாடிச் செல்கின்றன.

       விவேகமுடையவர்கள்    புலனின்பங்களை  அறவே விலக்கி விடுகிறார்கள்.  புலன் விஷயங்களில் தோன்றிய போகங்களே  துன்பத்திற்குக்  காரணமானவை ஆகும்.  எனவே   குந்தியின் மகனே #அர்ஜுனா!  ஆரம்பமும்முடிவும் உடைய   புலனின்பங்களில் ஞானிகள்  இன்பம் அடைவதில்லை! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பகவான்.

 

ஸ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சரின்_உபதேசம்

    "பாம்பைக் கண்டதும் நாக தெய்வமே! வாலை காட்டிதலையை மறைத்துக்கொண்டு ஒதுங்கிப் போய்விடு!  என்று  மக்கள் கூறுவது வழக்கம்.  அதைப் போல புலன்களைத்  தூண்டும் விஷயங்களில் இருந்தும் விலகியிருப்பது நல்லது.  அவைகளில் ஆழ்ந்துபின்னர்  வருந்துவதால் உண்டாகும் அனுபவத்தைக்  காட்டிலும்அவைகளுடைய  தொடர்பே  இல்லாமல் செய்து கொள்வதே மேன்மையானது".🙏

பரமஹம்சர்.

 

எனவே அர்ஜுனா!   புலனின்பங்களே  துன்பத்திற்கு காரணம்.  எனவே அவைகளிலிருந்து  விலகியிருப்பவன்  அவைகளில்  இன்பம் அடைவதில்லை!  என்கிறார்  ஸ்ரீகிருஷ்ண_பரமாத்மா.🙏

ஏன் இவர்கள் இப்படி ?

என்று எண்ணி எண்ணி

தன்னை வருத்திக் கொள்வதை விட ....

 

இவர்கள்

இவ்வளவு தான்...

என்று மன்னித்து

கடந்து விடுதல்

சாலச் சிறந்தது !!

 

இது மன்னிப்பு அல்ல...

தனக்கான சுய நிம்மதி !!!

கதறும் மனதிற்கு

ஒரு பக்குவ நிலை...

மரத்து போன

மனதிற்கு

மருந்து !!!

 

தனக்கு தானே

சொல்லிக் கொள்ளும்

ஒரு ஆறுதல்...

 

🌱உங்கள் மனதில் உள்ள காயத்தை நீங்கள் தான் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்🌱

 

🌱இல்லையேல் காயத்தால் வந்தக் கோவம், உங்களுள் தேங்கி நின்று உங்கள் மனதை அசுத்தமாக்கி, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரையும் காயப்படுத்தும்🌱

 

🌱காயமே அது பொய். இப்போது எழுந்து சென்று டுத்த வேலையைச் செய்🌱

 

🌱அதாவது கிடைக்காத வரை அனைத்தும் பெரியதாகத் தெரியும்🌱

 

🌱கிடைத்தப் பின் எதுவும் அற்பமானதாகத் தெரியும்🌱

 

🌱இது மனிதர்களின் இயல்புகள்🌱

 

🌱உங்களுக்குப் பிடித்தவர்களிடம் குறை நிறைகளைக் கூறுங்கள்🌱

 

🌱உங்களை விரும்புபவரிடம் நல்வழியைக் கூறுங்கள்🌱

 

🌱உங்களை நன்றாகப் புரிந்தவரிடம் அன்பைக் கொடுங்கள்🌱

 

🌱உங்கள் பிரச்சனை மற்றும் சவால்கள் எதுவாக இருந்தாலும் சரி 🌱

 

🌱சற்று விலக்கி வை, ஓய்வெடு, நிதானமாக யோசி,பின் செயல்படு

எல்லாம் சுலபமாக முடியும்🌱

 

🌱பொறுமை ஒன்றே உன்னை வெற்றிக்கான நல்நிலைக்கு கொண்டு செல்லும்.ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் 👍

 

🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏

 

எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் கிருஷ்ணா                                                         

 

👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல் தோல்வி பயத்தை வென்று 🙏


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

கிருஷ்ணர் : கிருஷ்ண உபதேசம் - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம் [ ] | Krishna : Krishna Upadesha - Sermons of Sri Ramakrishna Paramahamsa_ in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்