குடைவரைக் கோயில் திருமால்!

பெருமாள்

[ பெருமாள் ]

Kudaivar Temple Thirumal! - Perumal in Tamil

குடைவரைக் கோயில் திருமால்! | Kudaivar Temple Thirumal!

திருவண்ணாமலை அருகிலுள்ள ஆவூர் என்னும் ஊரில் உள்ள குடைவரைக்கோயிலில் திருமால் நான்கு கைகளுடன், தாமரை மலர்ப் பீடத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

குடைவரைக் கோயில் திருமால்!

 

திருவண்ணாமலை அருகிலுள்ள ஆவூர் என்னும் ஊரில் உள்ள குடைவரைக்கோயிலில் திருமால் நான்கு கைகளுடன், தாமரை மலர்ப் பீடத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். திருமாலின் ஒரு பக்கத்தில் அவரது வாகனமான கருடனும், மற்றொரு பக்கம் மார்க்கண்டேய முனிவரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

 

செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ஒரு கோயிலில் பிரம்மன், திருமால் இருவரின் சிற்பங்கள் இருக்கின்றன. பிரம்மன் நான்கு முகங்களுடனும் நான்கு கரங்களுடனும் காணப் படுகிறார். அதேபோல திருமாலும் நான்கு கரங்களுடன் தரிசனம் தருகிறார். வலது கையில் பிரயோகச் சக்கரமும், இடது கையில் சங்கும், மற்றொரு வலது கையில் தாமரை மலரும், இடது கையில் கடி முத்திரையும் காட்டியவாறு திருமால் வித்தியாசமாகத் தோற்றம் கொண்டு அருள்வதைக் காணலாம்.

 

கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பனந்தாள் திருத்தலம். பனைமரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட தலம். இத்தல இறைவனை நாக கன்னியர் வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. எனவே இத்தலம் நாகதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவத் திருக்கோலத்தை தரிசிக்கலாம். அற்புதமான கலை வேலைப் பாட்டுடன் தரிசனம் அளிக்கிறார் ஆடல்வல்லான்.

 

எல்லையை மிதித்தாலே தொல்லைகளை இல்லையென ஆக்கும் சிதம்பரம் திருத்தலத்திலும் பஞ்ச சபைகள் உள்ளன. அவை நடராஜப் பெருமானின் அற்புதக் கூத்தாடும் சிற்றம்பலம் எனும் சிற்சபை; அதற்கு எதிரே அமைந்துள்ள கனகசபை: கொடிமரத்தின் தெற்கே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை; சோம ஸ்கந்த மூர்த்தம் உள்ள தேவ சபை; ஆயிரம் கால் மண்டபம் உள்ள ராஜசபை; இந்த ஐந்து சபைகளும் சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டவை.

 

வேலூர் மாவட்டம் ஆற்காடுக்கு அருகில் உள்ள சிறு கிராமம் முப்பது வெட்டி இங்குள்ள சோமநாதர் ஆலயத்தில் பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் அற்புதக் கலைப்படைப்பு. சாதாரணமாக நடராஜப் பெருமானின் விரிந்த சடை வலது, இடது புறங்களில் சுழன்று ஆடும் விதத்தில் இருக்கும். இங்குள்ள திருவுருவில் சடை முடிகள் முதுகில் புரள்வதோடு இடது, வலது புஜங்களிலும் தவழ்வது அழகுமிகு தரிசனம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

பெருமாள் : குடைவரைக் கோயில் திருமால்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Kudaivar Temple Thirumal! - Perumal in Tamil [ Perumal ]