தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, கோவில் நகரத்திற்கும் பெயர் பெற்றது.
லால்குடி: திருமணத் தடை நீக்கும் சப்தரிஷீஸ்வரர் ஆலயம்!
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள
திருச்சி, கோவில் நகரத்திற்கும் பெயர் பெற்றது.
திருச்சி மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், வயலூர் முருகன் கோவில் என பல முக்கியக்
கோவில்கள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன.
அந்த வகையில் திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க சப்தரிஷீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்
உள்ள இந்தக் கோவிலில் சிவன் சன்னிதி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நடராஜர், விஷ்ணு, பெருமாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், மாங்கல்ய மகரிஷி 63 நாயன்மார்கள், பிச்சாண்டவர், அமிர்தகடேஸ்வரர் சன்னிதி என்று அனைத்து தெய்வ சன்னிதிகளும் இருக்கின்றன.
இந்தக் கோவில் ஊரின் நடுவில் மேற்கு
நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் விளங்குகிறது. கோயிலுக்கு
வெளியே முன்புறம் உயர்ந்த நாற்கால் மண்டபம் உள்ளது. சுவாமி சன்னிதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கியும்
உள்ளன. கோபுர வாசலில் நுழைந்ததும் வலப்புறமாக சிவகங்கைத் தீர்த்தம் இருக்கக் காணலாம்.
இரண்டாவது வாயிலைக் கடந்ததும் நடன மண்டபம் உள்ளது.
இந்தக் கோவிலுக்குரிய ஸ்தல விருட்சம்
அரச மரம். வருடத்தில் 12 மாதங்களும்
திருவிழாவும், தினசரி ஆறு கால பூஜையும் இங்கே நடைபெற்று
வருகின்றது.
சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஜாதக தோஷங்களால் திருமண
வாய்ப்புக்கள் தள்ளிப் போவது உண்டு. அவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து, இங்கே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாங்கல்ப
மகரிஷி என்ற முனிவருக்கும் மற்றும் சப்தரிஷிகளுக்கும் அபிஷேக் ஆராதனை செய்து வழிபட்டால்
உடன் திருமணம் கை கூடி வரும் என்பது ஐதீகம்!
லால்குடி சப்தரீஷிஸ்வரர் ஆலயத்தில்
1918ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மிகப் பழமை
வாய்ந்த தேர் உள்ளது. ஐந்து நிலைகளில், 23 அடி உயரத்திலும், 26 அடி அகலத்திலும் அமைந்த இத்தேர் தற்போது பழுதுபட்டு நிற்கிறது.
இதைப் புதுப்பிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : லால்குடி: திருமணத் தடை நீக்கும் சப்தரிஷீஸ்வரர் ஆலயம்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Lalgudi: Saptarisheswarar temple to remove marriage ban! - Tips in Tamil [ spirituality ]