கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம் பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ கிருஷ்ணர் ]

Let's know about Krishna Jayanti Makolam - Notes in Tamil

கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about Krishna Jayanti Makolam

வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது. சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர். கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள். மாக்கோலம் வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது. வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள். கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும். அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம் பற்றி தெரிந்து கொள்வோமா?

 

வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும்.

 

குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

 

சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர்.

 

கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

 

மாக்கோலம்

 

வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

 

வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள்.

 

கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும்.

 

அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

 

இந்த நினைவுச் சின்னமாகவே மாக்கோலத்தால் வரையப்பட்ட மாக்கோலங்கள் திகழ்கின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பிக்கும் வழுக்குமரம் ஏறுதல்

 

கிராமங்களில், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள். வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது, பெண்கள் தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள். எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும். தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

கிருஷ்ணர் : கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம் பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Krishna : Let's know about Krishna Jayanti Makolam - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்