பக்ரீத் பண்டிகை உருவான கதை பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ பண்டிகைகள்: குறிப்புகள் ]

Let's know about the origin story of Bakrit festival - Notes in Tamil

பக்ரீத் பண்டிகை உருவான கதை பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about the origin story of Bakrit festival

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், பெருநாளுக்கு முதல் நாளே உணவு பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்வார்கள். மறுநாள் அதை சமைப்பது மட்டும்தான். வழக்கமான அதிகாலை தொழுகையை தொழுதுவிட்டு குளித்து புத்தாடை அணிந்து நறுமனங்களை பூசிக்கொள்ளும் முஸ்லிம்கள், மசூதியிலோ அல்லது திடலிலோ சென்று பெருநாள் சிறப்பு தொழுவது வழக்கம். அதன் பின்னர் அங்கு வரும் வறியவர்களுக்கு தர்மங்கள் செய்து நண்பர்கள், உறவினர்களை கட்டியணைத்து வாழ்த்துவார்கள்.வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு பெரியவர்கள் பெருநாள் காசு என்ற பெயரில் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அவர்களை மகிழ செய்வார்கள்.

பக்ரீத் பண்டிகை உருவான கதை பற்றி தெரிந்து கொள்வோமா?

 

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

 

இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம்.

 

இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது.

 

இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.

 

இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.

 

மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், பெருநாளுக்கு முதல் நாளே உணவு பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்வார்கள்.

 

மறுநாள் அதை சமைப்பது மட்டும்தான். வழக்கமான அதிகாலை தொழுகையை தொழுதுவிட்டு குளித்து புத்தாடை அணிந்து நறுமனங்களை பூசிக்கொள்ளும் முஸ்லிம்கள், மசூதியிலோ அல்லது திடலிலோ சென்று பெருநாள் சிறப்பு தொழுவது வழக்கம்.

 

அதன் பின்னர் அங்கு வரும் வறியவர்களுக்கு தர்மங்கள் செய்து நண்பர்கள், உறவினர்களை கட்டியணைத்து வாழ்த்துவார்கள்.வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு பெரியவர்கள் பெருநாள் காசு என்ற பெயரில் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அவர்களை மகிழ செய்வார்கள்.

 

வெவ்வேறு ஊர்களில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி பெருநாள் அன்று ஒன்றாக சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

 

அதன் பின்னர் ஆடு, மாடுகளை பலியிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய உறவினர்கள், ஏழைகளுக்கு வீடு தேடி சென்று உதவுவார்கள்.

 

இப்படி ஹஜ் பெருநாள் நிறைவடையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பண்டிகைகள்: குறிப்புகள் : பக்ரீத் பண்டிகை உருவான கதை பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Festivals: Notes : Let's know about the origin story of Bakrit festival - Notes in Tamil [ ]