* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து
கொள்வோமா?
* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை
நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர்
புறப்பாடு நடைபெறும்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர்
புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள்.
* இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா
அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்.
* குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள்
இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும்.
* இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு
நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து
வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில்
குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
* தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள்
குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில்
பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு
வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில்
குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக்
காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச்
செல்வது விரும்பத்தக்கதல்ல.
* மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும்
அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால்
பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
* இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு
வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள்
பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
* முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக
சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில்
உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
* இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள்
தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு
நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
* முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக
3 சக்கர நாற்காலிகள் உள்ளன. நுழைவு வாயிலில் இருந்து
சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு
கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
* இக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின்
வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பாக 12 முடிநீக்கும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு
கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக முடி எடுக்கப்பட்டு வருகிறது.
* இக்கோவிலின் மேற்குபகுதியில் பவானிசாகர்-பண்ணாரி
சாலையில் மருத்துவ மையம் துவங்கப்பட்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சிமுறையில்
பணிபுரிந்து வருகின்றனர்.
* முடிகாணிக்கை மண்டபத்திற்கு அருகில் பக்தர்கள்
குளிப்பதற்கு வசதியாக குளியலறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முடிகாணிக்கை செலுத்தும்
குழந்தைகளுக்கு முடி காணிக்கை மண்டபத்தில் சுடுநீர் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு
பயன்பாட்டில் உள்ளது.
* நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தேங்காயைப் போல
உருண்டு திரண்டு உள்ளன. தேங்காய் சிதறுவது போல நமது பாவங்களும் சிதறுண்டு போகவே நாம்
பண்ணாரி அம்மன் கோவிலில் சிதறுகாய் உடைத்து வழிபடுகிறோம்.
* இறைவன் கல்பகாலம் முடிந்து மீண்டும் படைப்புத்
தொழிலை மேற்கொள்ளும்போது முதன் முதலில் தண்ணீரையே தோற்றுவிக்கிறான். அதனை நினைவு படுத்தும்
வகையில் கொண்டாடப்படுவதே தெப்ப உற்சவம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Amman: History : Let's know about the special features of Pannari Amman - Notes in Tamil [ ]