கால் ஆணிக்கு நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

Let's know about toenail relief - Tips in Tamil

கால் ஆணிக்கு நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about toenail relief

பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மல்லிகை செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். அம்மான் பச்சரிசி செடியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.

கால் ஆணிக்கு நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோமா?

 

பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

 

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

மல்லிகை செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

 

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

 

அம்மான் பச்சரிசி செடியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது.

 

தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.

 

சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்க போகுவதற்கு முன்னாடி கால் ஆணி மேல் பூசி வந்தால்… மூன்று நாளில் குணம் கிடைக்கும்.

 

இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்தில் புண் உண்டாகும்.

 

அப்படி வந்தால் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்தில் பூசிவிட்டால் புண் ஆறிவிடும். கால் ஆணியும் காணாமல் போய்விடும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : கால் ஆணிக்கு நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Health Tips : Let's know about toenail relief - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்