வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Let's know about Vetiver Mala has many miraculous powers - Notes in Tamil

வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about Vetiver Mala has many miraculous powers

குடும்பத்தில் எப்பொழுதும் நிம்மதியும், செல்வ செழிப்பும், நல்ல ஆரோக்கியமும் இருந்தாலே போதும். இவற்றை அடைவதற்கு இறைவனை சரண் அடைகிறோம். அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான எவ்வித நற்பெயரும், பலனும் கிடைப்பதில்லை. அதைத் தவிர்த்து தொடர்ந்து மென்மேலும் பல பிரச்சனைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்கும் போது மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டு தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து அதன்பின் முடிவெடுத்து சரியாக நடந்து வருகிறோம். இவ்வாறான பயத்தை போக்கி தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றியாக மாற இந்த ஒரு பொருள் மட்டுமே போதும். வெட்டிவேர் : ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்க வேண்டும். நாமும், நம்மை சுற்றியுள்ளவர்களும் எப்பொழுதும் நல்லவிதமாக பேசிக்கொண்டு, நல்ல விதமான செயல்களை செய்து கொண்டிருந்தால் மட்டுமே இவ்வாறான நேர்மறை அதிர்வுகள் நம்மை சூழ்ந்து இருக்கும். இதற்காக பல பூஜைகளை செய்து வருகின்றோம். பணவரவிற்கு பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை.

வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது பற்றி தெரிந்து கொள்வோமா..!!

 

குடும்பத்தில் எப்பொழுதும் நிம்மதியும், செல்வ செழிப்பும், நல்ல ஆரோக்கியமும் இருந்தாலே போதும். இவற்றை அடைவதற்கு இறைவனை சரண் அடைகிறோம்.

 

அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான எவ்வித நற்பெயரும், பலனும் கிடைப்பதில்லை. அதைத் தவிர்த்து தொடர்ந்து மென்மேலும் பல பிரச்சனைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும்.

 

ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்கும் போது மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டு தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து அதன்பின் முடிவெடுத்து சரியாக நடந்து வருகிறோம்.

 

இவ்வாறான பயத்தை போக்கி தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றியாக மாற இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்.

 

வெட்டிவேர் :

 

ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

 

வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்க வேண்டும். நாமும், நம்மை சுற்றியுள்ளவர்களும் எப்பொழுதும் நல்லவிதமாக பேசிக்கொண்டு, நல்ல விதமான செயல்களை செய்து கொண்டிருந்தால் மட்டுமே இவ்வாறான நேர்மறை அதிர்வுகள் நம்மை சூழ்ந்து இருக்கும்.

 

இதற்காக பல பூஜைகளை செய்து வருகின்றோம். பணவரவிற்கு பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை.

 

மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வேர், வெட்டி வேர். இதை வாங்கி எப்போதுமே வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

 

இதனை வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு, இந்த வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும்.

 

அந்த வாசத்திற்கு வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும். இந்த வாசத்தில் தான் மகாலட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

 

வீட்டின் வாசலிலும், வியாபாரம் செய்யும் இடத்தின் நிலை வாசலிலும் வெட்டிவேர் மாலையை மாட்டி வைப்பது மிகவும் நல்லது.

 

இது மட்டுமல்லாமல் வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது. அன்றைய காலம் முதல் இன்று வரை அனைத்து விதமான பூஜைகளிலும் இந்த வெட்டிவேர் பங்கு பெறுகிறது.

 

வீட்டின் வாசலில் மாட்டி வைக்கும் வெட்டிவேர் எப்பொழுதும் ஒரு நறுமணத்தை வீசி கொண்டிருக்கும். இதனால் வீட்டிற்குள் நுழையும் பொழுது எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் அது மனதை விட்டு அகன்று விடும்.

 

வெட்டிவேரின் வாசனை மூலமாக சிந்தனைகள் அனைத்தும் நேர்மையாகவே இருக்கும். இவ்வாறு மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கி, செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Let's know about Vetiver Mala has many miraculous powers - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்