நார்த்தங்காயை மட்டும் எடுத்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 🍒 சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் நறுக்கிய நார்த்தங்காய்களைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். 🍒 இப்படி கலந்த பின்பு, அதை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு வைக்கவும். 🍒 பாட்டிலில் அடைக்கப்பட்ட நார்த்தங்காய்த்துண்டுகளைத் தினமும் இரண்டுமுறை, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும். 🍒 சுமார் ஐந்து நாட்கள் நார்த்தங்காய்கள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். 🍒 பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும்.
நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி? பற்றி தெரிந்து கொள்வோமா?
தேவையான பொருட்கள்
பொருள் – அளவு
நார்த்தங்காய் - 10
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் - அரை
டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க :
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
🍒 நார்த்தங்காயை மட்டும் எடுத்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும்.
🍒 சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் நறுக்கிய நார்த்தங்காய்களைப்
போட்டு, அதன்
மேல் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.
🍒 இப்படி கலந்த பின்பு, அதை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு
வைக்கவும்.
🍒 பாட்டிலில் அடைக்கப்பட்ட நார்த்தங்காய்த்துண்டுகளைத் தினமும்
இரண்டுமுறை, ஒரு
கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
🍒 சுமார் ஐந்து நாட்கள் நார்த்தங்காய்கள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும்.
🍒 பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்
காய்ந்ததும், மிளகாய்
வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும்.
🍒 வறுத்த மிளகாய் வற்றலை ஆறியதற்குப் பின்பு, அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். மிளகாய் மொறுமொறுப்பாக
இருந்தால் நன்றாக இருக்கும்.
🍒 அரைத்த மிளகாய்த்தூளை ஊறுகாயில் கலக்கவும்.
🍒 பின்னர் ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றிச் சூடு செய்து கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
🍒 கடுகு வெடித்ததும், கலக்கி வைத்துள்ள ஊறுகாயைச் சேர்த்து நன்கு கலந்து
அப்படியே இறக்கவும்.
🍒 சூடு ஆறிய பின்பு, சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றி விடவும்.
🍒 ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலே சிறிது நிற்கும் படியாக இருக்க வேண்டும்.
🍒இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :
இந்த நார்த்தங்காய் ஊறுகாயை மோர் சாதம், கம்மங்கூழ், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தக்காளி சாதத்துடன் சேர்த்து
சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | cooking recipes : Let's know how to make Narthankai Pickle - Notes in Tamil [ ]