ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது தெரிந்துகொள்வோம் வாங்க!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Let's know what to do and what not to do in the month of Audi - Notes in Tamil

ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது  தெரிந்துகொள்வோம் வாங்க! | Let's know what to do and what not to do in the month of Audi

💫 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். இவற்றில் மார்கழி பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. புரட்டாசி மாதத்தின் ஒரு பாதி பித்ரு வழிபாட்டுக்கும், மறுபாதி நவராத்திரி என்று அம்மன் வழிபாட்டுக்கும் உரியதாகும். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்குரியது என்பர். 💫 ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்வார்கள். அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு சிறப்புடையதாகும். 💫 இந்த மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமமான அதிர்வுகள் வெளிப்படும். அதனால் இந்த மாதத்தில் இறை வழிபாடு, மந்திர ஜபம் போன்றவை செய்வது மிகச் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் இறை வழிபாட்டினை செய்வதன் மூலம், அது பல மடங்கு பலனை தரும். 💫 ஆடி மாதத்தில் எந்தெந்த காரியங்களை செய்யலாம்? எந்தெந்த காரியங்களை செய்யக் கூடாது? என்பதை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க.. ஆடி மாதத்தில் செய்யக் கூடாதவை: 💫 திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. 💫 புது வீடு குடி புகுதல், வீடு இடமாற்றம் செய்வது, கிரகப்பிரவேசம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். 💫 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது. 💫 ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை : 💫 நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை செய்யலாம். 💫 திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம். தாலி பெருக்கிக் போடலாம். 💫 மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்யலாம்.

🌟 ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? தெரிந்துகொள்வோம் வாங்க!..💫💫

                

 

💫 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். இவற்றில் மார்கழி பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. புரட்டாசி மாதத்தின் ஒரு பாதி பித்ரு வழிபாட்டுக்கும், மறுபாதி நவராத்திரி என்று அம்மன் வழிபாட்டுக்கும் உரியதாகும். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்குரியது என்பர்.

 

💫 ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்வார்கள். அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு சிறப்புடையதாகும்.

 

💫 இந்த மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமமான அதிர்வுகள் வெளிப்படும். அதனால் இந்த மாதத்தில் இறை வழிபாடு, மந்திர ஜபம் போன்றவை செய்வது மிகச் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் இறை வழிபாட்டினை செய்வதன் மூலம், அது பல மடங்கு பலனை தரும்.

 

💫 ஆடி மாதத்தில் எந்தெந்த காரியங்களை செய்யலாம்? எந்தெந்த காரியங்களை செய்யக் கூடாது? என்பதை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

 

ஆடி மாதத்தில் செய்யக் கூடாதவை:

 

💫 திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

 

💫 புது வீடு குடி புகுதல், வீடு இடமாற்றம் செய்வது, கிரகப்பிரவேசம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

 

💫 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது.

 

💫 ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

 

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை :

 

💫 நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை செய்யலாம்.

 

💫 திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம். தாலி பெருக்கிக் போடலாம்.

 

💫 மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்யலாம்.

 

💫 ஆடி மாதம், வாஸ்து புருஷன் நித்திரை விடும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் வீடு கட்டுமான பணிகளை துவங்கலாம்.

 

பெண்கள் என்ன செய்யலாம்?

 

👩 ஆடி மாதத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால், வருடம் முழுவதும் சுபமான வாழ்க்கை அமையும். வருடம் முழுவதும் விரதம் இருந்து வழிபட்ட பலனைத் தரும்.

 

👩 அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதும், கோவிலுக்கு குங்குமம் வாங்கிக் கொடுப்பது அம்மனின் அருளை பெற்றுத் தரும்.

 

👩 திருவிளக்கு பூஜை நடத்துவது, விளக்கு பூஜையில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பு.

 

👩சுமங்கலி பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் தாம்பூலம் வழங்குவது குடும்பத்திற்கு நல்லது.

 

👩குடும்பத்தில் நோய் நொடிகள் நெருங்காமல் இருக்க பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

 

👩 கூழ் காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பது, உணவு தானம், வஸ்திர தானம் வழங்குவது மிகச் சிறப்பானதாகும்.

 

ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்..!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது தெரிந்துகொள்வோம் வாங்க! - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Let's know what to do and what not to do in the month of Audi - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்