அம்பாள், முப்பெரும் தேவியராகக் காட்சி கொடுக்கும் தலம் திருவானைக்காவல். அகிலாண்டேஸ்வரி ஒரு நாளில் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்மனை தரிசித்து வழிபட கல்வி,செல்வம்,வீரம் ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன். காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளா பூஜை நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையோடே காட்சி கொடுக்கிறாள். உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.
🌠அம்பாளும் அற்புதங்களும்🌠
பற்றி
அறிந்து கொள்வோமா?
அம்பாள், முப்பெரும் தேவியராகக் காட்சி கொடுக்கும் தலம் திருவானைக்காவல்.
அகிலாண்டேஸ்வரி ஒரு நாளில் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள்.
மூன்று வேளையிலும் அம்மனை தரிசித்து வழிபட கல்வி,செல்வம்,வீரம் ஆகிய
மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.
ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு
விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் அமர்ந்து
அருள்கிறாள் காந்திமதி அம்மன்.
காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்த ஜாம பூஜையின்
போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளா பூஜை நடக்கும் வரையில் அம்பிகை
வெண்ணிறப் புடவையோடே காட்சி கொடுக்கிறாள்.
உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே
அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன்,ஒரு நாளில்
மூன்று விதமான திவ்யமங்கள ரூபங்களில் காட்சி கொடுக்கிறாள்.
காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம்,உச்சி காலத்தில்
மடிசார் புடவை அலங்காரம்,இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று
மூன்று அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.
குழந்தை வரம் வேண்டுகிறவர்கள் அன்னை மீனாட்சியைக்
காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சி கொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்
என்று சொல்கிறார்கள். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது
ஐதிகம்.
சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அன்னை கற்பகவல்லியாக
அருள்பாலிக்கிறாள். வைகாசி பௌர்ணமி அன்று அன்னையை ஞானேஸ்வரியாக வழிபடுகிறார்கள். அன்று அம்பிகை
இடையில் ஒரு வாள் தரித்திருப்பாள்.அதை 'ஞான வாள்' என்கின்றனர்.
அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞ்ஞான வழியில் நடத்தும்
வாள் என்பது அதன் தாத்பர்யம்.
திரு நீலக்குடியில் மனோக்ஞ நாதசுவாமி ஆலயத்தில்
அம்பாள்,யோக சக்தி,போக சக்தி
என்னும் இரு சக்திகளாகத் திருக்கோலம் கொண்டு அருள்புரிகிறாள்.
போக சக்தி-அநூபமஸ்தனி என்ற திருப்பெயருடனும்,யோக சக்தி-பக்தாபீஷ்டதாயினி
என்னும் திருப்பெயருடனும் அருள்கிறாள் அன்னை.
இரு சந்நிதிகளுக்கும் தனித் தனி விமானம் இல்லாமல்
ஒற்றைக் கலசம் கொண்ட ஒரே விமானம் அமைந்துள்ளது.
ஆடி மாதம் அம்பாளை வழிபட உகந்த மாதம்.
ஆடியில் தான் அம்மனின் அருள் மாரியாகப் பொழிகிறது.வெப்பம்
குறைந்து பூமி குளிர்ச்சியாகிறது.
ஆடியில் நதிகள் எல்லாம் புதுப்புனலோடு எழில் கொண்டு
பாய்கின்றன.விவசாயிகள் மீண்டும் விதைப்பைத் தொடங்குவதும் இந்த மாதத்தில் தான்.
இத்தகைய சிறப்புகள் மிக்க ஆடியில் அம்பிகையை வழிபடுவது
மேலும் சிறப்பினை வழங்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : அம்பாளும் அற்புதங்களும் பற்றி அறிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Amman: History : Let's learn about Ambal and miracles - Notes in Tamil [ ]