பட்டினத்தாரின் பிழை பொறுத்தல் பதிகம் பற்றி அறிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Let's learn about the fault tolerance record of Pattinathar - Notes in Tamil

பட்டினத்தாரின் பிழை பொறுத்தல் பதிகம் பற்றி அறிந்து கொள்வோமா | Let's learn about the fault tolerance record of Pattinathar

நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம். மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம். சுயநலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. நமது கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழையை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்க முடியும். அப்படிபட்ட பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் பாடிக்காட்டுகிறார் பட்டினத்தார். இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பட்டினத்தாரால் பாடப்பெற்றது. கல்லாப் பிழை: இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார். கருதாப்பிழை: இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே. கசிந்து உருகி நில்லாப்பிழை: இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.

பட்டினத்தாரின் பிழை பொறுத்தல் பதிகம் பற்றி அறிந்து கொள்வோமா?

 

நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.

 

மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.

 

சுயநலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன.

 

நமது கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

 

நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழையை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்க முடியும்.

 

அப்படிபட்ட பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் பாடிக்காட்டுகிறார் பட்டினத்தார்.

 

இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பட்டினத்தாரால் பாடப்பெற்றது.

 

கல்லாப் பிழை:

 

இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.

 

கருதாப்பிழை:

 

இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.

 

கசிந்து உருகி நில்லாப்பிழை:

 

இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.

 

நினையாப்பிழை:

 

இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

 

பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை:

 

முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.

 

துதியாப்பிழை:

 

தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?

 

தொழாப்பிழை:

 

தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.

 

"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

 

நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்

 

நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்

 

துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

 

எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே."

 

என்பது அந்த அற்புதமான பாடல்.

 

தினமும் நீங்கள் உறங்க போகும்போது இந்த  பிழைபொறுத்தல் பதிகத்தை சொல்லுங்கள்/கேளுங்கள்.

 

இதனால் உங்களது செல்வங்கள் பெருகும், துன்பங்கள் நீங்கும்...

 

நண்பர்களே இன்று முதல் தினமும் இப்பாடலை சொல்வதை/கேட்பதை வழக்கமாகக் கொள்வோம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : பட்டினத்தாரின் பிழை பொறுத்தல் பதிகம் பற்றி அறிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Let's learn about the fault tolerance record of Pattinathar - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்