பூண்டு தொக்கு செய்வது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ சமையல் குறிப்புகள் ]

Let's learn how to pack garlic - Tips in Tamil

பூண்டு தொக்கு செய்வது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா | Let's learn how to pack garlic

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக சிவந்து மொறு மொறு வென்று வறுபட்ட பிறகு அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயில் உரித்து சுத்தம் செய்து வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். பூண்டை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சீரகம், புளி, இஞ்சி இவற்றை சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பூண்டு நன்றாக பொன்னிறமாக சுருங்கி வரும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சுருங்கி வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நம் முதலில் வறுத்து வைத்திருந்த காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம் பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயுடன் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயாராகி விட்டது. இதை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு தொக்கில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பூண்டு தொக்கு செய்வது எப்படி? பற்றி தெரிந்து கொள்வோமா?

 

தேவையான பொருட்கள்

 

நல்லெண்ணெய் – 1 1/2 குழிக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 10

பூண்டு – 2 முழு பூண்டு

இஞ்சி – 1 இன்ச்

சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன்

புளி – எலுமிச்சை பழ அளவு

வெல்லம் – சிறிய துண்டு

கடுகு – 1/2 ஸ்பூன்

வெந்தயம் – 10

கருவேப்பிலை – 2 இனுக்கு

உப்பு – தேவையான அளவு

 

செய்முறை

 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

 

காய்ந்த மிளகாய் நன்றாக சிவந்து மொறு மொறு வென்று வறுபட்ட பிறகு அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயில் உரித்து சுத்தம் செய்து வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.

 

பூண்டை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சீரகம், புளி, இஞ்சி இவற்றை சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும்.

 

பூண்டு நன்றாக பொன்னிறமாக சுருங்கி வரும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சுருங்கி வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

 

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நம் முதலில் வறுத்து வைத்திருந்த காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயுடன் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயாராகி விட்டது.

 

இதை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு தொக்கில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

 

இந்த பூண்டு தொக்கு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று அனைத்திற்கும் நாம் தொட்டுக் கொள்ளலாம்.

 

வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது இந்த தொக்கை எடுத்துச் செல்ல முடியும். இதில் தண்ணீர் சேர்க்காததால் இது நீண்ட நாட்களாக வெளியில் இருந்தாலும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பே இல்லை.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : பூண்டு தொக்கு செய்வது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | cooking recipes : Let's learn how to pack garlic - Tips in Tamil [ ]