கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய எட்டு பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா?

குறிப்புகள்

[ கிருஷ்ணர் ]

Let us know about the eight mottos that Lord Krishna spoke to Arjuna - Notes in Tamil

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய எட்டு பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா? | Let us know about the eight mottos that Lord Krishna spoke to Arjuna

குருஷேத்திரப் போர் நடக்கும் பொழுது இந்தப் போர் இப்போது தேவைதானா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் அர்ஜுனனிடம், கிருஷ்ணபரமாத்மா உரையாடிய உரையாடல்கள் தான் பின்னாளில் 'பகவத் கீதை' என்கிற சக்தி வாய்ந்த புனிதமாக நூல் உருவாக காரணமாக அமைந்தது. கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய ஒவ்வொரு உபதேசத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் கருத்துகள் இந்த கலியுகத்திலும் மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் உள்ளது ஆச்சரியப்படத் தக்கதாகும். அவை என்னவென்று பாருங்கள். பொன்மொழி1: இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்று அவர் கூறுகிறார். நிலையற்ற ஒன்றின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் அதனால் கிடைக்கப் போவது என்னவோ ஏமாற்றம்தான். நித்திய ஜீவன் அதாவது நம் உடலுக்குள் இருக்கும் ஆத்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை எனவே நிரந்தரமற்ற நம் உடலை கொண்டு எதையும் யோசிக்காமல் நிரந்தரமாக இருக்கும் உள்ளத்தினால் யோசிப்பது நன்மைகளை கொடுக்கும். பொன்மொழி 2: தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளிலிருந்து தட்டிக்கழித்து பயந்து ஓடுவதில் விடுதலை கிடைப்பது இல்லை. எதற்காக இந்த பூமிக்கு வந்தமோ, எதை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோமோ அதை தயக்கமில்லாமல் தைரியமாக நிறைவேற்றுவதன் மூலமே நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கிறது. பொன்மொழி 3: ஒரு செயலை செய்ய நினைத்து விட்டால் அல்லது ஆரம்பித்து விட்டால் அதனால் கிடைக்கக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த செயலை முழுமையாக ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் பொழுது அதில் தோல்வியுற்றால் கூட நமக்கு மன திருப்தி முழுதாக கிடைக்கிறது. வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருத வேண்டும். பொன்மொழி 4: புத்தர் கூறியது போல அன்றே கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று. ஆசைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு உங்கள் ஆசைகளை குறைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சி என்னும் திறவு கோல் உங்களிடம் தானாகவே வந்து சேரும். பொன்மொழி 5: சுயநலம் என்னும் தூசியை அகற்றினால் தான் தெளிவு என்னும் கண்ணாடி நமக்கு தெரிய ஆரம்பிக்கும். கண்ணாடி போன்ற தெளிவான உள்ளத்தை அடைய சுயநலம் என்னும் தூசுகளை துடைத்து தெளிவையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்ய வேண்டும். பொன்மொழிகள் 6: நம் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் ஏறக் குறைய இருக்கக்கூடாது, சமநிலையாக இருக்க வேண்டும். பசி, தூக்கம், துக்கம், உடல், இன்பம், துன்பம் எல்லாமே கூடவோ, குறையவோ இல்லாமல் சரிசமமான அளவில் நாம் வைத்திருக்க வேண்டும்.

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய எட்டு பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா?

 

குருஷேத்திரப் போர் நடக்கும் பொழுது இந்தப் போர் இப்போது தேவைதானா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் அர்ஜுனனிடம், கிருஷ்ணபரமாத்மா உரையாடிய உரையாடல்கள் தான் பின்னாளில் 'பகவத் கீதை' என்கிற சக்தி வாய்ந்த புனிதமாக நூல் உருவாக காரணமாக அமைந்தது.

 

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய ஒவ்வொரு உபதேசத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் கருத்துகள் இந்த கலியுகத்திலும் மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் உள்ளது ஆச்சரியப்படத் தக்கதாகும்.

அவை என்னவென்று பாருங்கள்.

 

பொன்மொழி1:

 

இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்று அவர் கூறுகிறார். நிலையற்ற ஒன்றின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் அதனால் கிடைக்கப் போவது என்னவோ ஏமாற்றம்தான். நித்திய ஜீவன் அதாவது நம் உடலுக்குள் இருக்கும் ஆத்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை எனவே நிரந்தரமற்ற நம் உடலை கொண்டு எதையும் யோசிக்காமல் நிரந்தரமாக இருக்கும் உள்ளத்தினால் யோசிப்பது நன்மைகளை கொடுக்கும்.

 

பொன்மொழி 2:

 

தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளிலிருந்து தட்டிக்கழித்து பயந்து ஓடுவதில் விடுதலை கிடைப்பது இல்லை. எதற்காக இந்த பூமிக்கு வந்தமோ, எதை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோமோ அதை தயக்கமில்லாமல் தைரியமாக நிறைவேற்றுவதன் மூலமே நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கிறது.

 

பொன்மொழி 3:

 

ஒரு செயலை செய்ய நினைத்து விட்டால் அல்லது ஆரம்பித்து விட்டால் அதனால் கிடைக்கக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த செயலை முழுமையாக ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் பொழுது அதில் தோல்வியுற்றால் கூட நமக்கு மன திருப்தி முழுதாக கிடைக்கிறது. வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருத வேண்டும்.

 

பொன்மொழி 4:

 

புத்தர் கூறியது போல அன்றே கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று. ஆசைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு உங்கள் ஆசைகளை குறைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சி என்னும் திறவு கோல் உங்களிடம் தானாகவே வந்து சேரும்.

 

பொன்மொழி 5:

 

சுயநலம் என்னும் தூசியை அகற்றினால் தான் தெளிவு என்னும் கண்ணாடி நமக்கு தெரிய ஆரம்பிக்கும். கண்ணாடி போன்ற தெளிவான உள்ளத்தை அடைய சுயநலம் என்னும் தூசுகளை துடைத்து தெளிவையும்,

தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.

 

பொன்மொழிகள் 6:

 

நம் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் ஏறக் குறைய இருக்கக்கூடாது, சமநிலையாக இருக்க வேண்டும். பசி, தூக்கம், துக்கம், உடல், இன்பம், துன்பம் எல்லாமே கூடவோ, குறையவோ இல்லாமல் சரிசமமான அளவில் நாம் வைத்திருக்க வேண்டும்.

 

பொன்மொழி 7:

 

கோபம் ஒரு மனிதனை முட்டாள் ஆக்கி விடுகிறது. நிதானமாக யோசிக்கும் பொழுது தான் செய்யும் செயலில் அர்த்தம் உண்டாகிறது. கோபத்துடன் செய்யும் எந்த ஒரு செயலும் பயனற்றுப் போகிறது. மிகப்பெரிய பலவானையும் பலமிழக்கச் செய்யும் இந்த கோபத்தை தவிர்ப்பது நல்லது.

 

பொன்மொழி : 8

'நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்' என்று கூறுகிறார். ஒரு விஷயத்துக்காக நீங்கள் போராடாத பொழுது அந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. 'தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்: என்பது போல இறைவன் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து இருக்கிறார். இறைவன் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்பதை உணர வேண்டும்.

 

இந்த பொன்மொழியை ஒருவர் வாழ்வில் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

கிருஷ்ணர் : கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய எட்டு பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா? - குறிப்புகள் [ ] | Krishna : Let us know about the eight mottos that Lord Krishna spoke to Arjuna - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்