விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ பெருமாள் ]

Let us know about the three sins from which salvation is not possible - Notes in Tamil

விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா | Let us know about the three sins from which salvation is not possible

அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவருடைய கஷ்டம் தீரவே தீராது. மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம விதி பயன் என்பார்கள். கர்ம விதி பயன் கெட்டதை மட்டுமல்ல, நீங்கள் செய்த நல்லதையும் சேர்த்து தான் குறிக்கிறது. எதை விதைக்கிறோமோ! அதை தான் அறுக்கவும் முடியும். நல்லது செய்தால் நல்ல விதி பயனை பெறுவீர்கள். சரி, அப்படி என்றால் நாம் செய்த பாவங்களில் பெரிய பாவம் எது? எந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். 1. பெற்றோர்களை கைவிடுதல்: ‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று கூறுவார்கள். பிள்ளைகளுடைய மனம் பெற்றோர்களை ஏற்காவிட்டாலும், பெற்றோர்களுடைய மனம் பிள்ளைகளை சுற்றி தான் இருக்கும். இது இயற்கையாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். பெற்றோர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள். இப்படியான பெற்றோர்களை எந்த ஒரு மனிதன் மதிக்காமல், உதாசீனப் படுத்துகிறானோ? அவன் விமோசனமே இல்லாத பாவத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை வரும். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்யும் பாவங்களுக்கு எந்த பரிகாரம் செய்தாலும் விமோசனம் என்பது கிடையாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களை இந்த பூமிக்குக் கொண்டு வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள் தான். அதை மறந்து சுயநலமாக செயல்பட்டால் அதற்கான தண்டனையும் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள் 1000 காரணங்கள் கூறினாலும் அதை இறைவன் ஏற்பதில்லை. எனவே தண்டனையை ஏற்க ஆயத்தமாகுங்கள்!

விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

 

அகிலம்  காக்கும்  தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே

 

விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவருடைய கஷ்டம் தீரவே தீராது.

 

மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம விதி பயன் என்பார்கள்.

 

கர்ம விதி பயன் கெட்டதை மட்டுமல்ல, நீங்கள் செய்த நல்லதையும் சேர்த்து தான் குறிக்கிறது. எதை விதைக்கிறோமோ! அதை தான் அறுக்கவும் முடியும். நல்லது செய்தால் நல்ல விதி பயனை பெறுவீர்கள். சரி, அப்படி என்றால் நாம் செய்த பாவங்களில் பெரிய பாவம் எது? எந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

 

1. பெற்றோர்களை கைவிடுதல்:

 

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று கூறுவார்கள். பிள்ளைகளுடைய மனம் பெற்றோர்களை ஏற்காவிட்டாலும், பெற்றோர்களுடைய மனம் பிள்ளைகளை சுற்றி தான் இருக்கும். இது இயற்கையாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். பெற்றோர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள். இப்படியான பெற்றோர்களை எந்த ஒரு மனிதன் மதிக்காமல், உதாசீனப் படுத்துகிறானோ? அவன் விமோசனமே இல்லாத பாவத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

 

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்யும் பாவங்களுக்கு எந்த பரிகாரம் செய்தாலும் விமோசனம் என்பது கிடையாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களை இந்த பூமிக்குக் கொண்டு வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள் தான். அதை மறந்து சுயநலமாக செயல்பட்டால் அதற்கான தண்டனையும் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள் 1000 காரணங்கள் கூறினாலும் அதை இறைவன் ஏற்பதில்லை. எனவே தண்டனையை ஏற்க ஆயத்தமாகுங்கள்!

 

2. உயிரை வதைத்தல்:

 

எந்த ஒரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது தான் இறை நியதி. இறைவனால் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரையும், மனிதன் கொல்லக்கூடாது என்பது மனிதனுக்கு வகுக்கப்பட்ட விதி. இந்த விதியை மீறி ஒரு மனிதன், இன்னொரு உயிரை கொல்லும் பொழுது அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிரம்மஹத்தி தோஷம் நன்றி மறப்பவர்களுக்கும், பசுவை வதைப்பவர்களுக்கும், குரு துரோகம் செய்பவர்களுக்கு, அதர்ம வழியில் நடப்பது, சொத்தை அபகரிப்பது, பெற்ற தாயை அவமானப்படுத்துவது, உணவில்லாமல் பட்டினி கிடக்க செய்தது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு இந்த தோஷம் உண்டாகிறது.

 

இதில் பிற உயிரைக் கொல்லும் பாவம் புரிபவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவர்களுக்கு விமோசனம் என்பது கிடையாது. அந்தப் பிறவியில் அல்லது அதற்கு அடுத்த பிறவிகளில் அவருடைய வாழ்வு சாவதே மேல் என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதாக நிச்சயம் அமையும். அந்த அளவிற்கு வலி நிறைந்த வாழ்க்கையை தரக்கூடியது இந்த தோஷம்.

 

3. வார்த்தைகளால் காயப்படுத்துதல்:

 

ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல் என்பதும் பாவம் தான். இதைத்தான் திருவள்ளுவர் ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று கூறினார். நீங்கள் தீயைக் கொண்டு ஒருவரை காயப்படுத்தினால் கூட, அந்த காயம் சில நாட்களில் வலி போனதும் ஆறிவிடும். வார்த்தைகளால் ஒருவரை கொல்லும் பொழுது, அதன் காயம் உயிரே பிரிந்தாலும் ஆறுவதில்லை. அவசரபட்டு வார்த்தைகளை விட்டு விட்டு, என்னதான் மன்னிப்பு கேட்டாலும், பேசிய வார்த்தைகளை மீண்டும் சரி செய்துவிட முடியாது.

 

பேசியது பேசியது தான். அந்த வார்த்தைகள் காற்றில் அலைந்து கொண்டே இருக்கும். அவர்களுடைய மனதை விட்டு எப்பொழுதும் நீங்காது போய்விடும். இதனால் தான் ஒவ்வொரு வார்த்தைகளும் நிதானமாக பேச பழகிக் கொள்ள வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக இஷ்டத்திற்கு பேசினால், அந்த பாவ பயனை நீங்கள் தான் சுமக்க வேண்டியது வரும். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு பேரை வார்த்தைகளால் கடுமையாக நீங்கள் தாக்கினால், அதனால் வரும் துன்பங்களிலிருந்து மீள எந்தப் பரிகாரம் செய்தாலும் உங்களுக்கு விமோசனம் கிடைக்காது என்பது விதி.

 

இந்த மூன்று பாவங்களை செய்பவர்களுக்கு, அந்தப் பிறவியிலேயே அதற்கான தண்டனையும் கிடைத்து விடுகிறது. இந்த பாவங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க, எந்த மாதிரியான முயற்சிகள் நீங்கள் செய்தாலும், அதில் தோல்வி தான் கிடைக்கும்.

 

 கோவில் கோவிலாக சென்றாலும் கூட, எந்த தெய்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. எத்தனை பெரிய பரிகாரங்கள் செய்தாலும் அந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். இது தான் விதி.

 

இதை மாற்ற யாராலும் முடியவே முடியாது என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் வாழ்வில் நிம்மதியும் கிடைக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Perumal : Let us know about the three sins from which salvation is not possible - Notes in Tamil [ ]