இறைவன் இருக்கின்றாரா கடவுளுக்குக் கண்ணே இல்லையா காக்க கடவுள் வருவாரா பற்றி அறிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Let us know whether there is a God, whether God has an eye or not, and whether God will come to protect us - Notes in Tamil

இறைவன் இருக்கின்றாரா கடவுளுக்குக் கண்ணே இல்லையா காக்க கடவுள் வருவாரா பற்றி அறிந்து கொள்வோமா    | Let us know whether there is a God, whether God has an eye or not, and whether God will come to protect us

வாழ்வில் கஷ்டங்கள் நம்மை அழுத்தும்போது, ‘அந்தக் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லையா?’ என்றெல்லாம் வருந்துவோம். இப்படி வருந்துவோரைக் காக்க கடவுள் வருவாரா? புத்திசாலியான வாடிக்கையாளர் ஒருவர் முடி திருத்த சலூன் கடைக்குப் சென்றார். அங்கு இருந்த முடி திருத்துபவரும் பல விஷயங்களில் ஆர்வமுள்ளவர் என்பதால் அவருடன் பேசியபடி முடியை சீராக்கும் பணியை செய்தார். இடையில் அவர்களின் பேச்சு, ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா’ எனும் கருத்தில் வந்து நின்றது. முடி திருத்துபவருக்கு எப்போதும் கடவுள் நம்பிக்கை என்பது குறைவு என்பதால் ‘கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை’ என்கிறார் உறுதியாக. ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் இன்னும் கடவுள் தன்மையை உணரவில்லை போலும்’ இது அந்த புத்திசாலி வாடிக்கையாளர். ‘சரி, நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க அப்ப உங்களுக்கே தெரியும், கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இத்தனை பாகுபாடுகள்? ஏன் மனிதரிடையே பல வேதனைகளை அனுமதிக்க வேண்டும்?’ என்றார் சலூன்காரர். இதற்கு பதில் சொன்னால் இவர் புரிந்து கொள்ள மாட்டார். நம் சக்திதான் வீண்’ என்று உணர்ந்த புத்திசாலி பதில் எதுவும் தராமல் வெளியேறுகிறார். சலூன்காரர் முகத்தில் வெற்றிப் பெருமிதம். ‘கடவுளாவது ஒண்ணாவது’ என்ற முனகல் வேறு. புத்திசாலி கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவர் வருவதைப் பார்த்தார்.

இறைவன் இருக்கின்றாரா? கடவுளுக்குக் கண்ணே இல்லையா?’ காக்க கடவுள் வருவாரா? பற்றி அறிந்து கொள்வோமா?

 

வாழ்வில் கஷ்டங்கள் நம்மை அழுத்தும்போது, ‘அந்தக் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லையா?’ என்றெல்லாம் வருந்துவோம். இப்படி வருந்துவோரைக் காக்க கடவுள் வருவாரா?

 

புத்திசாலியான வாடிக்கையாளர் ஒருவர் முடி திருத்த சலூன் கடைக்குப் சென்றார். அங்கு இருந்த முடி திருத்துபவரும் பல விஷயங்களில் ஆர்வமுள்ளவர் என்பதால் அவருடன் பேசியபடி முடியை சீராக்கும் பணியை செய்தார்.

 

இடையில் அவர்களின் பேச்சு, ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா’ எனும் கருத்தில் வந்து நின்றது. முடி திருத்துபவருக்கு எப்போதும் கடவுள் நம்பிக்கை என்பது குறைவு என்பதால் ‘கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை’ என்கிறார் உறுதியாக.

 

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் இன்னும் கடவுள் தன்மையை உணரவில்லை போலும்’ இது அந்த புத்திசாலி வாடிக்கையாளர்.

 

சரி, நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க அப்ப உங்களுக்கே தெரியும், கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது.

 

கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இத்தனை பாகுபாடுகள்? ஏன் மனிதரிடையே பல வேதனைகளை அனுமதிக்க வேண்டும்?’ என்றார் சலூன்காரர்.

 

இதற்கு பதில் சொன்னால் இவர் புரிந்து கொள்ள மாட்டார். நம் சக்திதான் வீண்’ என்று உணர்ந்த புத்திசாலி பதில் எதுவும் தராமல் வெளியேறுகிறார்.

 

சலூன்காரர் முகத்தில் வெற்றிப் பெருமிதம். ‘கடவுளாவது ஒண்ணாவது’ என்ற முனகல் வேறு.

 

புத்திசாலி கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவர் வருவதைப் பார்த்தார்.

 

பொறிதட்ட மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம், ‘விஷயம் தெரிந்தவரே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் ஒருவர் கூட இந்த உலகத்தில் இல்லை’ என்றார்.

 

அதிர்ச்சியுடன் முடி திருத்துபவர், ‘அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்கு தான் உள்ளேன்.

 

என்னைப் போல் பலரும் சலூன்கள் திறந்து வைத்துக் காத்திருக்கிறோம்.

 

உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

 

இல்லை அப்படி முடி திருத்துபவர் என்பவர் ஒருவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்” என்று அவரை நோக்கி காட்டினார்.

 

சலூன்காரர் யோசித்தவாறே “முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான்.

 

அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?” எனக் கேட்ட முடி திருத்துபவரை நோக்கி, “மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா. அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார்.

 

மக்கள் அவரைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? சொல்லுங்கள்’ எனக் கேட்க, முடி திருத்துபவர் பதிலேதும் அறியாமல் வாயடைத்துப் போனார்.

 

புத்திசாலி பக்தர் முகத்தில் இப்போது பெருமிதம் வந்தது.

 

ஆகவே, கடவுளைக் காண வேண்டும் என்றால் நாம்தான் அவரைத் தேடிப் போய் சரணடைய வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : இறைவன் இருக்கின்றாரா கடவுளுக்குக் கண்ணே இல்லையா காக்க கடவுள் வருவாரா பற்றி அறிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Let us know whether there is a God, whether God has an eye or not, and whether God will come to protect us - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்