வாழ்வை வளமாக்க, (1) அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். (2) உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்வை வளமாக்கும் வார்த்தைகள்:
வாழ்வை
வளமாக்க,
(1)
அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
(2)
உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார்
என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
(3)
மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய
இறைவனை தயவுசெய்து நிந்திக்காதீர்கள்.
(4)
உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள்
உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
(5)
எவரையும், எதற்காகவும், எந்த
சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
(6)
உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள்.
உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
(7)
இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்
என்பதை மனதார உணருங்கள்.
(8)
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
(9)
உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில்
பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
(10)
உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி
விடுங்கள்.
மறதி
ஒரு அருமருந்து.
அதை கடைபிடியுங்கள்.....
இரண்டு
விஷயங்களை மறந்துவிடுங்கள், இரண்டு விஷயங்களை நினைவில்
நிறுத்துங்கள்.
மனித
நேயம்( Humanity) வளர்த்தல்தான்
ஆன்மீகத்தின் நோக்கம். இதற்கு முதலில் ஒவ்வொரு மனிதனும் இரண்டு விஷயங்களை மறக்க
வேண்டும் & இரண்டு விஷயங்களை அடிக்கடி
நினைவில் இருத்த வேண்டும். a. தனக்கு
இழைக்கப்பட்ட தீங்கை மறக்க வேண்டும்.( forget & forgive).
b. மற்றவர்களுக்கு
நாம் செய்த நன்மைகளை (உதவிகள்) மறந்து விடவேண்டும்.
நாம் பிறர் தீமைகளை மன்னிக்கவில்லை என்றால், அதை
மறப்பது கடினம். அப்படி அதை மறக்காமல் இருந்தால், நம்முள்
அவர்கள் மீதான வெறுப்பை வளர்க்க தொடங்குவோம், அவர்களை
பழிவாங்க நினைப்போம். இது நம் மன
நிம்மதியை அழிக்கும். ஆத்ம பலத்தை குறைக்கும்.உடல் ஆரோக்கியத்தையும்
பாதிக்கும். ஆன்மீக வளர்ச்சியை தடுக்கும். நாம் செய்த நன்மைகளை, உதவிகளை
மறக்காமல் இருந்தால் , நாம் செய்த உதவுகளுக்கு, கைமாறு
எதிர்பார்ப்போம். இந்த எதிர்பார்ப்பு, நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்.
இதனால் மன அழுத்தம் உண்டாகும். மனோபலத்தை குறைக்கும். மனத்தூய்மைக்கு இந்த
இரண்டு விஷயங்களை நாம் மறக்க வேண்டும் .
தெளிவு அறிவு
ஞானம் . . .
*யாரிடம் பேசவேண்டும்
என்பது "தெளிவு"*
*எதைப் பேசவேண்டும்
என்பது "அறிவு "*
*எப்போது பேசவேண்டும்
என்பது "ஞானம் "*
வாழ்க்கையில்
முறையான வழியில் முன்னேற வேண்டுமென்றால்...
*முதலில்
மட்டம் தட்டிக்
கொண்டிருப்பவர்களையும்..*
ஒவ்வொரு
செயலிலும் குறையை மட்டுமே காண்பவர்களையும்
*உனது
தொடர்பில் இருந்து விலக்கி விடுங்கள்.*.
விலகிச்
சென்றுவிடுங்கள்...
உங்களுக்கான
முன்னேற்றப் பாதை வெளிச்சமாய்த் தெரியும்...
*பெருமைக்காக
வாழாதீர்கள்.
மன
நிம்மதிக்காக வாழ்ந்து பாருங்கள் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.*
*சந்தோஷம்
என்பது நீங்கள் வாழும் இடத்தில் இல்லை.
நீங்கள்
வாழும் விதத்தில் தான் உள்ளது.*
*கனவுகள்
நினைவாகுமா, சொல்லும், செயலும்
ஒன்றாக இருந்தால் நிச்சயம் நினைவாகும்.
நல்ல
எண்ணங்களோடு
கனவு
காணுங்கள். வெற்றி நிச்சயம்.*
*யாரோ
போல வாழ வேண்டும்.
யாரோ
போல சம்பாதிக்க வேண்டும்.
யாரோ
போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுவோம்.*
*ஏனென்றால்
நாம் ஏற்கனவே ஒரு மிகச்சிறந்த படைப்பு.
யாருக்காகவும்,
யாரையும்
பார்த்து நம்மை மேம்படுத்தத் தேவையில்லை.*
இரண்டு
ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில்
எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில்
ரயில் அடிக்கடி வரும்...
ரயில்
வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக்
கொண்டிருக்கிறது.
ரயில்
வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில்
ரயில் வருகிறது....
தூரத்தில்
இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு
அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள்
யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி
ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக
பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக
நாம் என்ன செய்வோம்...?
ஒரு
குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..
ஏனெனில்
10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை
தான் என்றோம்...
இன்றைய
சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில்
வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது
ரயில்
வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது
இன்றைய
சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான்
இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
"Fault makers are majority,
even they protected in most situations"
இன்றைய
நிலை....
"நல்லதையே
தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...
தவறையே
கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
படித்ததில்
பிடித்ததால் பகிர்கிறேன்...
உன்னால்
முடியும்...
கடவுள்
யாரையும் கைவிடுவதில்ல..
ஒரு
நாள் நான் முடிவு செய்தேன்
இந்த
வாழ்க்கையை துறந்துவிடுவது என்று ஆம்,எனது வேலை,
எனது
உறவுகள், என்
இறையாண்மை
அனைத்தையும்
விட்டுவிடுவது
என்று.
துறவிகள்
போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.
அப்போது…
கடைசியாக
இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்..
“கடவுளே, நான்
என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின்
பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…
ஒரு
முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி
வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”
ஆமாம்
என்று நான் பதிலளித்தேன்.
நான்
புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து
அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.
அவைகளுக்குத்
தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று
என அனைத்தையும் வழங்கினேன். புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம்
இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.
ஆனால்
அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான்
கைவிடவில்லை.
இரண்டாவது
ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும்
மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை
கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.
மூன்றாவது
ஆண்டும், நான்காவது
ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.
ஐந்தாம்
ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு
வெளியில் வந்திருந்தது.
அது
புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.
ஆனால்
6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக
இருந்தன” என்றார்.
இத்தனை
ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை. தான் வாழ்வதற்குத் தேவையான
அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.
பின்னர்தான்
தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.
எனது
படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன்.
அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று
சாந்தமாக பதிலளித்தார்.
மேலும்
கடவுள் என்னிடம்,
உனக்கு
ஒன்று தெரியுமா குழந்தாய்,
நீ
எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ
அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான்
விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.
மற்றவர்களுடன்
உன்னை
ஒருபோதும்
ஒப்பிட்டுப் பார்க்காதே.
ஒருவேளை
அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்.. என்றார்.
மூங்கிலும், புதர்
செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை
புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இறுதியாக,
உன்னுடைய
நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்
நான்
கேட்டேன், என்னால் எவ்வளவு தூரம் வளர
முடியும்?
மூங்கில்
வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.
எவ்வளவு
தூரம் மூங்கில் வளரும் என்று கேள்வி எழுப்பினேன் நான்.
அதனால்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.
அதனால்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.
ஆம்.
அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று
கூறி மறைந்தார்.
நான்
காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே
திரும்பினேன்.
ஆம், இது
உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்...
இலக்குகள் அடைவதற்கு...!
உங்கள்
இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம்
இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான
நம்பிக்கை தான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும்...
அதே
நேரத்தில் இலக்கு குறித்தத் தெளிவும் வேண்டும். இலக்குகள் இல்லாத யாரும்
சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்...
இலக்குகளைத்
தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை
அடைவதற்கான முயற்சிகளை சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.
இதுபோன்ற பல பயனுள்ள தன்னம்பிக்கை
தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : வாழ்வை வளமாக்கும் வார்த்தைகள் - ஒரு குட்டி கதை [ ஊக்கம் ] | Encouragement : Life Enriching Words: - A short story in Tamil [ Encouragement ]