வாழ்க்கை அழகானது!

பணி

[ Encouragement ]

Life is beautiful! - task in Tamil



எழுது: சாமி | தேதி : 26-09-2023 08:56 pm
வாழ்க்கை அழகானது! | Life is beautiful!

வாழ்வு ஒருமுறை! வாழ்த்தட்டும் தலைமுறை!

வாழ்க்கை அழகானது!


வாழ்வு ஒருமுறை!

வாழ்த்தட்டும் தலைமுறை!


💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

அழகானது..

 

எரிவதில் தீபம் அழகானது.......!!!

 

:சுடுவதில் சூரியன் அழகானது.......!!!

 

சுற்றுவதில் புவி அழகானது.......!!!

 

வளர்வதில் பிறை அழகானது.......!!!

 

மின்னுவதில் விண்மீன் அழகானது........!!!

 

தவழ்வதில் குழந்தை அழகானது........!!!

 

குதிப்பதில் கடல் நீர் அழகானது......!!!

 

விழுவதில் அருவி அழகானது..........!!!

 

உறைவதில் பனி அழகானது........!!!

 

விளைவதில் பயிர்கள் அழகானது.......!!!

 

தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது...!!!

 

குளிர்ச்சியில் தென்றல் அழகானது........!!!

 

உழைப்பதில் வியர்வை அழகானது.......!!!

 

பாடுவதில் குயில் அழகானது.........!!!

 

பறப்பதில் புறா அழகானது........!!!

 

கலையினில் அறுபத்து நான்கும் அழகானது......!!!

 

உறவினில் நட்பு அழகானது........!!!

 

மொழிகளில் மழலை மொழி அழகானது.......!!!

 

மலர்களில் ரோஜா அழகானது......

 

மலர் வாசனையில் மல்லிகை அழகானது....

 

கலர்களில் வெண்மை அழகானது.....

 

கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது...

 

இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......

 

எப்போதும் தாய்மை அழகானது........!!!

 

இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது.......!!!

 

அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......!!!

 

குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை போலவே, அதை அடையும் பாதையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.

 

பணி:

 

பணிபுரியும் இடங்களில்

1. யாரையும் அதீதமாக நம்பாதீர்கள்.  ஆனால் எல்லோரையும் மதியுங்கள்.

 

2. பணியிடத்தில் நடப்பதை, அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடத்து கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கோ சுமந்து வர வேண்டாம்.

 

3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.

 

4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

 

5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரேனும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

 

6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள். அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள், கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்.

 

7. எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.

 

8. நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம்.

சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

 

9. அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

 

10. இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை.


வாழ்க்கையில் மூன்று விஷயங்களை விட்டு விடாதீர்கள்! என்று தனது மகனுக்கு பெற்றோர்கள் சொன்னது :

 1 ) சிறந்த உணவை உண்ண வேண்டும் .

 2 ) சிறந்த படுக்கையில்  தூங்க *வேண்டும் .

 3 ) சிறந்த வீட்டில் வாழ வேண்டும்.


மகன் கேட்டான் நாம் ஏழைகள், நான் எப்படி அவ்வாறு செய்ய முடியும் ?

பெற்றோர்கள் கூறினார்கள்

பசிக்கும் போது மட்டும் சாப்பிட்டால், என்ன சாப்பிடுகிறாயோ அதுவே சிறந்த உணவு.

 

நிறைய வேலை செய்து சோர்வாக தூங்கினால், அந்த படுக்கைதான் சிறந்த  படுக்கை ..

 

மக்களிடம் அன்பாக *நடந்து கொண்டு, அவர்களின் இதயங்களில் நீ   குடியிருந்தால் அதுதான் நீ  வாழும் வீடுகளில் சிறந்த வீடு என்று அந்த பெற்றோர்கள் சொன்னார்கள். அது தான் உண்மையும் கூட.....


உங்கள் கனவுகளைப் பார்த்து நீங்களே பயப்படாதீர்கள். மாறாக உங்களை பயமுறுத்தும் பெரிய கனவுகளைத் தொடர்ந்து காணுங்கள். பயம் வருகிறதா அதையே திரும்ப திரும்ப செய்து வாருங்கள். பயத்தை எதிர்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள்! பயம் என்று அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று தோன்றும்.

 

ஓடும் உலகில், ஓடும் மனிதா! நில்!_

 

ஓயாது ஓடி அடைய நினைக்கும்

உன் தேவைகள் தான் என்ன?    

 

பட்டியல் நீளுகிறதோ?

 

அதை,

அவசியம், அத்யாவசியம், அனாவசியம்,

என்று வகை பிரி!

 

அந்தஸ்துக்காக

ஆசைக்காக, ஆடம்பரத்துக்காக

பகட்டுக்காக, படோடாபத்துக்காக,

ஜம்பத்துக்காக, ஜபர்தஸ்துக்காக,

பேருக்காக, புகழுக்காக,

வயிற்றுப் பசிக்காக,

நாவின் ருசிக்காக,

குடும்ப நலனுக்காக,

சுய மரியாதைக்காக,

என மேலும் வகை பிரி!

 

ஆரோக்கியமான உடல்,

அமைதியான மனம்,

தெளிவான தோற்றம்,

அன்பான உறவு,

ஆனந்தமான வாழ்வு..

இவைகள் தானே உன் தேவைகள்?

 

இவைகளை கொடுக்கின்றதா,

நீ வாழும் வாழ்க்கை முறை?

 

தேவை என்ற பெயரில்,

வீட்டில், சொல்ப உபயோகப் பட்டு,

அடைந்து கிடக்கும்

பொருட்களை பார்!

நிரம்பி வழியும் அலமாரியை பார்!

துணி மணிகளைப் பார்!

 

இவையெல்லாம்

மோகத்தால் உந்தப்பட்ட,

போகத்திற்கு ஆட்பட்ட,

விரயங்கள் என்று காண்பாய்!

 

பகட்டிற்கும், ஆடம்பரத்திற்கும் அடிமைபட்டு,

மாத தவணையில் வாங்கிய

பொருட்களைப் பார்!

 

இவையெல்லாம் ஆபத்திற்கோ, அவசரத்திற்கோ,

சமய சந்தர்ப்பத்திற்கோ,

உதவாது என காண்பாய்!

 

வீண் ஜம்பத்துக்கும், ஜபர்தஸ்துக்கும் ஆளாகி,

அவனைப் போல், இவனைப் போல் வாழ

செலவழித்த கணக்கைப் பார்!

 

உன்னைப் போல் நீ வாழவில்லை,

உனக்காகவும் நீ செலவழிக்கவில்லை,

எல்லாம் இன்பத்தை போல் தெரிந்த

கானல் நீரெனக் காண்பாய்!

 

நீ சம்பாதிப்பது,

உன் அவசிய, அத்யாவசிய, தேவைகளுக்கு போதும் என்று காண்பாய்!

 

இந்த அலைச்சலும், மன உளைச்சலும், வீண் பகட்டிற்காகவும், அந்தஸ்திற்காகவும், போலி கௌரவத்திற்காகவுமே, என உணர்வாய்!

 

ஆரோக்கியத்தை பணயம் வைத்தா,

நாவின் சுவை தேடுவது?

 

கடன் வாங்கியா காற்று வாங்குவது?

 

தூக்கத்தை விற்று பஞ்சு மெத்தை

வாங்கி என்ன பயன்?

 

ஏ மனிதா!

இதனை எண்ணி,

உன்னை சீர் செய்து கொள்!

 

உன் மன அமைதிக்கு பங்கம் வராத

வாழ்வை வகுத்துக் கொள்!

 

உன் வாழ்க்கை உன் பிடியில் இருக்கட்டும்!

இடியாப்ப சிக்கல் போல எவ்வளவு பிரச்சினை வந்தாலும், ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து விடுவிக்க வேண்டும்.

 

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் கோபம், விரக்தி, ஈகோ, சோகம், சோம்பலைத் தவிர்த்து விட வேண்டும்,

 

உற்சாகம், ஊக்கம்,  சுறுசுறுப்பு, உழைப்பு தான் உயர்வு தரும்,

 

உணர்வு ரீதியாக வரும் பிரச்னைகளை மிகுந்த நிதானத்துடன் கையாளுங்கள்.

 

அமைதியான மனநிலை வரும் வரை பொறுமையைக் கடைபிடியுங்கள்,

 

வெற்றி வரும் போது ஆணவமும், அகங்காரமும் உடன் இருக்கக் கூடாது

 

தோல்வி பெறும் போது முயற்சியையும் நம்பிக்கையையும்

விடக் கூடாது,

 

வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல, மாற்றம் வரும் ஏற்றம் தரும்.

 

நம்பிக்கையோடு

நீ இருந்தால் வெற்றி நிச்சயம்! அது சத்தியம்!

வாழ்க வளமுடன்.

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

Encouragement : வாழ்க்கை அழகானது! - பணி [ Encouragement ] | ஊக்கம் : Life is beautiful! - task in Tamil [ ஊக்கம் ]



எழுது: சாமி | தேதி : 09-26-2023 08:56 pm

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்