51. மனைத்தக்க மாண்புணடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
வாழ்க்கைத் துணைநலம் 51. மனைத்தக்க மாண்புணடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்புகள் உடையவளாகத் திகழ்ந்து கணவனது வருவாய்க்கு தக்கவாறு வாழ்பவளே நல்வாழ்க்கை துணையாவாள். 52. மனைசாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். மனையறத்திற்கேற்ற நற்குண, நற்செயல்கள் மனைவியிடம் இல்லை. ஆனால் வாழ்க்கை எத்தகைய பெருமை உடையதாயினும் பெருமை இல்லையாம். 53. இல்லதென் இல்லவன் மாண்பானால்: உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? மனைவி மாண்புடையவளானால் இல்லாதது இல்லை, இல்லவள் தீயவளானால், இல்லத்தில் இருப்பதும் இல்லை. 54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? கற்பென்னும் மனவலிமையுண்டாகப் பெற்றால் அவளைவிடப் பெருமைக்குரியது வேறில்லை. 55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. வேறு தெய்வங்களைத் தொழாதவளாகிக் கணவனைத் தொழுபவளாக இருந்தால், 'பெய்' என்றால் மழை பெய்யும். 56. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலான் பெண். மனவுறுதியால் தன்னைக் காத்துக் கொண்டு தன்னைக் கொண்டவனையும் காத்து இல்லறத்தையும் காத்து சோர்வில்லாதவளே நல்ல மனைவியாவாள். 57. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. மகளிரைச் சிறைவைத்துக் காக்கும், பாதுகாப்பு பயனற்றது. மகளிரது மனவுறுதியாகிய பாதுகாப்பே மேலானது. 58. பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. நல்ல கணவனை அடைந்து வணங்கப் பெற்றால் தேவர்களாலும் வணங்கப் பெறுவார்கள். 59. புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை புகழைத்தேடிக் கொடுக்கும் மனைவியைப் பெறாதவர் தன்னை இகழ்வார் முன் ஆண் சிங்கம் போல் பெருமிதமாக நடக்க முடியாமல் போவார்கள். 60. மங்கலம் என்ப மனைசாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மனைவியின் மாண்பே மனையறத்திற்கு மாட்சிமையளிப்பது, அதற்கு நல்ல அணிகலன் போன்றவள் நல்ல மக்களேயாவார்கள். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம்: 6
திருக்குறள்: பொருளடக்கம் : வாழ்க்கைத் துணைநலம் - அதிகாரம்: 6 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Life support - Authority: 6 in Tamil [ Tirukkural ]