வாழ்வியல் தந்திரங்கள்

ஆசை, பேராசை என்றால் என்ன?.

[ ஊக்கம் ]

Life tricks - What is desire and greed? in Tamil

வாழ்வியல் தந்திரங்கள் | Life tricks

"தியானம் என்பது சில மணிநேரப் பயிற்சி அல்ல. அது ஒவ்வொரு நொடியும் நம்மோடு கலந்திருக்க வேண்டிய வாழ்வியல்..."

வாழ்வியல் தந்திரங்கள்:


"தியானம் என்பது

சில மணிநேரப் பயிற்சி அல்ல.  அது

ஒவ்வொரு நொடியும்

நம்மோடு கலந்திருக்க

வேண்டிய வாழ்வியல்..."

தியானக் கலை முகத்தை களையாக்கும்.

*தியானம் செய்யும்போது எண்ண இடையூறுகளை தவிர்ப்பது எப்படி...???என்று கேட்கும் நண்பர்களுக்காக ஒரு எளிமையான ஜென் தியானம்.*

 

*ஜென் தியானம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது.*

 

*உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது.*

 

*எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.*

 

*இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.*

 

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

 

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

 

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

 

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும்.

 

ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா?

 

ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

 

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள்.

 

ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

 

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

 

8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம்.

 

சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள்.

இது தான் சரியான மனநிலை.

 

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும்.

 

அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் தியானத்தின்  குறிக்கோளே அது தான்.

"உங்களைப் பற்றி

உங்களுக்குள் இருக்கும்

சுய அபிப்பிராயம் என்னவோ?

அதன் பிரபலிப்பே

உங்கள் வாழ்க்கை..."

நம் வாழ்க்கை அழகாக அமைய வேண்டுமெனில், அதற்கு இன்றியமையாத தேவை நமது மனதின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்கிற மூன்றும் தான்.

ஒவ்வொரு மனிதனின் தேடலும், பயணமும் இதில் ஒன்று, இரண்டு அல்லது மூன்றையும் தேடியே அமைகிறது. 

இது மூன்றும் சரியாகப் பெற்ற நபர்கள் வெகு சிலராகவே உள்ளனர்.

இந்த மூன்றையும் சரியாகப் பெற வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதற்கான ஒரு கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

அந்தக் கலையின் உதவியால் உங்கள் மனம் ஆரோக்கியமாக மாறும், உங்கள் உடல் ஆரோக்கியமாக மாறும், உங்கள் பொருளாதார சூழல் மேம்படும்.

உண்மையைக் கூற வேண்டுமெனில், உங்கள் வாழ்க்கை அழகாக மாறும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் கொண்டாடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் நீங்கள் முழுமையாக இரசித்து இரசித்து வாழத் தொடங்குவீர்கள்.

உங்கள் பழைய பதிவுகள், பழைய கவலைகள், பழைய பிரச்சினைகள் அனைத்தையும் மாற்றி, உங்கள் வாழ்க்கையை நீங்களே புதுபித்துக்கொள்ளும் முறையை அதில் கற்றுக்கொள்ளலாம்.

"பதிவுகள் நம்மை

ஆளாத வரை

நாம் பிரபஞ்சத்தையே ஆளலாம்

அன்பின் வழியில்..."

"யோகம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியல்ல இயற்கையுடன் ஒன்றினையும் யுக்தி...."

மனம் போலவே வாழ்வு என்பது தெரிந்தும் மனதை சரிசெய்யாமல் துன்பத்திலேயே வாழும் நமது அறியாமையும், சோம்பேறித்தனமும் தான் நம் வாழ்க்கையின் முதல் எதிரி...

அது யாராக இருந்தாலும் சரி, அவர் கூறுகிறார் என்பதற்காகவே அது சரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் கண்மூடித்தனமாக நம்பினால்?

நீங்களும் ஒரு

நவீன அடிமையே...!

"எந்த ஒன்றாக இருந்தாலும் சரி, அதற்காகவே நம்மை அர்ப்பணிக்கும் பொழுது, அதை நாம் அடைந்தே தீருவோம்.

இது மாறாத பிரபஞ்ச விதி..."

வெற்றி பெறுவது தற்காலிக மகிழ்ச்சி சார்ந்தது மட்டுமே. ஆனால், அந்த வெற்றி எதில் எதற்காக மற்றும் எப்படி என்பது தான் தொடர் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி (மன நிறைவு) சார்ந்தது...

 

நம்மை விட யார் நன்றாக செய்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள்..

முன்பை விட நன்றாக செய்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்..

நமக்கு நிகர் நாமே...

 

ஆசை, பேராசை என்றால் என்ன?..*

''ஆசை'' (want) என்பது தமக்கு எது தேவையோ அதனைக் கொண்டு வருதற்கான உணர்வாகும்.

பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை தான் ''பேராசை''...

ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதிகமான பணத்தை விரும்புவது தான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும்.

அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசை கூட பேராசையாக அமைந்து விடும்.

முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும்.

பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைவிட முக்கியமானது உள்ளன.

பொருளாதாரத்துக்காக அந்த முக்கியமானவைகளை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

ஒரு செயலில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசை தான்.

சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும் போது அதில் பங்கு பெறாவிட்டால் சமுதாயத்தைப் பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசை தான்.

குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்க நம்மிடம் வசதி இருக்கும் போது அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தால் அது கூடப் பேராசை தான்.

சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களுடன் பணம் மோதும் போது நாம் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்.

ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசை தான்.

கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகி விடும்.

 *ஆம்., தோழர்களே.,*

 *அளவில்லாத ''பேராசை'', நமது குணங்களை எல்லாம் அழித்து விடும்.*

 *உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது.*

 *எந்தப் பொருளின் அதிக ஆசை இல்லையோ, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை.✍🏼🌹...*

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

 தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

 கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

 வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

 இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

 “உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

 “இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

 “எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

 “உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

 இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

 இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

 இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

 கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

 அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...*

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...?

மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்... வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....

Feel the  power of  positive  Thinking...

"That is the BIGGEST SECRET OF LIFE..." 

வாழ்த்துக்கள்!!

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

ஊக்கம் : வாழ்வியல் தந்திரங்கள் - ஆசை, பேராசை என்றால் என்ன?. [ ஊக்கம் ] | Encouragement : Life tricks - What is desire and greed? in Tamil [ Encouragement ]