பிரம்ம முகூர்த்த நேரத்தில் காமாட்சி விளக்கு ஏற்றுங்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Light the kamakshi lamp during brahma mukurtha time - Notes in Tamil

பிரம்ம முகூர்த்த நேரத்தில் காமாட்சி விளக்கு ஏற்றுங்கள் | Light the kamakshi lamp during brahma mukurtha time

பொறிக்கப்பட்ட பெரிய உலோக விளக்கு. உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கின. தினமும் காமாட்சி அம்மனை வழிபட்டாலே ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. தினமும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கோலத்தின் மேல் ஆரத்தி தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். விளக்கில் நெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு ஏற்ற வேண்டும்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் காமாட்சி விளக்கு ஏற்றுங்கள்!!!

 

பூஜை அறையில் உள்ள மிக முக்கியமாக வழிபாட்டுப் பொருளாகக் கருதப்படுவது காமாட்சியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட பெரிய உலோக விளக்கு.

 

உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன்.

 

அவர் அப்படி தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கின.

 

தினமும் காமாட்சி அம்மனை வழிபட்டாலே ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

 

தினமும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கோலத்தின் மேல் ஆரத்தி தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும்.

 

விளக்கில் நெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு ஏற்ற வேண்டும்

 

இந்த விளக்குக்கு முன்னர் நீங்கள் அமர்ந்து உங்களுடைய மனக் கவலைகளைப் போக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் விளக்கை கையெடுத்து வணங்கிவிட்டு ஊதுவத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளவேண்டும்.

 

இவ்வாறு செய்யும்போது உங்கள் வீட்டுக்கு காமாட்சியம்மன் சகல செளபாக்கியங்களையும் கொடுப்பாள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : பிரம்ம முகூர்த்த நேரத்தில் காமாட்சி விளக்கு ஏற்றுங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Light the kamakshi lamp during brahma mukurtha time - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்