மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார்.
திருமால் மார்பில் லிங்கம்
மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால்,
பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர்
விஷ்ணு, மார்பில்
சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன்
தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு
மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாகச் சொல்கிறார்கள். இவரது
கையில் தாரை வார்த்துக்கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கிறது.
பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால்,
இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷபூஜை நடக்கிறது.
அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில்
இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில்
நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.
இது ஊஞ்சல் மண்டபத்திற்கு வடபுறம் அமைந்துள்ள புண்ணிய
தீர்த்தமாகும். இங்குச் சிவபெருமானே நீர் வடிவனாயினன். பிரமன் பொன் மலரோடு
வந்தெழுந்தனன். இத்தடாகம் அதனால் பொற்றாமரையாயிற்று. இப்பொய்கையின் நாலாப்பக்கமும்
கற்படித் துறைகளும் சுற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.
இதன் கீழ்ப்புறம் படித்துறை மண்டபம்,
படித்துறைகள் திருவாடுதுறை ஆதீனத்தாலும்,
மேல்புறம் வடபுறம் மேல்பாதி படித்துறைகள் மண்டபங்கள் கி.பி. 1756இல் மகமதீசு புகான் அதிகாரியாக விளங்கிய வேங்கிட கிருஷ்ண
முதலியாராலும், வடபுறம் கீழ்ப்புறம்
பாதி படித்துறையும் மண்டபமும், ஆயம் தானப்ப முதலியாராலும் அமைக்கப்பட்டன.
இன்றைக்குச் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு
கற்பூரப்பணி விடை சிவசூரிய பரதேசியாரின் பெரும் முயற்சியால் இந்தப் படித்துறைகள்
மாற்றிப் புதுப்பிக்கப்பட்டன. திருநெல்வேலி மேல ரத வீதியில் உள்ள சுந்தரத் தோழப்
பிள்ளை வீடு முதல் மடை வைத்து வாய்க்கால் நீர் இப்பொய்கைக்குக் கொண்டு வரப்பட்டு,
பின் கல்லத்தி முடுக்கு வழியாக நகர்க்குக் கீழ்ப்புறத்தில்
உள்ள தெப்பக் குளத்திற்குக் கொண்டு போகப்படுகிறது. இப்பொற்றாமரையில் மாசிமக நாளில் திருநாவுக்கரசு நாயனார்
தெப்ப விழா நடைபெறும். இப்பொய்கை அருந்திரு விளையாடல்களுக்கு இடமானதால் இதில்
நீராடி சந்தியா வந்தனம் செய்து, தடாகத்தின் மேல்புறம் அமர்ந்திருக்கும் பொற்றாமரைப்
பிள்ளையார், வாணி
தக்கணாமூர்த்தி, பால்
வண்ணநாதர் இவர்களை வழிபாடு செய்து, அம்மன் ஆலயத்துள் செல்ல வேண்டும் என்பது மரபாக உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : திருமால் மார்பில் லிங்கம் - அம்பிகைக்குப் பிரதோஷம், பொற்றாமரை [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Lingam on Thirumal's chest - Good luck to Ambika, Pottamarai in Tamil [ spirituality ]