காவிரிக் கரையில் காசிக்கு நிகராக 6 சிவத்தலங்கள் உள்ளன. அவை: திருவிடைமருதூர், திருவையாறு, திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மயிலாடுதுறை.
மனநோய் தீர்க்கும் மகாலிங்க பெருமான் காவிரிக் கரையில் காசிக்கு நிகராக 6 சிவத்தலங்கள் உள்ளன. அவை: திருவிடைமருதூர், திருவையாறு, திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மயிலாடுதுறை. இவற்றில் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க பெருமான் கோவில் மனநோய் பாதிப்பை நீக்கும் திருத்தலமாக திகழ்கிறது. இங்கு இறைவனாக மகாலிங்க பெருமானும், இறைவியாக பெருநலமாமுலையம்மையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகின்றனர். சுமார் 1200 ஆண்டுகள் பழமையும், சிறப்பும் வாய்ந்த இத்தலத்தின் சிறப்புகளை தேவார பாடல் ஆசிரியர்களான, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தியாவில் மருதமரத்தை தலவிருட்சமாக கொண்டு 3 கோவில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்று அழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இந்த இரண்டு தலத்திற்கு நடுவே இத்தலம் அமைந்துள்ளதால் இப்பகுதி திருவிடைமருதூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இத்தலம் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர் ஆகிய 4 சிவாலயங்களுக்கும் நடுவில் அமைந்துள்ளதால், பஞ்சலிங்க தலம் என்றும் போற்றப்படுகிறது. மனநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால், அந்தப் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்பதால் அந்த பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் இங்கு அதிக அளவில் வந்து குணம் பெற்றுச் செல்கிறார்கள். உமாதேவியை நினைத்து அகத்தியர் மற்றும் முனிவர்கள் திருவிடைமருதூரில் கடும் தவம் மேற்கொண்டனர். பல நாட்கள் தவம் இருந்தும் தேவியின் அருள் கிட்டாததால் மிகவும் மனம் வருந்தினார் அகத்தியர். இறுதிவரை தேவியை காண முடியாதோ என நினைத்தார். நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏன் காட்சி தரவில்லை என்று மனமுருக தேவியிடம் வேண்டினார். அகத்தியர் மனம் வருந்துவதை தாங்க முடியாத தேவி, இறைவனிடம், எதற்கு இந்த திருவிளையாடல், அகத்தியர் மனம் வருந்துவதுதான் உங்களது விருப்பமா?' என்று கேட்டார். அதற்கு இறைவன், நீ அங்கு சென்று அகத்தியருக்கு காட்சி கொடு, என்று அருளினார். இறைவனின் அருளாசிப்படி தேவியும் புறப்பட்டு சென்றார். ஆனால் இறைவி செல்வதற்கு முன்பு பெருமான் திருவிடைமருதூர் வந்து தங்கினார். அகத்தியர் மற்றும் முனிவர்கள் தவம் செய்யும் இடத்தில் அம்பிகை தோன்றினார். அம்பிகையின் வருகையை கண்டு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். முனிவர்கள் அம்பிகையிடம், தாயே, இறைவனையும் நாங்கள் கண்டு வணங்க வேண்டும் என்று வேண்டினர். அதற்கு அம்பிகை, உங்கள் எண்ணம் நிறைவேறும். நானும் உங்களுடன் சேர்ந்து இறைவனைக் காண தவம் செய்கிறேன் என கூறி அவர்களுடன் இணைந்து தவத்தில் ஈடுபட்டார். இவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜோதி வடிவாய் தோன்றினார். பின்னர் அனைவரும் காணும் வகையில் லிங்கவடிவமாக காட்சியளித்தார். அப்போது முனிவர்கள், நாங்கள் காணும் வகையில் முழு வடிவத்துடன் காட்சி அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினர். அவர்களின் வேண்டுகோளின்படி மான் மழுவுடன், தலையில் பிறையணிந்து சிவபெருமான் காட்சயளித்தார். இத்தலத்து லிங்கத்தை ஒருநாள் பூஜித்தாலும், கல்வி, செல்வம் ஆகிய அனைத்து செல்வங்களையும் அளிப்போம் என்றும் அப்போது அருளிய சிவபெருமான், அந்த லிங்கத்தை தாமே பூஜித்து சிறப்பு சேர்த்தார். இதனை கண்ட அம்பிகை, எதற்காக தங்களை. தாங்களே பூஜித்தீர்கள் என்று கேட்டார். முனிவர்கள் எம்மை பூஜிக்க மறந்தனர். அவர்கள் செய்த தவறை அவர்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்தேன் என்றார். முனிவர்களும் தங்களது தவறை உணர்ந்து, இறைவனை பூஜை செய்து இறைவனின் அருளை பெற்றதாக கூறுகிறது இக்கோவில் தலவரலாறு. பாண்டிய நாட்டு மன்னனான வரகுண பாண்டியனுக்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருநாள் வரகுணபாண்டியன் வேட்டைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் அந்தணர் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மேல் மன்னன் வந்த குதிரை ஏறியது. இதில் அவர் இறந்தார். இந்த செயல் மன்னனுக்கு தெரியாமலேயே நடந்து இருந்தாலும் அந்தணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் மன்னனை பற்றிக் கொண்டது. அதோடு அந்தணனின் ஆவியும் மன்னனை பற்றியது. இதனால் மன்னர் பிரமை பிடித்தவர்போல் காணப்பட்டார். பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல்வேறு அறங்களை செய்தார். தோஷம் நீங்கவில்லை. இறைவன் அசரீரியாக, சில நாளில் நீ திருவிடைமருதூரை சென்று அடைவாய். அந்த சமயம் இந்த தோஷம் உன்னை விட்டு நீங்கும். என்றார். இந்த நிலையில் சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். வரகுண பாண்டியனும் தன்னை எதிர்த்து வந்த சோழ மன்னனோடு போரிட்டார். போரை எதிர்கொள்ள முடியாமல் சோழ மன்னன் புறங்காட்டி ஓடினார். அவரை துரத்திக்கொண்டே வந்து திருவிடைமருதூரை அடைந்தார் வரகுண பாண்டியன். இத்தலத்தை அடைந்ததும் பகையை மறந்து காவிரியில் நீராடி இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபடுவதற்காக கிழக்கு வாயில் வழியாக நுழைந்தார். அப்போது அவரை பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் செய்வது அறியாது நடுங்கி கோவிலுக்கு வெளியே நின்றது. மன்னன் கோவிலில் இருந்து வெளியே வரும்போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என காத்திருந்தது. ஆனால் இறைவனோ அவரை மேற்கு வாயில் வழியாக வெளியே செல்லும்படி கட்டளையிட்டார். அதன்படி மேற்கு வாயில் வழியாக மன்னரும் வெளியே சென்றார். பிரம்மஹத்தி தோஷம் நிரந்தரமாக நீங்கியது. இதை நினைவு கூரும் வகையில் இன்றளவும், இந்த ஆலயத்திற்கு, வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கில் உள்ள அம்மன் சன்னதி கோபுரவாசல் வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர். பிரம்மஹத்தி தோஷம் நீங்க, மன நோய் சரியாக இன்றளவும் இங்குள்ள காருண்ய தீர்த்தத்தில் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருந்து, மூகாம்பிகையையும் இறைவனையும் வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டால் தங்கள் நோய்கள் நீங்குவதாகவும், தோஷங்கள் விலகுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இத்தலம் கும்பகோணம் -மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தலத்திற்கு தஞ்சாவூர், கும்பகோணம். மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து பஸ் வசதியும், ரெயில் வசதியும் உள்ளது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பஞ்சலிங்க தலம்:
தல வரலாறு:
பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்
அமைவிடம்:
ஆன்மீக குறிப்புகள் : மனநோய் தீர்க்கும் மகாலிங்க பெருமான் - பஞ்சலிங்க தலம், தல வரலாறு, பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம், அமைவிடம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Lord Mahalinga, the healer of mental illness - Panchalinga site, head history, Brahmahati Dosha removed site, location in Tamil [ spirituality ]