இருப்பதை எல்லாம் இழப்பது தான் ஆன்மிகமா...

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Losing everything is spiritual... - Tips in Tamil

இருப்பதை எல்லாம் இழப்பது தான் ஆன்மிகமா... | Losing everything is spiritual...

நம்மிடம் இருப்பது எல்லாம் யாரோ இழந்தது தானே .. தந்தையின் உயிர் அணு, தாயின் சக்தியை இழந்ததில் கருப்பையில் இருந்தே உடல்பெற்று .. தான் கற்றதை இரைத்து இழந்ததால் கல்வி பெற்று .. யாரோ இழந்து விட்டு சென்ற இடத்தை எல்லாம் நாம் பெற்று நம் இருப்பை நிறைந்து கொண்டு இருக்கின்றோம் ..

இருப்பதை எல்லாம் இழப்பது தான் ஆன்மிகமா...

நம்மிடம் இருப்பது எல்லாம் யாரோ இழந்தது தானே ..

தந்தையின் உயிர் அணு, தாயின் சக்தியை இழந்ததில் கருப்பையில் இருந்தே உடல்பெற்று ..

தான் கற்றதை இரைத்து இழந்ததால் கல்வி பெற்று ..

யாரோ இழந்து விட்டு சென்ற இடத்தை எல்லாம் நாம் பெற்று நம் இருப்பை நிறைந்து கொண்டு இருக்கின்றோம் ..

எத்தனையோ தன்னை இழந்து உரமாகி அதில் துளிர்த்த தாவரம், மரம் தன்னை இழந்து கொடுப்பதை தான் பெற்றுக்கொண்டே இருக்கின்றோம் ..

 

இப்படி இழந்தவைகளை தான் பெற்றோம் இழப்பதற்காகவே ..

 

அதை உணரத்தான் ஆன்மிகம் ..

 

இருப்பது என்னுடையது என்ற ஆணவத்தை இழப்பதில் தொடங்கி ..

உங்களையே சுவடு அற்று தொலைக்கும் பயணமே வாழ்க்கை .. என்ற மெய்யை உணர்விக்கிறது ஆன்மிகம் ..

 

இழத்தல் தான் உண்மையில் இன்பம் ..

இனி அதைப்பற்றிய கவலை உனக்கு இல்லை !! அதை பெறுபவன் அந்த பொறுப்பை சுமக்க இருக்கிறான் ..

நீ சுமையற்றவன் ஆகிவிட்டாய் என்றே இழத்தல் யாவும் அறிவிக்கின்றது ..

 

இழத்தலை உவந்து ஏற்பவர்கள் விடைபெறுகிறார்கள் ..

இழத்தலை ஏற்க மறுத்து, ஏற்பவர்கள், மீண்டும் உவந்து ஏற்க பிறக்கிறார்கள் ( யார் எதை இழப்பார்கள் பெறலாம் என்றே )

 

வாழ்த்துகள்

 

திருச்சிற்றம்பலம் 

 

நடராஜா நடராஜா


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : இருப்பதை எல்லாம் இழப்பது தான் ஆன்மிகமா... - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Losing everything is spiritual... - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்