உங்களின் வீட்டின் பூஜையறையில் உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வெள்ளிக்கிழமை அன்று தாமரைபூவை வைத்து வணங்குங்கள். உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்கும். பூக்களுள் சிறந்த பூ: பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வ தில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. உங்களின் தெய்வத்தை வணங்கினால் போதும் ,அதாவது உங்களின் தெய்வமுமே லட்சுமியாக இருந்து உங்களுக்கு நல்லதை செய்துக்கொடுக்கும்.
உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம்
இருக்க தாமரைப்பூ வழிபாடு!
உங்களின் வீட்டின் பூஜையறையில் உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வெள்ளிக்கிழமை
அன்று தாமரைபூவை வைத்து வணங்குங்கள். உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம்
இருக்கும்.
பூக்களுள் சிறந்த பூ:
பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத்
தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல்.
வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி
தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி
மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர்
உண்டு.
இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே
பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வ தில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர்
தாமரைப்பூ.
உங்களின் தெய்வத்தை வணங்கினால் போதும் ,அதாவது உங்களின்
தெய்வமுமே லட்சுமியாக இருந்து உங்களுக்கு நல்லதை செய்துக்கொடுக்கும்.
உங்களின் குலதெய்வம் ஒரு ஆண் தெய்வமாக இருந்தால்
அந்த இடத்தில் ஒரு பெண் தெய்வமும் இருக்கும். எப்படிப்பட்ட ஆண் தெய்வமாக இருந்தாலும்
அந்த இடத்தில் ஒரு பெண் தெய்வம் இல்லாமல் இருக்காது.
உங்களின் வீட்டில் தாமரைபூவை வைத்து பூஜை செய்யும்பொழுது
உங்களின் வீட்டில் அனைத்து செல்வங்களும் தடை
இன்றி கிடைக்கும்.
வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் இதனை செய்ய தொடங்குங்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் குளத்தில் தண்ணீர்
இல்லை. தாமரைப்பூவும் இல்லை.
கடைகளில் கிடைக்கின்ற தாமரைப்பூவை வாங்கி வந்து
பூஜை செய்யுங்கள்.
தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி
இருக்கிறது. ஆகவே தாமரைமலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது
தவிர்க்க முடியாததாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை
காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம்.
ஒரு பூ மட்டும் வைக்காமல் குறைந்தது நான்கு பூக்களாக வாங்கி வந்து பூஜை அறையை அலங்கரியுங்கள்.
வீட்டில் பூஜையறையில் வெள்ளைத் தாமரைப் புஷ்பத்தை
வைத்து போக வர இதனை தரிசித்துக் கொண்டிருந்தால் இறைச் சிந்தனை அடிக்கடி ஏற்படும். தவறுகளுக்கு
ஆளாகாதும் காக்கும்.
ஞாயிறுக்கிழமை தாமரைப் பூக்களால் அம்பிகையை அலங்காரம்
செய்து வழிபடுதல் நன்று. இதனால் இல்லத்தில் கடன் வராது. பெண்களுக்கு மகா பதிவிரதைத்
தன்மையைக் கொடுக்கும்.
வெள்ளிக் கிழமை தோறும் பசுவிற்குத் தாமரைப் பூ
மலர்களைச் சார்த்தி வழிபட்டு வந்தால் உத்தமர்களின் ஆசி திரண்டு வரும்.
இது தீர்க்க சுமங்கலித்துவத்திற்கு உதவும்.
மஹாலட்சுமி தேவி வழிபாடு : உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்க தாமரைப்பூ வழிபாடு - குறிப்புகள் [ ] | Worship of Goddess Mahalakshmi : Lotus flower worship to always have Lakshmi Katadash in your home - Notes in Tamil [ ]