71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.
அன்புடைமை 71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். அன்பினை அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை அன்புடையாரின் துன்பத்தைக் கண்டபொழுது வெளிப்படும் கண்ணீரே உள்ளத்தின் அன்பினைக் காட்டிவிடும். 72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்;அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பில்லாதவர். எல்லாவற்றையும் தமக்கு உரிமையாக்குவர். அன்புடையார் தமது உடலையும் பிறர்க்கு உரியதாக்குவார். 73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. உயிருக்கு உடலுடன் பொருந்திய தொடர்பைப் போன்றது. வாழ்க்கைக்கு, அன்பின் தொடர்பு. 74. அன்புஈனும் ஆர்வம் உடைமை: அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. அன்பு ஆர்வம் கொள்ளுதலைத் தரும். அந்த ஆர்வம் எல்லோரிடமும் சிறந்த நட்பைத் தரும். 75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. உலகத்தில் இல்லற இன்பம் பெற்றவர் அடையும் சிறப்பு அன்பு கொண்டு இல்லறத்தோடு வாழ்ந்த சிறப்பேயாகும். 76. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும். என்பர் அறியாதார். ஆனால் மறத்திற்கும் அதுவே துணையாகும். 77. என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம். என்பு இல்லாத உயிர்களை வெயில் காய்வதைப் போல அன்பில்லாத உயிரை அறம் வருத்தும். 78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. மனத்துள் அன்பில்லாத உயிர் வாழ்க்கை. வன்மையான பாலை நிலத்தில் உள்ள காய்ந்த மரம் தளிர்த்ததைப் போன்றது. 79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? இல்லறத்திற்கு அடிப்படையான அன்பில்லாதவருக்கு புறத்துள்ள இடம். பொருள், ஏவல் என்னும் புறத்து உறுப்புகள் என்ன உதவியைச் செய்யும். 80. அன்பின் வழியது உயர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பே உயிரின் நிலைக்களாமாகும். அன்பில்லார் உடம்பு எறும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற உடம்பாகும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம் : 8
திருக்குறள்: பொருளடக்கம் : அன்புடைமை - அதிகாரம் : 8 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : love - Authority : 8 in Tamil [ Tirukkural ]