மதுரை மீனாட்சி அம்மனின் சிலை, சுத்த மரகதக் கல்லால் ஆனது.
மதுரை மீனாட்சி!
மதுரை மீனாட்சி அம்மனின் சிலை, சுத்த மரகதக் கல்லால் ஆனது. இதைச் செதுக்கியது
தேவலோக சிற்பியான விஸ்வகர்மா என்கிற மயன் ஆவார். இந்த மீனாட்சி அம்மன் கோயிலை கடம்ப
வனம் சூழ்ந்திருந்தது. பிரம்ம தேவனும் விஷ்ணு தேவேந்திரனும் ஒருங்கிணைந்து உண்டாக்கிய
கோயில்தான் மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயம்!!.
இங்குள்ள பொற்றாமரைக் குளம் ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரரால்
உருவாக்கப்பட்டது. இந்தப் பொற்றாமரைக் குளம் இன்றும் தெய்வீக சக்திகொண்டது. ஒரு மீனோ, புழுவோ, பூச்சியோ இந்தக் குளத்தில் நிரந்தர
வாசம் செய்வதில்லை. சங்கப் பலகை கொண்டு தமிழ்ப் புலவர்களின் திறனைச் சோதித்த இடம் இது.
சிவனின் நெற்றிக் கண் பட்டு நக்கீரர் தனது உடம்பெல்லாம் புண்ணாகிப்போய் எரிச்சல் அடங்க
இந்தப் பொற்றாமரைக் குளத்தில்தான் குதித்தார். குதித்த நொடியில் அக்கினியினால் ஏற்பட்ட
பிணியும், வடுவும் நீங்கியது!.
கூன்பாண்டியனின் தீராத வயிற்று வலியும்
இந்தக் கோயிலின் பிரசாதம் சமைக்கும் அடுப்பில் இருந்த சாம்பலினால் அகன்றது.
கடவுள்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக்
கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. இவை 12 ராசிகளைக் குறிக்கும் விதமாக உள்ளன.
இந்தத் தலத்தில் 33,000 சிற்பங்கள்
இருக்கின்றன. ஒவ்வொரு சிற்பத்திற்கும் உயிர் உண்டு!!
மதுரை மீனாட்சி அம்மனின் கோயிலில் இருக்கும் பத்ரகாளி, பேய் - பிசாசு போன்றவைகளிலிருந்து விடுதலை தருவாள். இந்த மகாகாளிக்குப் பிரியமான வெண்ணெயை உருட்டி இந்த அன்னையின் மீதும், ஊர்த்தவ தாண்டவர் மீதும் வீசினால், 108 புண்ணிய நதி தீரத்தில் நமது மூதாதையருக்குத் 'திதி' கொடுத்த பலனும் புண்ணியமும் சேரும் என்கிறார்கள்.
இங்குள்ள முக்குறுணி விநாயகர் வெற்றியின்
உறைவிடம் அன்னை மீனாட்சியைத் தொழுத பின்னர்தான் சொக்கநாதரைத் தொழவேண்டும். இந்த மீனாட்சி
அம்மன் பக்தர்கள் கேட்பதைக் கொடுத்து அருள்பாலிக்கின்றாள்.
எப்படிப்பட்ட பழி, வியாஜ்ஜியம், தோஷம் இருந்தாலும் சரி பொற்றாமரை குளத்தில்
அமாவாசை அன்று நீராடி அன்னை மீனாட்சியை வணங்கினால் உடனடி பலன் கிட்டும். தீராப்பின்
அகலும், வியாஜ்யம் வெல்லும், வெகு விரைவில் கடன் தொல்லை களும் அகலும்/!.
"பில்லி சூனியம் ஓடும்;
பணியில் மேன்மை சேரும்!.
மாடு கன்று விருத்தியாகும்;
போன திரவ்யம் மீளும்!..."
என்று அகத்தியர் மதுரை மீனாட்சியைப் பாடியிருக்கிறார்.
திருமணத் தடையா?. மதுரைக்குச் சென்று மீனாட்சியைத் தரிசித்தால்
தடைகள் நொறுங்கும். நினைத்தது நினைத்தபடி, மங்கள வாழ்வு நேரும்!!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : மதுரை மீனாட்சி! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Madurai Meenakshi! - Amman in Tamil [ Amman ]