மகா சிரசு முத்திரை தலை வலி போக்குமா?

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Maha Sirasu Mudra headache relief? - Recipe, time scale, benefits in Tamil

மகா சிரசு முத்திரை தலை வலி போக்குமா? | Maha Sirasu Mudra headache relief?

'என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி.'சிரசு' என்றால் தலை. உடலில் உள்ள அத்தனை அவயவங்களும் தலையுடன் தொடர்பு கொண்டுள்ளன.

மகா சிரசு முத்திரை தலை வலி போக்குமா?

'என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி.'சிரசு'

என்றால் தலை. உடலில் உள்ள அத்தனை அவயவங்களும் தலையுடன்

தொடர்பு கொண்டுள்ளன.

'மகா' என்றால் எல்லாவற்றிலும் சிறப்புடைய, பெரிய என்றும் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், 'பெரிய தலைசிறந்த முத்திரை' இது. உடலில் பல நோய்கள் வருவதைப்போல, தலைப் பகுதி, முகம், கன்னங்கள், கழுத்து போன்ற முக்கிய அவயவங்களிலும் நோய்கள் உண்டாகலாம்.

உதாரணமாக தலைவலி, தலைபாரம், கண்ணில் வலி, தாடை, நெற்றி, கழுத்து ஆகிய பகுதிகளில் வலி ஏற்படலாம். இந்த வலிகளை நீக்கும் நிவாரணியாக மகா சிரசு முத்திரை உள்ளது.

நிறைய பேருக்கு, தலைவலி என்பதே ஒரு தீராத வலியாக உள்ளது. இந்த முத்திரையைச் செய்தால் தலைவலி உடனே நீங்கிவிடும். டென்சன் குறையும். சளியினால் ஏற்படும் ஜலதோஷம் நீங்கும். இந்த முத்திரையைப் பயிற்சியின்போது விரல்களால் முகத்தை வருடினால், அந்த நேரம் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

செய்முறை

கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொட்டபடி இருக்கும்படி வைக்க வேண்டும். சிறிதளவு அழுத்தம் கொடுத்தால் போதும். மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்க வேண்டும். சுண்டு விரல் வளையாமல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் இவ்வாறு செய்ய வேண்டும்.

இந்த முத்திரையைப் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இதைச் செய்ய வேண்டும்.

நேர அளவு

இந்த முத்திரையை. தினமும் மூன்று வேளைகளிலும், ஆறு நிமிடங்கள் வீதம் செய்ய வேண்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும்.

பலன்கள்

1. டென்ஷன் குறையும்.

2. சுவாசத்தை வெளிவிடும்போது, தலையிலிருந்து கழுத்து. பின்புறம், புஜங்கள், கால்கள் ஆகியவற்றுக்கு சக்தி அலைகள் செல்கின்றன. பிறகு, கை, கால்கள் வழியாக இந்த சக்தி அலைகள் வெளியேறுகின்றன.

3. தலைவலி குணமாகும்.

4. தலைப் பகுதியில் சக்தி ஓட்டம் சீராகும்.

5. கண்ணைச் சுற்றியோ அல்லது கண்ணுக்கு பின்புறமோ ஏற்படும் வலிகள் குணமாகும்.

6. சளித் தொல்லைகள் நீங்கும்.

7. சுவாசம் சுத்தமாகும்.

8. கன்னம், தாடை, நெற்றி ஆகிய பகுதிகளில் இறுகிய தசைகள் தளர்ச்சி அடையும்.

9. கழுத்து வலி நீங்கும்.

10. மன அமைதியும் சுறுசுறுப்பும் உண்டாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : மகா சிரசு முத்திரை தலை வலி போக்குமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Maha Sirasu Mudra headache relief? - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்