மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி, செல்வத்திற்கான கடவுள் என அனைவராலும் சொல்லப்பட்டாலும், மகாலட்சுமி 16 வகையான செல்வங்களை வழங்கக் கூடிய தெய்வமாகும். குழந்தை பேறு, வெற்றி, தைரியம், பதவிகள் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியவர்கள் தான் அஷ்டலட்சுமிகளும். இவர்களை முறையாக வழிபட்டு வந்தாலே வாழ்வில் எந்த வித குறையும் இல்லாமல், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். வாழ்வில் மகிழ்ச்சி, மன நிம்மதியை தரக் கூடிய மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைப்பதற்கும், நம்முடைய வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வசிப்பதற்கும், அவளின் அருட் பார்வை நம்மீது பட்டுக் கொண்டே இருப்பதற்கு வீட்டில் சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். என்ன செய்தால் மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மஹாலட்சுமி வழிபாடு :
மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி, செல்வத்திற்கான கடவுள் என அனைவராலும் சொல்லப்பட்டாலும், மகாலட்சுமி 16 வகையான செல்வங்களை வழங்கக் கூடிய தெய்வமாகும்.
குழந்தை பேறு, வெற்றி, தைரியம், பதவிகள் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களையும்
வழங்கக் கூடியவர்கள் தான் அஷ்டலட்சுமிகளும். இவர்களை முறையாக வழிபட்டு வந்தாலே வாழ்வில்
எந்த வித குறையும் இல்லாமல், மகிழ்ச்சியான வாழ்க்கையை
வாழ முடியும்.
வாழ்வில் மகிழ்ச்சி, மன நிம்மதியை தரக் கூடிய மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர
வைப்பதற்கும்,
நம்முடைய வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வசிப்பதற்கும், அவளின் அருட் பார்வை நம்மீது பட்டுக் கொண்டே இருப்பதற்கு வீட்டில்
சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். என்ன செய்தால் மகாலட்சுமியை
நம்முடைய வீட்டிற்கு வர வைக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள்.
இந்துக்களின் வழிபாட்டு முறையில் விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு
முக்கிய இடம் அளிக்கப்படுகிறது.
ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின்
அருளும் கிடைக்க வேண்டும். எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும்
லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு.
மகாலட்சுமியின் வழிபாட்டிற்கு ஏற்ற நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி, நவராத்திரியின் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் நாளுக்குரிய தெய்வமாக கருதி வணங்கப்படுகிறாள்.
இந்த நாளில் அலை மகளான லட்சுமி தேவியை வழிபட்டால் ஆண்டுதோறும் வீட்டில் செல்வ வளம்
நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு அவரின் படம் அல்லது சிலையை
வீட்டில் வைத்து தொடர்ந்து உண்மையான பக்தியுடன் வழிபட்டு வர வேண்டும். இது தவிர எட்டு
விதமான விஷங்களை வீட்டில் செய்து வந்தால் மகாலட்சுமி நம்முடைய வீடு தேடி வருவாள்.
கிருஷ்ண ஜெயந்தியன்று எப்படி கிருஷ்ணரை வீட்டிற்கு அழைப்பதற்கு
வீடு முழுவதும் கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து வைக்கிறோமோ அதே போல் மகாலட்சுமியை
வீட்டிற்கு அழைப்பதற்கும் பூஜை அறையில் அவரது பாதங்களை வரைந்து வைக்கலாம்.
மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தமாக வாசம் செய்யக் கூடியவள்
திருமகள். அதனால் இது மகாவிஷ்ணுவையும் நம்மடைய வீட்டிற்கு அழைத்து வர வைக்கும். இவர்கள்
இருவரின் ஆசிகளும் கிடைத்து விட்டால் அனைத்து விதமான பாவங்களும், சாபங்களும் நீங்கி விடும். செல்வ வளமும், அமைதியும் வீட்டில் நிலவும்.
மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு தினமும் மனம் உருகி லட்சுமி
காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த மந்திர ஜபத்தின் போது தாமரை
மணி மாலையை கையில் வைத்துக் கொண்டு ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகும்.
தாமரையில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் தாமரை
மணி மாலையை கையில் வைத்துக் கொண்டு லட்சுமிக்குரிய மந்திரத்தை சொல்லி வந்தால் வறுமையில்
இருந்து விடுபட வழிவகுக்கும்.
வீட்டின் பூஜை அறையில் தினமும் இரண்டு மண் அகல் விளக்குகளில்
நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதோடு தாமரை மலர்கள், தேங்காய், ஏதாவது ஒரு இனிப்பு
அல்லது பாயசம் ஆகியவை படைத்து வழிபட வேண்டும். இது மகாலட்சுமியின் மனதை குளிர செய்யும்.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் தாமரை தண்டு திரியை பயன்படுத்தி, நெய் விளக்கு ஏற்ற வேண்டும். இது மகாலட்சுமியின் அருளை பெற்றுத்
தருவதுடன், திருமணத் தடைகளை விலக செய்யும்.
வீட்டில் சங்கு வைத்திருப்பது மிகவும் நல்லது. இது அதிக அளவில்
நேர்மறை சக்திகளை ஈர்க்கக் கூடியதாகும். வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து
வழிபடுவது மகாலட்சுமி வீட்டில் இருப்பதற்கு சமம். வீட்டில் லட்சுமியின் அருள் எப்போதும்
நிறைந்திருக்கும்.
சங்கு வீட்டில் இருந்தால் துன்பங்கள் நீங்கும். அதோடு வெற்றி, ஞானம், மகிழ்ச்சி ஆகியனவும்
கிடைக்க மகாலட்சுமி அருள்வாள். இது குபேரனையும் குறிக்கக் கூடியது என்பதால் செல்வ வளத்தை
ஈர்க்கக் கூடியதாகும்.
சங்கினை எப்போதும் சுத்தமாக இடத்தில், சுத்தமான துணி வைத்து வைக்க வேண்டும். வெள்ளை, சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியின் மீதே சங்கினை வைக்க வேண்டும்.
வெள்ளி அல்லது மண் பாத்திரத்தில் சங்கினை வைப்பது சிறப்பானதாகும்.
பூஜை சமயகளில் சங்கில் தண்ணீர் நிரப்பி வைத்து, அதனை வீடு முழுவதும் தெளிப்பதால் எப்போதும் லட்சுமி கடாட்சம்
நிறைந்திருக்க செய்யும்.
துளசி செடியின் முன்பு விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். துளசி
செடியில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதற்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து
வழிபடுவதால் அந்த இடமே தெய்வீக மயமானதாக மாறி விடும். அந்த சமயத்தில் துளசி செடியிடம்
நீங்கள் வேண்டும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால்
வீட்டில் அமைதியும், ஒற்றுமையும் ஏற்படும்.
இதை எப்போதும் பட்டுத் துணியில் சுற்றியே வைத்திருக்க வேண்டும். புல்லாங்குழல், மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான பொருளாகும்.
இது கிருஷ்ணரின் அருளுடன், மகாலட்சுமியின் அருளையும்
பெற்றுத் தரும்.
புல்லாங்குழலை பூஜை அறையில் வைப்பதால் வீடு முழுவதும் மங்களகரமான
அதிர்வலைகள் ஏற்பட செய்யும். குடும்பத்தில் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
வெள்ளிக்கிழமைகளில் அரிசியில் வெல்லம் கலந்து பசு மாட்டிற்கு
கொடுப்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும்
வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் பசுவிற்கு உணவளிப்பதால் அது மகாலட்சுமியை மனம் மகிழச்
செய்து, வீட்டின் செல்வ வளம் பெருக வைக்கும்.
வாழ்க்கையிலும் குடும்பத்திலும் உள்ள அனைத்து விதமான தடைகளும்
நீங்கும். பாவங்கள் அனைத்தும் நொறுங்கி விடும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : மஹாலட்சுமி வழிபாடு - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Mahalakshmi worship - Tips in Tamil [ ]