இந்த முத்திரைக்கு, கட்டுப்பாட்டு முத்திரை என்ற பெயரும் உண்டு. நமது வாழ்க்கையில் எதற்கும் ஒரு கட்டுப்பாடு உண்டு. உணவு, உடை, கல்வி, வேலை ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது.
அனுசாசன முத்திரை அவசியம் செய்யுங்கள்....
இந்த முத்திரைக்கு, கட்டுப்பாட்டு முத்திரை
என்ற பெயரும் உண்டு. நமது வாழ்க்கையில் எதற்கும் ஒரு கட்டுப்பாடு உண்டு. உணவு, உடை, கல்வி, வேலை ஆகிய
எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. சாலை விதிகள், வாகனம் ஓட்டுவதில்
கட்டுப் பாடு,
சட்டப்படி நடத்தல் என்று
எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு
ஒழுங்கு இல்லாத எதுவும்
பயன் தராது. தியானம், பக்தி, யோகம் போன்றவற்றுக்கும் இதுபோன்ற கட்டுப்பாடு உண்டு. இந்தக்
கட்டுப்பாட்டை வளர்க்க உதவும் முத்திரைதான் அனுசாசன முத்திரை.
ஆள்காட்டி விரலை
வளைக்காமல் நேராக வைத்துக்கொண்டு, நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் ஆகியவற்றைப் பெரு விரலுடன் இணைத்து வைத்துச்
செய்வதுதான் அனுசாசன முத்திரை.
இந்த முத்திரையை, பத்மாசனம் அல்லது
சுகாசனத்தில் அமர்ந்தபடி செய்யலாம். தினமும் 8 நிமிடம் வீதமும், 48 நாள்கள் செய்யலாம்.
எட்டு நிமிடத்தைப் படிப்படியாக அதிகரித்து 48 நிமிடங்கள் வரை செய்யலாம்.இந்த
முத்திரையை,
பத்மாசனம் அல்லது
சுகாசனத்தில் அமர்ந்தபடி செய்யலாம். தினமும் 8 நிமிடம் வீதமும், 48 நாள்கள் செய்யலாம்.
எட்டு நிமிடத்தைப் படிப்படியாக அதிகரித்து 48 நிமிடங்கள் வரை செய்யலாம்.
1. உடலில் நோய்
எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. உடலும் மனமும்
தெளிவடையும்.
3. முதுகுத் தண்டு
வலுவடையும்.
4. தன்னம்பிக்கை வளரும்.
5. ஒழுங்கு. கட்டுப்பாடு
அதிகரிக்கும்.
6. உடலும், மனமும் சக்தி பெறும்.
7. கழுத்து வலி குணமாகும்.
8. முதுகு வலி நீங்கும்.
9. தியானத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
10. மனம் ஒருமுகப்படும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : அனுசாசன முத்திரை அவசியம் செய்யுங்கள்.... - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Make sure to seal the endorsement…. - Recipe, benefits in Tamil [ ]