இந்த சிரிப்பு புத்த முத்திரை, ஓவியங்களிலும், சிலைகளிலும் அதிகம் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் அடையாளமாக இந்த முத்திரை இருக்கிறது. இதயத்துக்கு சக்தியைக் கொண்டுசெல்ல உதவுகிறது.
சிரிப்பு புத்த முத்திரை (Smiling Buddha Mudra) கண்டிப்பாக மனிதன் செய்ய வேண்டும்...
இந்த சிரிப்பு புத்த
முத்திரை, ஓவியங்களிலும், சிலைகளிலும் அதிகம்
காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் அடையாளமாக இந்த முத்திரை இருக்கிறது. இதயத்துக்கு
சக்தியைக் கொண்டுசெல்ல உதவுகிறது. மேலும், சண்டை, கவலை, மன அழுத்தம், கோபம், பயம், அமைதியின்மை உள்ளிட்ட
பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.
கால் விரல் ஒன்றோடு
ஒன்று குறுக்காக இருக்கும்படியோ அல்லது நேராக இருக்கும்படியோ வைத்தபடி செய்யலாம்.
நாற்காலியில் அமர்ந்தபடியும் செய்யலாம். மோதிர விரலையும், சிறு விரலையும்
உள்ளங்கையைத் தொடுமாறு மடக்கி, அவற்றின் மேல் கட்டை விரலை லேசாக அழுத்தியபடி வைக்க வேண்டும்.
ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் நேராக உயர்த்திப் பிடிக்க வேண்டும். இப்போது, உள்ளங்கை நேராக
இருக்கும்படி காட்ட வேண்டும். முழங்கையை உடலைப் பார்த்தபடி முப்பது டிகிரி அளவில்
உயர்த்த வேண்டும். தோள்பட்டைக்கு மேல் உயர்த்தக் கூடாது.
இப்போது நமது மூன்றாவது
கண் மீது கவனம் செலுத்த வேண்டும். ச, ட,ந, ம என்ற எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும். 'ச' என்பது அளவற்றி, 'ட' என்பது வாழும் வாழ்க்கை, 'ந' என்பது இறப்பு, 'ம' என்பது மறுபிறப்பு, ஒளி. இவற்றைச்
சொல்லாமலும் செய்யலாம்.
ஆனால், மூன்றாவது கண் பற்றிய
கவனம் தேவை. கண் குவிதல் அவசியம். தினமும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். மூச்சை
பலமாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். கைகளை மூடிமூடி பலமுறை திறந்து, தளர்வாக விட வேண்டும்.
1. மகிழ்ச்சியை
அளிக்கும்.
2. இதயத்துக்கு சக்தியை
அளிக்கும்.
3. மூன்றாவது கண்
செயல்படத் தொடங்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சிரிப்பு புத்த முத்திரை (Smiling Buddha Mudra) கண்டிப்பாக மனிதன் செய்ய வேண்டும்... - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Man must do Smiling Buddha Mudra... - Recipe, Benefits in Tamil [ ]