கிரஹண கால சித்தி தரும் மந்திரங்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Mantras that give siddhi during eclipse - Tips in Tamil

கிரஹண கால சித்தி தரும் மந்திரங்கள் | Mantras that give siddhi during eclipse

கிரஹண நேரத்தில் மந்திர ஜபம் செய்தல் ரொம்ப விசேஷம். அந்த நேரத்தில் நாம் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால் அது 100 முறை சொன்னதற்கு சமம்.

கிரஹண கால சித்தி தரும் மந்திரங்கள்

 

கிரஹண நேரத்தில் மந்திர ஜபம் செய்தல் ரொம்ப விசேஷம். அந்த நேரத்தில் நாம் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால் அது 100 முறை சொன்னதற்கு சமம். 

அதுவும் தர்பாசனத்தில் அமர்ந்து சொன்னால் அந்த 100 முறை என்பது ஆயிரம் முறை ஆகும். கிரஹண நேரத்தில் எந்த மந்திரம் சொல்ல வேண்டும் எனும் குழப்பம் உங்களுக்கு வரலாம். எனக்கு தெரிந்த மிக எளிமையான இரண்டு மந்திரங்களை உங்களுக்கு சொல்கிறேன்...

 

முதல் மந்திரம்:-

"நற்பவி" அந்த சிவபெருமான் காகபுஜண்டருக்கு நேரடியாக உபதேசம் செய்த மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது சொல்ல எளிமையானது. ஆனால் இதன் பலன் அதீதமானது.

 

நற்பவி, நற்பவி என்று நீங்கள் சொல்ல, சொல்ல பல நல்ல விஷயங்கள் உங்களுக்கு பலிதமாகும்.

 

இரண்டாவது மந்திரம்:-

"ஓம்-ஹ்ரீம்-நமசிவாய"

 

"ஓம்-ஹ்ரீம்-நமசிவாய" மந்திரத்தை சொன்னால் உங்களுக்கு அதீதமான செல்வம், செல்வாக்கு கிடைக்கும். நீங்கள் இழந்த செல்வம், பதவி, உறவுகள் முதலானவற்றை திரும்பவும் பெறுவீர்கள். அல்லது இழந்ததை விட சிறப்பான, அதிகமான நல்ல விஷயங்களை பெறுவீர்கள்.

 

நெருக்கடி நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தபின்னர் தான் செய்த குற்றம் இந்திராவை ரொம்ப உறுத்த அதன் விளைவாய் இந்திரா இந்தியாவில் பல மகான்களை நேரில் சென்று தரிசனம் செய்தார். அவ்வாறு இந்திரா காந்தி தரிசனம் செய்த மகான்களில் கொடுவிலார்பட்டி பரஞ்சோதி மகானும் ஒருவர். விஸ்வாசம் படத்தில் வந்த அதே கொடுவிலார்பட்டி தாங்கோ. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஊர். அந்த பரஞ்சோதி மகான் இந்திரா காந்தியோடு பாதி பேசி கொண்டிருக்கும் பொழுதே இந்திரா காந்தியை புறக்கணிக்கும் விதமாக பாதியில் எழுந்து வானில் பறந்து சென்றார். அவர் வானில் பறப்பதை ஆச்சர்யத்தோடு இந்திரா பார்த்தார். அஷ்டமாசித்திகளை பெற்றவர்கள் வானில் பார்ப்பது ஒரு விஷயமே இல்லை.

 

மறைந்த தொழிலதிபர் மற்றும் கொடை வள்ளலான பொள்ளாச்சி மகாலிங்கம் ஒருமுறை ஒரு பெரிய இழப்பை சந்தித்தார். அந்த நேரத்தில் பொள்ளாச்சி மகாலிங்கம் பரஞ்சோதி மகானை சென்று தரிசனம் செய்தார். அப்பொழுது பரஞ்சோதி மகான் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு உபதேசம் செய்த மகா மந்திரம் தான்,

"ஓம் ஹ்ரீம் நமசிவாய"

 

ஒவ்வொருவித பீஜாட்சரத்தையும் சிவ மந்திரத்தோடு சேர்த்து சொல்லும் பொழுது ஒவ்வொரு வித பலன் அவற்றில் "ஓம்-ஹ்ரீம்-நமசிவாய" என்பது மிக, மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

 

கிரகண நேரங்களில் இனி நீங்கள் தேவையில்லாத எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல், இந்த பொன்னான நேரத்தை வீணாக்காமல்,

 

நற்பவி, ஓம் ஹ்ரீம் நமசிவாய ஆகிய இரண்டு மந்திரங்களையோ அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒரு மந்திரத்தையோ தொடர்ந்து சொல்லிச் சொல்லி உரு ஏற்றி நாம் நமது கர்மவினைகளை போக்குவோம்.

 

உங்களால் இந்த மந்திர ஜெபத்தை ஜெபம் செய்யமுடியவில்லை என்றாலும் குறைந்த பக்ஷம் இதை ஷேர் செய்தால் அது பலருக்கு புண்ணியம் வரும்.....✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : கிரஹண கால சித்தி தரும் மந்திரங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Mantras that give siddhi during eclipse - Tips in Tamil [ ]