மார்கழி மாத விடியற்காலையில் வீசும் காற்றில் நம் உடல் நலத்திற்கு நன்மை தரும் சக்திகள் உள்ளன.
மார்கழி மாதச் சிறப்புக்கள்!
மார்கழி மாத விடியற்காலையில் வீசும்
காற்றில் நம் உடல் நலத்திற்கு நன்மை தரும் சக்திகள் உள்ளன. சூரிய ஒளியில் அந்த சக்திகள்
மறைந்து விடும் என்பதால் மார்கழி மாத விடியற் காலையில் கோலம் போடுவது, பஜனை பாடிச் செல்வதைப் பெரியவர்கள்
மரபாக்கினர். அந்த அதிகாலைக் காற்றிலுள்ள சக்திகள் வாத, பித்த ரோகங்களைச் சரி செய்யும்!
மார்கழி மாதத்தில் திருமணத்திற்காகக்
காத்திருக்கும் கன்னிப் பெண்கள் உள்ள வீட்டினர் மட்டுமே கோலத்தின் நடுவே பூசணிப்பூ
வைப்பர். அதைக் கொண்டு அந்த வீட்டில் திருமண வயதில் பெண் இருப்பதை அறிந்து தை மாதம்
பெண் பார்த்து திருமணத்தை நிச்சயிப்பர்!.
மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்த
நேரமாகக் கொண்டாடப்படுவதால் அந்த மாதத்தில் செய்யும் தெய்வ வழிபாடுகள் மிகுந்த நன்மைகளைத்
தரும். இப்படி தெய்வ வழிபாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்பதற்காகத்தான் மார்கழியில்
குடும்ப சுப விசேஷங்களை யாரும் நடத்துவதில்லை.
வைணவ ஆலயங்களில் பகல்பத்து, இராப் பத்து, உற்சவங்கள் நடப்பதும், பெருமாள் மோகினித் திருக்கோலம் கொள்வதும்
மூல மூர்த்திகள் தைலக் காப்பில் அருள்வதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : மார்கழி மாதச் சிறப்புக்கள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Margazhi month specials! - Perumal in Tamil [ Perumal ]