மாதங்கி முத்திரை செய்தால் படபடப்பு குறையும்

செய்முறை, கால அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Matangi stamp will reduce palpitations - Method, Duration, Benefits in Tamil

மாதங்கி முத்திரை செய்தால் படபடப்பு குறையும் | Matangi stamp will reduce palpitations

மாதங்கி என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயர். அதாவது, நமது மனத்தில் இருந்து நம்மை ஆண்டுகொண்டு இருப்பவளே மாதங்கி. இந்த முத்திரை, மரம் என்ற பஞ்சபூதத்தைத் தூண்டுகிறது.

மாதங்கி முத்திரை செய்தால் படபடப்பு குறையும்

மாதங்கி என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயர். அதாவது, நமது மனத்தில் இருந்து நம்மை ஆண்டுகொண்டு இருப்பவளே மாதங்கி. இந்த முத்திரை, மரம் என்ற பஞ்சபூதத்தைத் தூண்டுகிறது. அங்கு பஞ்சர் மருத்துவத்தில் மரம், தீ, பூமி, உலோகம், தண்ணீர் ஆகியவை பஞ்சபூதங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று, இணைப்பாக உள்ளன.

மனிதனுக்குத் தேவையான காய்களையும், பழங்களையும் மரம் அளிக்கிறது. ஜீரணம், இதயத் துடிப்பு, சுவாசம், அடிப்படை பரிணாம் வளர்ச்சி ஆகிய செயல்களோடு தொடர்புடையது. இது கல்லீரலோடு தொடர்புகொண்டது. தசைகள் மற்றும் தசைநார்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பூமி, மண்ணீரலுடன் தொடர்புடையது. தசைகளின் வளர்ச்சிக்கு மண்ணீரல் உதவுகிறது.

மாதங்கி முத்திரை, அடிப்படையில் நல்ல ஜீரண சக்தியை உண்டாக்கு கிறது. மேலும், மன அதிர்ச்சி போன்ற பாதிப்புகளையும் நீக்குகிறது.

செய்முறை

முதலில் இரண்டு கை விரல்களையும் இணைக்க வேண்டும். நடு விரல் இரண்டையும் நிமிர்த்தி ஒன்றையொன்று தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பு மேல் வயிற்றுக்கு அருகில் இருக்க வேண்டும். அதே சமயம், மூச்சை மெதுவாக இழுத்து விட வேண்டும்.

கால அளவு

தினமும் சுமார் 4 அல்லது 5 நிமிடங்கள் செய்ய வேண்டும். நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலே இதைச் செய்யலாம்.

பலன்கள்

1. நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

2. சுவாசத்துக்கு உத்வேகம் கிடைத்து, ஜீரண உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும்.

3. இதயம், வயிறு, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பலப்படும்.

4. இதயம் சீராகச் செயல்படும்.

5. உடல் வலி, படபடப்பு குறையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : மாதங்கி முத்திரை செய்தால் படபடப்பு குறையும் - செய்முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Matangi stamp will reduce palpitations - Method, Duration, Benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்