திருமணத் தடைகள் தவிடு பொடியாகும்:

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Matrimonial barriers are removed: - Spiritual Notes in Tamil

திருமணத் தடைகள் தவிடு பொடியாகும்: | Matrimonial barriers are removed:

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

திருமணத் தடைகள் தவிடுபொடியாகும்:

(கெம்பநாயக்கன் பாளையம்)

 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் இவரது கனவில் தோன்றி, இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி வழிபடு என்று கூறினார். குப்பண்ணன் மறு நாளே ஆலயம் கட்டுமான பணியில் இறங்கினார்.

அப்போது ஆங்கிலேயர் கெடுபிடி இருந்தது. குப்பண்ணனின் முயற்சிக்கு இடையூறாக இருந்த ஆங்கிலேய அதகாரிக்கு திடீரென பார்வை முற்றிலும் போய், உடல் அரிப்பும் ஏற்பட்டது. தன் தவறை உணர்ந்த அவர், குப்பண்ணனிடம் மன்னிப்பு கேட்க, அவரும் முருகனை மனமுருகி வேண்டிக்கொள்ள, அதிகாரியின் குறைகள் நீங்கின. அவரே கோயிலுக்கு வரவேண்டிய மரச்சட்டங்களைப் பாதுகாப்பாகப் போய்ச்சேர உதவினார்.

அந்த பாலதண்டாயுதபாணி, பக்தர்களுக்கு நேரும் தடைகளை எல்லாம் தவிர்த்து அவர்கள் வாழ்வில் இன்றும் இனிமை சேர்க்கிறார். குறிப்பாகத் திருமணத் தடைகள். தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெற வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இங்கே சுயம்வரா பார்வதி யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. யாக பூஜையில் கலந்து கொண்டால், பாலதண்டாயுதபாணி திருவருளால் திருமண நிச்சயதார்த்தம் 48 நாட்களில் நடைபெறுகிறது என்கிறார்கள்.

இவ்வாறு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வைகாசி 26ம் தேதியன்றும் கோவில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வரா பார்வதி யாகமும் அன்னதானமும் நடத்தப்படுகிறது.

இங்கே பக்தர்களுக்குத் தரப்படும் பிரசாதம் பல நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை பெற்றது. மனநோயாளிகளும் இங்கே வந்து குணம் செல்கிறார்கள். செய்கின்ற வேலைகளில் மாறுதல் பெற்றுச் விரும்புகிறவர்களும் இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள். யாக பூஜையில் கலந்து கொள்ள வருபவர்கள். கால் கிலோ உதிரிப் பூவும், இரண்டு முழம் கட்டிய பூச்சரமும், ஒரு எலுமிச்சம்பழமும் கொண்டு வருகிறார்கள். ஜாதகத்தை இறைவனின் காலடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூர் சாலையில் அமைந்திருக்கிறது இந்த முருகன் கோவில்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருமணத் தடைகள் தவிடு பொடியாகும்: - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Matrimonial barriers are removed: - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்