வேறு எந்த வகையான பழத்திலும் இல்லாத அளவு வைட்டமின் A உயிர்ச்சத்து மாம்பழம் ஒன்றில் தான் இருக்கிறது.
பழங்களின் மருத்துவப் பயன்கள்
வேறு எந்த வகையான பழத்திலும் இல்லாத அளவு வைட்டமின் A உயிர்ச்சத்து
மாம்பழம் ஒன்றில் தான் இருக்கிறது.
மாம்பழம் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடியதல்ல. வருடத்தில்
மார்ச் மாதம் முதல் ஜுலை மாதம் வரையில் தான் கிடைக்கும். மாம்பழம் வடிவத்திலும், நிறத்திலும், அளவிலும், ருசியிலும்
மாறுபட்ட பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையான பழத்திற்கும் வெவ்வேறு விதமான பெயர் உண்டு.
சாதாரணமாக பங்கனபல்லி, நீலம், பீத்தர், ருமானி, பெங்களூரா, பச்சை என்ற பழங்களே அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
ஒரு மாம்பழம் 600 கிராம் முதல் 20 கிராம் வரை இருக்கும். சிலவகை மாம்பழம் அதிக இனிப்பாகவும், சில வகை இனிப்பும்
புளிப்பும் கலந்த ருசியுடனும், சிலவகை புளிப்பு ருசியாகவும் இருக்கும்.
பங்கனபல்லி, ருமானி, பீத்தர், பச்சை, நீலம் போன்ற பழங்கள் நார் இன்றி வெறும் சதைப்பற்றாவே இருக்கும்.
சிலவகைப் பழங்களில் நார் நிறைந் திருக்கும்.
மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்சத்து
அதிக அளவில் இருப்பதால், அது நமது சரீரத்தில்
அதிக இரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும்.
நோய் வராமல் தடுக்கும். மாம்பழம் கிடைக்கும் காலத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் தினசரி
மாம்பழத்தை உண்டு உடலுக்கு நல்ல பலத்தைச் சேமித்துக் கொள்ள வேண்டும். மாம்பழத்தைத்
தின்றபின் அதன் கொட் டையை அடுப்பில் போட்டு சிவக்கச் சுட்டு கொட்டை யை உடைத்து, அதனுள் உள்ள
சொத்தை இல்லாத பருப்பை எடுத்து, ஒவ்வொருவரும் சுமார் ரூபாயெடை பருப்பை மென்று தின்று அரை வந்தால்
மாம்பழத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் உயிர்சத்து மேலும் சற்று கூடுதலாகக் கிடைக்கும்.
சில குடும்பங்களிலுள்ள பெரியவர்கள், தங்கள் வீட்டில்
உள்ளவர்கள் அதிக அளவில் மாம்பழத்தை சாப்பிட்டால் சீதபேதி உண்டாகுமென்பது அவர்கள் அபிப்பிராயம்.
மாம்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் A உயிர்ச்சத்து இருக்கிறதென்பதும், நாம் குழம்பு, இரசத்துடன்
சேர்க்கும் புளியம் பழத்தைவிட மாம்பழம் குறைந்த அளவே உஷ்ணம் கொடுக்கக் கூடியது என்பதும்
அவர்களுக்குத் தெரியாது. ஆகையால் அவர்கள் அப்படிக் கூறுகின்றனர்.
நாம் தினசரி குழம்பு, சாம்பார், இரசம் இவை
களில் சேர்க்கும் புளியம்பழத்தின் உஷ்ண அளவு எவ்வளவு தெரியுமா? 82-காலரிகள்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத உஷ்ண அளவு இந்த புளியம் பழம் ஒன்றில் தான் உண்டு. ஆனால், மாம்பழத்திலுள்ள
உஷ்ண அளவு 14 காலரிகள்தான். ஆப்பிள்
பழம், கொய்யாப் பழம், எலுமிச்சைப் பழம், வாழைப் பழம்
இவைகள் தரும் உஷ்ணத்தை விட, மாம்பழம் குறைந்த அளவு உஷ்ணத்தை தரக்கூடியதாக இருக்கிறது. எனவே சிறுவர் முதல்
பெரியோர் வரை மாம்பழக் காலத்தில் மாம்பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு உடலைப் பலப்படுத்திக்
கொள்ளவேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து - 1363 மில்லி கிராம்.
வைட்டமின் B-1 A உயிர்ச்சத்து – 11 மில்லி கிராம்.
வைட்டமின் B-2 உயிர்ச்சத்து – 14 மில்லி கிராம்.
வைட்டமின் C உயிர்ச்சத்து – 4 மில்லி கிராம்.
சுண்ணாம்புச்சத்து - 3 மில்லி கிராம்.
இரும்புச்சத்து - 0.1 மில்லி கிராம்.
மாம்பழத்தை ஆகாரத்திற்குப் பின் சாப்பிடுவது தான்
நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது சரியல்ல!
உடலில் நல்ல இரத்தம் உற்பத்தியானால் உடல் பலம் தானே வரும். தினசரி, காலை மாலை
ஆகாரத்திற்குப் பின் மாம்பழத்தைச் சாப்பிட்டு, இரவு படுக்கைக்குப்
போகுமுன் காய்ச்சிய பசுவின் பாலைச் சாப்பிட்டு வர வேண்டும். இந்த விதமாக 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகும்.
உடல் பலம் பெறும்.
பற்களில் வலி, ஈறு வீக்கம், பயோரியா என்னும்
பல் ஈறு அழிவு, பல்லில் சீழ்வடிதல், இரத்தம் வருதல், பல் அசைவு
போன்ற கோளாறுகள் குணமாக ஒரு ரூபாயெடை மாம்பழத்தை எடுத்து துண்டுகளாக நறுக்கி மூன்று
பங்கு செய்து கொண்டு ஒரு பங்கு பழத்தை வாயில் போட்டு மென்று அதை எல்லா பற்களிலும் சூழ்ந்து
நிற்கும்படி வாயிலேயே ஐந்து நிமிடம் வைத்திருந்து கீழே துப்பிட வேண்டும். இதே போல மற்ற
இரு பங்கு பழங்களையும் செய்ய வேண்டும். கடைசிப் பங்கு முடிந்தவுடன் தாங்கக் கூடிய அளவில்
வெந்நீர் எடுத்து சிறிதளவு உப்புச் சேர்த்து கலக்கி அதைக்கொண்டு வாயை நன்றாகக் கொப்பளித்து
விடவேண்டும். இந்த விதமாக மூன்று நாள் செய்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
தேவையானால், மேலும் சில தினங்களுக்கும் செய்யலாம்.
(இந்த வகையில்
வேரற்றுப் போன பற்களும், வயோதிக வயதில் ஏற்பட்டுள்ள பல் அசைவும் குணப் படாது) இந்த முறையில்
அநேகருக்கு பற் சொத்தை கூட குணமாகி இருக்கிறது.
இந்த சமயம் தினசரி காலை மாலை ஆகாரத்திற்குப் பின் மாம்பழமும்
சாப்பிட்டு வரவேண்டும்.
ஒரு சிலருக்கு சூரிய வெளிச்சம் மறைந்ததும் கண் பார்வையும் மங்கிவிடும்.
இதையே மாலைக்கண் என்று சொல்லப்படுகிறது. மற்றும் கண்ணில் வடிதல், கண் சிவத்தல், கண்ணில் வலி, பார்வை சதா
நீர் மந்தம், கண் எரிச்சல், கண்ணில் பீழை சேர்தல் போன்ற
கோளாறுகளினால் கஷ்டப்படுகிறவர்கள் தினசரி பகல் - இரவு உணவுக்குப் பின் மாம்பழத்தைத்
தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு
வந்தால் பூரண குணம் காணலாம். இரவில் படுக்கப் போகுமுன் ஆழாக்களவு காய்ச்சிய பசுவின் பாலையும்
குடித்து வந்தால் இந்தக் கோளாறு சீக்கிரமாகவே குணமாகும்.
மகோதர வியாதியுள்ளவர்களுக்கு காலை, பகல் இரவு
மூன்று வேளைக்கும் வேறு எந்த வகையான ஆகாரத்தையும் கொடுக்காமல், வெறும் மாம்பழத்தை
மட்டும் கொடுத்து வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வாந்தி
கூட ஏற்படும். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து ஐந்தாம் நாள் இரவு வரை மாம்பழத்தையே
கொடுத்து வந்து, ஆறாம் நாள் காலையில் அரிசிக் கஞ்சி கொடுத்து, சீக்கிரம்
ஜீரணமாகக்கூடிய பதார்த்தங்களுடன் பகல் இரவு உணவு கொடுத்து, பிறகு வழக்கம்
போல ஆகாரம் கொடுக்கலாம். இந்த முறையில் மகோதர நோய் ஆச்சரியமாகக்
குணமாகிவிடும். பயப்படாமல் செய்து குணமடையலாம்.
ஆண் தன்மைக் குறைவு ஏற்பட்டிருப்பதையே நரம்புத் தளர்ச்சி என்று
கூறப்படுகிறது. நரம்பு பலஹீனமடைந்தாலே ஆண் தன்மையும் குறையும். எனவே நரம்புகளுக்குப்
பலத்தைக் கொடுத்தால் நரம்புத்தளர்ச்சி தானே போகும். நரம்புகள் பலம் பெற்று தாதுவும்
விருத்தியானால் ஆண் தன்மை ஏற்படும்.
மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து
அதிக அளவிலிருப்பதால், அது இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும். அதன் காரணமாக
நரம்புகளுக்கு முறுக்கேறும். ஆகையால் நல்ல மாம்பழமாக வாங்கி வந்து பகல் இரவு ஆகாரத்திற்குப்
பின் மாம்பழம் சாப்பிட்டு, இரவு படுக்கப் போகு முன் ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பசுவின்
பாலைக் குடித்து வர வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி
உண்டாகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
வாலிப வயதுள்ள ஆண், பெண் சிலருக்கும்
வயோதிகத்தை அடையும் தருவாயிலுள்ளவர்களுக்கும் உடல் தோலில் சுருக்கம் ஏற்பட்டு அது விகாரமாகத்
தோன்றும். இந்த நிலையை மாற்றி தோல் சுருக்கத்தை போக்கி, தோலை வழுவழுப்படையச்
செய்யும் சக்தி மாம்பழத்திற்கு உண்டு. இந்த நிலையிலுள்ளவர்கள் ஆகாரத்திற்குப் பின் மாம்பழத்தைச் சாப்பிட்டு, ஒரு டம்ளர்
அளவு காய்ச்சிய பசுவின் பாலையும் சாப்பிட்டு வந்தால், உடல் தோலில்
ஏற்பட்ட சுருக்கம் நீங்கி தோல் வழுவழுப்படையும். தோல் அழகாகத் தோன்றும்.
பல வியாதிகளுக்கு மூலகாரணமாக மலச் சிக்கலேயாகும். ஒவ்வொருவருக்கும்
தினசரி ஒரு இருப்பது வேளையாவது மலம் இளகலாகக் கஷ்டமில்லாமல் கழிய வேண்டும்.
இதில் தடை ஏற்படுமானால் உடலில் பல வியாதிகள் ஏற்பட ஏதுவாகும். இதற்கு மாம்பழம் நன்கு
பயன்படும். தினசரி படுக்கைக்கு போகுமுன் மாம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், மறு நாள் மலம்
இலகுவாகக் கழியும். ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : பழங்களின் மருத்துவப் பயன்கள் - மாம்பழம் நன்மைகள், மலச்சிக்கல் நீங்க [ ஆரோக்கியம் ] | Health Tips : Medicinal uses of fruits - Mango benefits, Get rid of constipation in Tamil [ Health ]