111. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
நடுவுநிலைமை 111. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். பகைவர், அயலார். நண்பர். என்று பாராமல் நடுநிலைமையிலிருந்து வழுவாமல் நடப்பதே அறச் செயலாகவும், நடுநிலையாகவும் கருதப்படும். 112. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. நடுவு நிலைமை உடையவன் பெற்ற செல்வம் அழிவில்லாமல் அவனது மரபினருக்கும் பாதுகாப்பாய் அமையும். 113. நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். நடுநிலைமை நீங்கியதால் வரும் செல்வத்தால் பயனை அப்பொழுதே விட்டு விட வேண்டும். 114. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். நடுநிலைமை உடையவர், நடுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர் மரபினரின் செயலால் அறியப்படும். 115. கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. வாழ்வும், தாழ்வும் நல்வினை தீவினையால் வருவது இயல்பே. எதுவந்தாலும் நடுநிலைமையிலிருந்து வழுவாமல் நடப்பதே சான்றோர்க்கு அழகாகும். 116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஓரீஇ அல்ல செயின். நெஞ்சம் நடுநிலைமையிலிருந்து நீங்கித் தீமை செய்ய நினைக்கும் போதே நாம் கெடுவோம் என்பதையறிய வேண்டும். 117. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. நடுநிலைமையுடன், தன்னடக்கத்தோடு நடப்பவனின் வறுமையை மக்கள் கெடுதலாக எண்ணமாட்டார்கள். 118. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. துலாக்கோல் பொருளை சமமாக வரையறுப்பது போலப் பகை நட்பைப் பாராமல் நடுநிலைமையோடு நீதி வழங்குவதே சான்றோரது கடமையாகும். 119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். மனத்துள் வஞ்சகம் இல்லாதிருந்தால். சொல்லிலும் செயலிலும் வஞ்சகம் இல்லாதிருக்கும் என்பதே நடுநிலைமையின் சிறப்பாகும். 120. வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். மற்றவர் பொருளையும் தம் பொருள்போம் எண்ணி மிகையும். குறையும் இல்லாமல் வணிகம் செய்வதே. வணிகர்க்கு சான்றாண்மையாகும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம் : 12
திருக்குறள்: பொருளடக்கம் : நடுவுநிலைமை - அதிகாரம் : 12 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : mediocrity - Authority : 12 in Tamil [ Tirukkural ]