தினமும் சில நிமிடங்கள் தியானத்தைப் பயிற்சி செய்பவன் தாம் தினமும் செய்யும் பணிகளில் தன்னுடைய தெய்வீகத் தன்மை இருப்பதாக உணர்கிறான்.
தியானம் - யோகம் சிறப்புச் செய்திகள்
ரமணமகரிஷி:
இவர் சொல்கிறார். தினமும் சில நிமிடங்கள் தியானத்தைப் பயிற்சி செய்பவன் தாம்
தினமும் செய்யும் பணிகளில் தன்னுடைய தெய்வீகத் தன்மை இருப்பதாக உணர்கிறான். இதை
அறிந்த ஒருவன் தன் வாழ்க்கையில் ஒரு தவறான வழியிலும் செல்வதில்லை. ஒரு தொடக்கப்
பயிற்சியாளன் தன் எதிர்காலத்தில் அதிக நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும் இரமணர்
எச்சரித்திருக்கிறார். ஆரம்பத்தில் தியான முயற்சிகள் தோல்வியடைகின்றன. சரியான மன
ஒருமை வருவதில்லை. ஆனாலும் துணிவுடனும் பொருமையுடனும் பயிற்சியை தொடர்ந்து
செய்தால் நாம் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையாக உள்ளதோ அவ்வளவு இயல்பாக தியானம்
வரும்.
கடவுள் மிகத்தொலைவில் இருப்பதாக எண்ணியே பலர் சாதாரணமாக தியானம்
செய்கிறார்கள். அதிகமான முயற்சி தியானத்தில் உண்டானால் இந்தத் தொலைவு குறைகிறது.
ஆண்டவன் இல்லாத பொருளே இல்லை. கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார். மிக
அருகாமையில் உள்ளார். அவ்வளவு ஏன்? எனக்குள்ளேயே இருக்கிறார் என்று உணர்வு உண்டாகும். நானும்
இறைவனும் வேறு என்ற எண்ணம் போகிற போது நான் தான் ஆண்டவன் என்று ஒருவர் உணர்கிறார்.
அந்நிலையில் ஒருவனின் தனித்தன்மை இழக்கப்பட்டு விடுகிறது. தானும் கடவுளும் ஒன்று
என்ற நிலை வரும். இந்த நிலையில் வடிவமும் இல்லை. பெயரும் இல்லை. இதற்கு ஓர்
எல்லையும் இல்லை. அத்வைதத்தில் நிறுவப்பட்ட இந்த உண்மையை ஆள்மீக முறையில் நாம்
பெறுகிற அனுபவத்தில் அறிந்து உணர்ந்துக் கொள்கிறோம். மனம் நலமாக இருந்தால் உடலும்
நலமாக இருக்கும்.
யோக மாணவனின் பஞ்ச லட்சணம்
காக் சேஷ்டா பக்கோ தியானம்
ஸ்வான நித்ரா தத்தேவ் விஜே
அல்ப ஹாரி கிரத்யாகி
வித்யாத்ரி பஞ்ச லட்சணம்
காக்கையின் பார்வை, நண்டின் நடை, நாயின் தூக்கம், குறைந்த உணவு, வீட்டை மறந்த நிலை - இந்த ஐந்தும்
யோகக் கல்வி கற்கும் மாணவனின் பஞ்ச லட்சணமாகும்.
பகவத்கீதை 9. துளசிதாசர்
மருத்துவ யோகம்
அஞ்சனம் போன்றுடல் ஐயறும் அந்தியில்
வஞ்சக வாத மறுமத்தியானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே
திருமந்திரம் - பா. 727
அஞ்சனம் குற்றம், ஐ-சுபம், நஞ்சு அறுதல் - சுக்கிலம் நீங்காதிருத்தல்,
மத்தியானம் - நண்பகல், செஞ்சிறு காலை-
செம்மையான விடியற்காலம்.
செஞ்சிறு காலையில்:- யோகப்பயிற்சி செய்தால்
புளித்த ஏப்பம், வாந்தி ஏற்படல், உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், பசியின்மை, ருசி தெரியாமை, பாசம் படர்ந்த நாக்கு, வயிறு குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
மத்தியானத்தில் - யோகப்பயிற்சி செய்தால்
கீல்வாதம், ருமாடிசம், மூட்டுவலி, குதிகால்
வாதம், ஆர்தரைட்டிஸ், கழுத்துவலி,
அடிமுதுகுவலி, முதுகெலும்பு தொடர் நழுவுதல்,
சையாடிகர் நரம்பு பிடிப்புகள், மூட்டுகளின்
இடைவெளி குறைந்து மூட்டுகள் உராய்தல், எலும்புகள் தேய்தல்,
மூட்டுகளில் சுரக்கும் காப்பு நீர் தடைபடல் போன்ற நோய்கள் தீரும்.
மாலையில் - யோகப் பயிற்சி செய்தால்
கபக்கட்டு, மூச்சுக் கோளாறுகள், அலர்ஜி, சைனாஸெடிஸ்,
மார்புசளி, ஈஸ்னோபிலியா, டான்ஸிலிடிஸ், அடுக்கு தும்மல், அடிக்கடி ஜலதோஷம் பிடித்தல், மூக்கு அடைப்பு தீரும்.
ஹதயோக மாணவனின் லட்சணம்
வபுக்குசத்வம் வதனே பிரஸன்னதா
நாதஸ்புடத்தவம் நயனே ஸு நிர்மலே
அரோகதா பிந்து ஜயோஅக்னி தீபனம்
நாடீர் விசுத்தி : ஹட்ட யோக லட்சணம்
உடல் மெலிந்து முகத்தில் மகிழ்ச்சி ஒளிர, குரல் இனிமையாக விளங்க, கண்கள் ஜொலிக்க,
நோயற்று, ஆண்மையை நன்கு அடக்கி, உணவைச் செரிக்கும் சக்தி அதிகரித்த நிலை ஒரு சாதகன் ஹடயோகம் பயிலும்போது
நாடிகள் தூய்மைப்படுவதின் அடையாளமாகும்.
நாடி சுத்தி என்னும் (பிராண) உயிர் கடிகாரம்
சாதாரண ஒழுங்கற்ற சுவாசத்தினால் நம் சக்தி குறைந்து கொண்டே வருகிறது.
கடிகாரத்தில் சாவி தீர்ந்ததும் முள் நின்றுவிடும். அதன் டிக்டிக் சப்தம் கேட்காது.
அதைப்போல் தான் நமக்குப் பிராணசக்தி குறையக்குறைய நமது ஆயுளும் தேய்ந்து பிறகு ஒரு
நாள் உயிர்மூச்சு நின்றேவிடுகிறது.
கடிகாரம் ஒழுங்காக இயங்க, நாம் நாள்தோறும் சாவி கொடுத்து வருவதுபோல், இந்த நாடி சுத்தியின் மூலம், நமது சக்தியை
நிரப்பிக்கொண்டே வந்தால், சக்தி குறையாமல் நெடுநாள்
ஆரோக்கியமாய் வாழலாம்.
மூச்சின் முழு கவனத்தில் இலட்சாதிபதியாகலாம்
நாடிசுத்தி செய்யாமல் சாதாரணமாய் இருப்பவனுக்குச் சக்தி அதிகமாய்
செலவாவதுமல்லாமல், இழந்த சக்தியை அவன்பெற முயற்சிக்காமையால் நோய்கள் பெருகி பல
துன்பங்களுக்கும் ஆளாகிறான். இந்தப் பிராணா சக்தியின் உயர்வை அறிந்தால் யாரும் அதை
வீணாகச் செலவிட மாட்டார்கள்.
இந்த நாடிசுத்தி பயிற்சியினால் நீங்கள் ஆற்றல் அளவில், ஆரோக்கியத்தின்
அளவில் இலட்சாதிபதியாகிவிட்டீர்கள். (சுகமான சுவாசமுறை)
எத்தனை நாட்களுக்குத்தான் வெறும் இலட்சாதிபதியாகவே இருந்து கொண்டிருப்பது.
இன்னும் உயர்ந்து கோடீஸ்வரனாக வேண்டாமா? ஆகா எளிதில் ஆகலாமே. முறையான கும்பக பயிற்சி செய்தால்
மட்டும்.
பிராணயாம சாதகனின் மனம்
பிராணயாமம் செய்பவர்களுடைய மனம் ஓர் அழகான ஃபோட்டோ ஃபிலிம் போன்றது. தரமான
ஃபிலிமில் தான் நல்ல படம் கிடைக்கும். பொருளின் துல்லியமான பதிவைக் காண முடியும்.
அதேபோல எந்த விஷயத்தைப் பற்றி அவர்கள் அலசினாலும் அதன் குறை நிறைகளை முழுமையாக
புரிந்து வெளிப்படுத்தும் பக்குவம் பெற்றது அவர்களுடைய அறிவு.
யோக பிரணவ இரகசியம்
உண்ணும்போது யீரெழுத்தை உயரவாங்கு
உறங்குகின்ற போதெல்லா மதுவேயாகும்
பெண்ணின்பா லிந்திரியம் விடும்
போதெல்லாம்
பேணி வலம் மேல் நோக்கி அவற்றில் நில்லு
தின்னுங்காயிலை யருந்தும் போதெல்லா
மதுவுமேயாகும்
தினந்தோறும் இப்படியே செபிக்க வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார்பாரு
மறலி கையில் அகப்படவும் மாட்டார் தானே!
பிராணயாம பயிற்சி இல்லா தோட்டம் போகதோட்டம்
பயன்படுத்தாத தோட்டத்தில்
கரம்பும் காளானும்
எருக்கும் முளைக்கின்றன.
யோக வேள்வி
பிராண - அபான வாயுக்களை
அடக்கியாண்டு
வாயுதாரணை செய்வரை
ஒரு யக்ஞமாகப்
பகவத்கீதை போற்றுகிறது.
ஆரோக்கியம் குறிப்புகள் : தியானம் - யோகம் சிறப்புச் செய்திகள் - குறிப்புகள் [ ஆரோக்கியம் குறிப்புகள் ] | Health Tips : Meditation - Yoga Special News - Tips in Tamil [ Health Tips ]