"சக்தியில்லையேல் சிவமில்லை", என சிவனே உணர்ந்திருந்த போதும்,சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.ஆனால்,மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும்.
மீனாட்சியம்மன் சிறப்பு🦜
🛕பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும்,மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி
தருவார்.
🛕சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி,லட்சுமி,பார்வதிதேவி என மூன்று விதமாய் காட்சி தருவாள்.
🛕அந்த வரிசையில்,மீனாட்சி அம்மன் மொத்தம் ஆறு விதமான
அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.
🛕"சக்தியில்லையேல் சிவமில்லை", என சிவனே உணர்ந்திருந்த போதும்,சக்தி
தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.ஆனால்,மதுரையில் அன்னையின் கையே ஓங்கி
இருக்கும்.
🛕மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.
🛕முதலில்,மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம்,பூஜைகள் செய்த பின்னரே
சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.பக்தர்களும்,அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்குவர்.
🛕மதுரையில் பல அதிசயங்கள் நடக்கும்.அதன்படி,மீனாட்சி அம்மன் தினமும் எட்டு விதமான
சக்திகளாக உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள்.இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத
சிறப்பாகும்.
🛕இனி அந்த எட்டு வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்.
💓6-8 நாழிகை வரையில் புவனேஸ்வரியாகவும்,
💓12-15 நாழிகை வரையில் கௌரியாகவும்,
💓மதியானத்தில் சியாமளாகவும்,
💓சாயரட்சையில் மாதங்கியாகவும்,
💓அர்த்த ஜாமத்தில் பஞ்சதசியாகவும்,
💓பள்ளியறைக்கு போகையில் ஷோடசியாகவும் அன்னையை உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள்.
🛕அன்னைக்கு ஐந்து கால பூஜைகள் நடக்கும்
போது,மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறு தான்
அலங்காரங்கள் செய்விக்கப்படும்.
🛕காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும்,உச்சிக்காலத்தில் மடிசார் புடவை
கட்டியும்,மாலை நேரத்தில் தங்க கவசமும்,வைரக் கிரீடமும் அணிந்தும்,இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை
அணிந்தும் அன்னை காட்சி தருவாள்.
🛕அன்னையின் ஒவ்வொரு காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.ஒரே நாளில் இந்த அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது.
🛕எல்லா கோவில்களையும் போல,மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல
பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள்
சுவாமி சன்னதியிலிருந்து பள்ளியறை வரும்.
🛕பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி மூக்குத்தி தீபாராதனை நடக்கும்.அதன் பின்னரே அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை,பால்,பழங்கள்,பாடல்கள்,வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன்
இரவு கோவில் நடை சார்த்தப்படும்.
🛕மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி.பள்ளியறை பூஜை சிவ-சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.
🛕மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும்
நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும்.
🛕பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால்,அன்னை பலன் தருவாள் என்கின்றனர்.
🛕வியாபார நஷ்டத்திற்கு தொழில் மற்றும்
வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு
தரிசித்தால் முன்னேற்றம் பெறலாம் என சொல்கின்றனர்.
🛕வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு.
🙏🦜ௐ சக்தி பராசக்தி🦜🙏
இந்த தலைப்புகளில் அம்மன் தெய்வம் அனைத்தையும் பற்றி விவரமாக பதிவிடப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : மீனாட்சியம்மன் சிறப்பு - குறிப்புகள் [ ] | Amman: History : Meenakshiyamman special - Tips in Tamil [ ]