மனநலம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

Mental health is the reason for happiness - Health Tips in Tamil

மனநலம் தான் மகிழ்ச்சிக்கு காரணம் | Mental health is the reason for happiness

உடல் ஆரோக்யத்திற்க்கு முதலில் தேவைபடுவதே இந்த மனநலம் தான். மனம் நலமாக இருந்தாலே அனைத்தும் நலமாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உளவியல் முறைப்படி அதுவே உண்மையாகும்.

மனநலம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்

 

மனநலம்

உடல் ஆரோக்யத்திற்க்கு முதலில் தேவைபடுவதே இந்த மனநலம் தான். மனம் நலமாக இருந்தாலே அனைத்தும் நலமாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உளவியல் முறைப்படி அதுவே உண்மையாகும். சரி. ஆரோக்யத்திற்கு மனதை மட்டும் சரியாக வைத்தால் போதுமா? உடம்பை மற்றும் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் கண்களை காப்பது போல் கவனமாக, உற்று நோக்கி, மன அமைதியுடனும், மன மகிழ்ச்சியுடனும் வைத்தாலே நாம் சிறப்பாக வாழலாம். சரி மனதையும் சரிவரப் பார்த்து ரெடி ஆயிட்டோம். உடம்பையும் சரியாக வைத்து இருக்க தயாராகி விட்டோம். இந்த இரண்டு மட்டும் செய்தால் போதுமா? கண்டிப்பாக போதாது. இன்னொன்று ஒன்று இருக்கிறது. எது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் நினைப்பதும் சரி தான். ஆம். சமுதாய நலம். சமுதாயம் என்பது நாம் அனைவரும் தான். நீங்களும், நானும், நம்மைச் சுற்றியுள்ள உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுமே. சமுதாயம் என்ற வட்டத்தில் வருவார்கள். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுமே நம் சமுதாயத்தில் அடங்குவர். அப்படி என்றால் சமுதாயம் நலலா இருக்கும் போது, நல்ல வளர்ச்சியை நோக்கிச் செல்லும்போது, நாமும் நல்ல மன நிலையில்,உடல் நிலையில் இருக்காமல் போவோமா? நினைத்துப் பாருங்கள். இந்த மூன்றும் ஒன்றையொன்று தொடர்ந்து, அன்பால் பிணைந்து, மகிழ்ச்சி மழையில் நனைந்து, சந்தோசத்தால் வளர்ந்து வந்தால் கொஞ்சம் ஒரு சில நொடிகள் மட்டும் நினைத்துப் பாருங்கள். சண்டைச் சச்சரவுகள் வருமா? போட்டி, பொறாமைகள் தான் வருமா?அப்போது நம் நாடு வேற லெவலில் இருக்காதா? அதை நினைக்கும் போது ஒரு மமதை மனதுக்குள், ஒரு வகையான போதை நினைக்கும் போதே ஏற்படுகிறதா? இந்த மாதிரியான நல்ல நல்ல போதைகளுக்கு அடிமையாவதில் தவறில்லை. இந்த நல்லப் போதையே மனிதரை ஒரு மிகப் பெரிய மேதவையாகவே உருவாக்கும். நாம் அனைவரும் அந்தப் போதையை அருந்த ஆரம்பிக்கலாமா? வருகின்ற கட்டுரைகளில் ஒவ்வொரு நலமாகப் பார்க்க இருக்கிறோம். இதுவே நல்ல ஒரு ஆரோக்யத்திற்கு ஆரம்பப் புல்லியாக அமையும். அழகான ஒரு கோலம் அமைய முதலில் புல்லியைத் தான் வைப்போம். அப்புறம் ஒவ்வொரு புல்லிகளையும் இணைத்து கடைசி புல்லியோடு இணைக்கும் போதே கோலம் ரெடி ஆகிவிடுகிறது. தமிழர் நலத்தின் முதல் புல்லியை ஆரம்பித்து விட்டோம். இணைய ரெடி என்றால் ஆழகான ஆரோக்யமான மகிழ்ச்சியான வாழ்வு ரெடியாகி விட்டது என்று அர்த்தம். இன்றைய கட்டுரையில் மனநலம் என்னவென்று விளக்கமாகப் பார்க்கலாம். மனநலமுடன் இருந்தால் என்னென்ன செய்யலாம். நல்லது செய்வோம். தீயதை களை எடுப்போம். அன்பால் ஒன்று படுவோம். வாருங்கள். வணக்கம்.

 

மனநலம் காப்போம் :

நாம் இன்று முதலாவதாக மனநலத்தைப் பார்ப்பது எதற்கென்றால் உடல் நலத்தை விட மனநலத்தை சரி செய்தால் உடல்நலமானது அதுவே தொடர்ந்து உடல் நலத்தையும் சரியாக்கி விடும். நாம் மனநலத்தை சரி செய்யாம இருப்பதாலே புதுசுபுதுசா நோய்கள் வரிசையில் நின்று, நம் மனநலத்தையும் கடுமையாக பாதிக்கிறது. ஏன் மன நோய் என்ற பெயரில் நோயே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். ஒரு புள்ளி விவரம் சொல்கிறது என்னவென்றால் மனநோயாளிகள் வருடாந்தோறும் கூடிக் கொண்டே கொண்டே போகிறார்கள் என்று. இது நமக்கெல்லாம் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த அதிர்ச்சியே நம்மையும் கூட அந்த மனநோயாளிகளின் வரிசையில் நிற்க வைத்து விடும். தற்காலங்களில் தனிமை மற்றும் அதனால் ஏற்படும் வெறுமை நம்மை ஆளுமைத் தான் செய்கிறது. மேலும் வேலையின்மை, ஆதரவின்மை, பணமின்மை, குழந்தையின்மை, உறவுகள் இன்மை, வாழ்வதற்கான வசதிகள் இன்மை, மேலும்  பல இல்லாமைகளை கூட்டி கொண்டே போகலாம். இப்போது நினைத்துப் பாருங்கள். ஏன் மன நோயாளிகளின் எண்ணிக்கை கூடுகிறது தெரிகிறதா? முதலில் இந்த இன்மைகளை ஒழித்தாலே நன்மைகள் நம்மை தேடி வரும். முதலில் மன நோயாளிகளின் அடிப்படை காரணத்தை அறிந்து அதை அடியோடு அந்த ஆணிவேரோடு களை பிடுங்க வேண்டும். மேலோட்டமாக களை அகற்றினால் மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக நம் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் அதிகமாக வளர்ந்து இருக்கும் கருவேலமரங்களை நாம் அனைவரும் கேள்வி பட்டு இருப்போம். அதனுடைய தாக்கம் அனைவர்க்குமே தெரியும். எவ்வளவு வெட்டினாலும் தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே இருக்கும். மண்ணின் நீர்த்தன்மையை அதிகமாக ஈர்த்து, நாளடைவில் நீர் வராது என்கிற அளவில் நீர்வரத்துத் தன்மை இல்லாதவாறு அந்தப் பகுதியையே மாற்றிவிடும். அதற்காக அந்த மரங்களை வெட்டி, அதுவும் அடிவேரோடு வெட்டி, அடிபகுதியை எரித்தும் விடுவார்கள். அப்படி செய்தும் இன்றும் குறைந்தபாடில்லை. கருவேல் மரங்கள் இருக்கத் தான் செய்கிறது. முற்காலங்களில் வேலையின்மையை போக்க அதாவது எரிவதர்க்குத் தேவைப்படும் விறகுகளுக்காக  வளர்த்தது. இப்போ அதை எரிப்பதர்ககாகவே போராடுகிறோம். இதத் தான் சொல்லி இருப்பார்களோ, நல்லதச் செய்யப் போயி, கடைசியில் உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணுன்னு. ஆம். உண்மைத் தான். ஒரு செயலைச் செய்யும் போது, அதை ஆழ்ந்து பல கோணங்களிலும் சிந்தித்து தவறுகள் ஏற்படக்கூடாது, அப்படி தவறு ஏற்பட்டாலும் அதை நிவர்த்திச் செய்ய பல வழிகளையும் நாம் அறிந்து வந்தாலே, நாம் எந்தத் தடைகள் வந்தாலும் நம்ம தொடைகளை தட்டி சவால் விடலாம். இதற்குத் தான் சிலர் திட்டம் A திட்டம் B  ஏன் நம்மில் சிலர் பலத் திட்டங்களை வைத்து இருப்பார்கள். அவர்கள் திட்டங்களுக்குத் தான் அதிக நேரம் செலவளிப்பர்கள். அவர்கள் அப்படி செய்வதால் செயல்களில் வேலை சீக்கிரம் முடிந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. சரி. நாம் இப்போ மனநோய்க்கு வருவோம். நான் சொல்ல வந்தது மனநோய்களை நீக்குவதற்கான வழிகளை பார்க்க வருவோம் என்று. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்திற்கு மேலே மன நோயாளிகளாகத் திரிகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? முதலில் மன நோய்கள் என்றால் என்ன என்பதை நாம் முதலில் தெரிய வேண்டும். இல்லை என்றால் நாமே நமக்குத் தெரியாமல் ஒருவித மன இறுக்கக்தில், அதாவது மன நோயாளிகளின் ஒரு விதக் குணங்கள் நம்மிடையே தொற்றி இருக்கும். காலப் போக்கில் நாமும் அதுவாகவே மாறிவிடுவோம்.

ஒருவருடைய உணர்வுகள், எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் முதலானவற்றை பாதிக்கும் வகையில் ஏதாவது ஒன்று நடந்தால், கடைசியில் அவரையே எதிர் மறை விளைவுகளுக்கு இழுத்துச் செல்லும். முடிவில் மன நோயாளி நாற்காலியில் உக்காற வைத்து விடும். நாம் அந்த மன நோய் பாதிப்பு வரிசையில் நிற்கலாமா? மேலும் ஒரு வித மன நோயாளிகள் வெளிப்புறத் தோற்றத்தில் கண்டுப் பிடிக்கவே முடியாது. சாதாரண மனிதர்கள் போலே காணப்படுவர். ஒரு ஜோக்கிற்காக சொல்கிறேன். excuse me இந்த address க்கு எப்படி போகணும்னு கேட்கும்போது தெரியாது. அமெரிக்காவுக்கு சைக்கிள்ல போகணும்னு சொல்லும்போது புரிய வந்து இருக்கும். இதே மாதிரி தான் கொஞ்சம் பேச்சிலும், செயலிலும், நடவடிக்கையிலும் தெரிய ஆரம்பித்து விடும். அவர்கள் பின்பக்கத்தில்,  வாழ்க்கையில் பெரிய கிழிசல் நடந்து இருக்கும். நாம் அவர்களை சரி செய்து, நாமும் மனநோயாளிகளாக மாறாமல் இருப்பதே மனநோயாளிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அவசியமான ஒன்றாகும்.  முகத்தில் புன்னகையும், அகத்தில் தன்னம்பிக்கையும்  கொண்டவர்கள் வீழ்ந்ததாக சரித்தரம் இல்லை. சிறப்பாக வாழ்ந்தார்கள் என்பதே சரித்திர புத்தகத்தில் இருக்கிறது. ஏனென்றால் நகைச்சுவை உணர்வு இருந்தால் இந்த நோயை சற்று தள்ளி தூர வைக்கலாம். இப்போது நகைச்சுவை என்பது இயல்பிலே இல்லாமல் செயற்கையாக பயிற்சி செய்கிறார்கள். அதுவும் ஒரு வித உளவியல் முறைப்படி நாளடைவில் அவர்களை சிரிக்க தூண்ட வைத்து விடும். இந்தப் பயிற்சியானது எப்போதுமே முகத்தை இறுக்கமாக வைத்து இருப்பவர்களும், சிரிப்பு என்றால் என்ன தெரியாதவர்களும் இந்த சிரிப்பு பயிற்சி செய்து வருதல் நல்லது தான். அவர்கள் செய்யும் போது பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும். எப்போதுமே சிரித்துக் கொண்டே இருந்தாலும் நம்மூரிலே வேறு பட்டம் கொடுத்து விடுவார்கள். தேவைப்படும் இடங்களில் சிரித்தும், தேவை இல்லாத இடங்களில் சரியாக நடந்து கொள்வதுமே சராசரி மனிதனின் குணமாக இருக்க வேண்டும். உலகத்தையே சிரிக்க வைத்த நடிகர் தெரியுமே அனைவருக்கும். அவர் ஒரு கூட்டத்தில் சொல்லி இருப்பார். ஒரே நகைச்சுவையையே மூன்று முறை திரும்ப திரும்ப சொல்வார். முதல் முறை சொல்லும்போது அரங்கமே கைதட்டி சிரித்தது. இரண்டாவது முறையில், பாதி பேரும், மூன்றாவது சொல்லியதில் கொஞ்ச பேரும் தான் சிரித்தார்கள். இதையே அவர் கூட்டத்தை பார்த்து நகைச்சுவை உணர்வே உங்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லும்போது குறைகிறது. அதுவே உங்களுக்கு வரும் துன்பத்தை மட்டும் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் என்று கேட்டார். உண்மை தான் துன்பம் வரும்போதும் கவலை பட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு சொல்லப்பட்ட கதை ஆகும். மேலும் நாம் வாழும்போதே சிரித்து கொண்டே வாழவேண்டும். அதையும் அவர் தன்னுடைய இளமைக் காலங்களில் ஐரோப்பா நகரின் தெருக்களிலே தன்னுடைய காதலியின் கண்களில் காதலைப் பார்த்தார். வறுமையின் காரணமாக தோல்வி அடைந்தாலும், உலகத்தின் வெற்றியின் உச்சியில் சென்ற பிறகு அதே தெருவில் செல்கிறார். அங்கே பார்க்க கண்கள் இல்லை. அப்போதும் அவர் சொல்கிறார். இப்போது கூட வறுமை தான் வென்றது. வறுமையை வெல்வதும் ஒரு கலை. அதுவும் தேவைப்படும் சமயத்தில் வெல்வது அந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் தான் முடியும். சுருக்கமாக சொன்னால் ஒரு செயலை முதலில் யாரும் செய்யாத செயல்களில் செய்து இருக்கிறீர்கள். ஒன்று இது வெற்றியைத் தரும். இன்னொன்று வேறொருவர் முதலில், அதுவும் சிறப்பாக செய்து இருக்கிறார். இப்போது உங்களுக்கு வெற்றி வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? முதலில் சிறப்பாக செய்தவர்களை  விட வேற லெவல் என்று சொல்வார்களே உலகமே வியந்து பார்க்கும் அளவில் தரமான செய்கை செய்தால் அப்போதும் வெற்றி கிடைக்கும். மேலே சொன்ன இந்த இரண்டு வழிகள் தான் வெற்றிக்கான பாதை ஆகும். அதை நோக்கி உங்கள் முயற்சிகளை போட்டு கொண்டே இருந்தால் வெற்றி கிட்டாமலா போய்டும். வெற்றிக்கான பணம் ஈர்க்கும் கலைகள் பற்றி தனிக் கட்டுரைகளில் பார்ப்போம்.  

 

மனநோய்க்கு காரணங்கள்:

மன நோய்க்கு பல காரணங்கள் உண்டு. அதிகமாக மது அருந்தும் பழக்கங்கள், குடும்பத்தில் ஏற்படும் தீராத பிரச்சனைகள், மன அழுத்தங்கள் அதிகமாதல், மனம் எப்போதும் பதற்றமாகவே இருத்தல், உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது அனைத்துமே மனநலப் பிரச்சினைகள் ஆகும். மிகவும் கடுமையான மன உளைச்சலில் உள்ளவர்கள் தங்களை சரி செய்யாமல் விட்டுவிட்டால், தொடர்ந்து மன நோயாளிகளாக மாறிவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் விளைவு அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களையும், எதிலுமே நம்பிக்கை இல்லாமை, தெளிவாக சிந்திக்க முடியாத நிலைமை, எப்போதும் குழப்பமாகவே இருத்தல், அதிகமாக சந்தேகப் படுத்தல், ஞாபகம் இன்மை, அதிக மறதிகளால் தவறுகளை திரும்ப திரும்பச் செய்தல், இன்னும் ஏன் கோவம் மூக்கிலே வரும் என்று சொல்வார்களே, அதாவது எப்போதாவது கோபப்பட்டால் சரி, எப்போதுமே கோவப்பட்டால் எப்படின்னு நினைப்போமே அப்படி தான். அவர்களும் மன நோயாளி தான். அவர்களின் எண்ணங்களைப் பார்த்தால் விபரீதமான, நடக்கவே செய்யாததை நடந்தற்க்கு மேலாக வீணாக கற்பனை செய்தல், அதாவது சம்பந்தமில்லாததை சம்பந்தப்படுத்தி பேசுதல், கற்பனை எண்ணங்களை விபரீதமாகவே எண்ணுதல், சிலர் தனக்குத் தானே பேசிக்கொள்வார்கள். சிரித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் அனைவரும் நம்மைத்தான் பார்த்து சிரிக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு, மனசையும் கஷ்டப்படுத்தி கஷ்டப்படுவார்கள். சொல்லப்போனால் தன்னை பற்றி சிந்தித்து வாழ்வை கடத்தவேநேரம் போதவில்லை அனைவருக்கும். அதுதான் உண்மையும் கூட. இதில் மற்றவர்களை பற்றி நினைத்தல் என்பது பெரும்பாலும் இருப்பதில்லை. தனக்கு அப்படி தெரிகிறது என்று மற்றவர்களையும் நம்ப வைக்க முயற்சி வேற செய்வார்கள். கண்ணுக்கு தெரியாத ஒன்றை ஏதோ ஒரு உருவம் தெரிஞ்ச மாதிரி தன்னையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்புவார்கள். இவர்களை நாமும், சமுதாயமும் தள்ளி வைத்து பார்க்காமல், விதி அவர்களுக்கு அப்படி எழுதப்படவில்லை நாம் தான் அவர்களை அப்படி மாற்றி வைத்து இருக்கிறோம். அன்பால் எதையும் சாதிக்க முடியும், மாற்ற முடியும் என்று இந்த இடத்தில அழுத்தமாக பதிவு செய்கிறேன். மனநலப் பிரச்சனை என்பது ஒரு பிரச்சனையே இல்லை. எளிதில் குணமாக்கி விடலாம். நாம் அதைச் செய்யாமல் லூசு, பைத்தியம் என்றே சொல்லி வெறுப்பேற்றி, ஓரங்கட்டி, அவர்களை மேலும் லூசாக்கி, பைத்தியமாக்கி திரிய விடுகிறோம். ஒருவருடைய மனதை காயப்படுத்துவதற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மன நோயாளிகள் இருப்பதே அரிது ஆகிவிடும்.. ஆனால் தற்காலங்களில் பணம் இல்லை என்றாலே உறவுகள்னு சொல்ல கூச்சப்படுகிற உலகில் வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது மனநோயாளிகளை எப்படி நினைப்பார்கள். உங்கள் கருத்திலே விட்டு விடுகிறேன். அவர்கள் பிச்சை எடுத்து தெருக்களில் அலைய விடுவதால், அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. மனநலப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்து சரி செய்தால் தீர்த்து விடலாம். நாம் அக்டோபர் 10 அன்று உலக மனநல தினமாக கொண்டாடி வருகிறோம். மன நோயாளிகள் அதிகமாக வந்ததால் கொண்டாடுகிறோமேன்னு தெரிய வில்லை. ஆனால் அந்தத் தினத்தில் மன நோயாளிகளின் எண்ணிக்கையே குறைப்பதே அந்த தினத்தின் மையக் கருத்து, நோக்கம் ஆகும். அதே மாதிரி மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவு மற்ற நாடுகளை ஒப்பீடு செய்கையில், குறிப்பாக கணக்கீடு புள்ளி விவரப்படி, வெளிநாடுகளில் ஐந்து ஆயிரம் பேர்க்கு ஒரு மனநல மருத்துவரும், அதுவே நம் நாடுகளில் இலட்சத்துக்கு ஒரே ஒரு மருத்துவரும் தான் இருக்கிறார்கள். இன்னும் பல மனநோயாளிகளின் காப்பகம் அதிகம் தென்படுவது, நடத்தி வருவது என்பது ஒரு ஊக்கமாக இருந்தாலும், மன நோயாளிகளை இல்லாமால் செய்வதே மனநலத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும். மனநோயாளிகளையும் அன்பு, பாசம் செலுத்தி குணமடையச் செய்யலாம். அதையே அவர்கள் மன நோயாளிகளாய் ஆவதற்கு முன்னமே செய்தால் மன நோயாளிகள் உருவாகமல் இருக்கச் செய்யலாம். நம் நாட்டில் மன அழுத்தம் கொடி கற்றி பறக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மன அழுத்தம் இல்லாதவர்களே இனி பார்ப்பது கடினம் போலத் தெரிகிறது. மன அழுத்தம் என்பது இயலாமையின் வெளிப்பாடே. சக்தியின்மையின் காரணத்தினால் வரும் விரக்தியே. இதை வராமல், சரி செய்வது என்பதை இன்னும் விளாவரியாக அடுத்தக் கட்டுரையில் பாப்போம்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் மீண்டும் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

ஆரோக்கிய குறிப்புகள் : மனநலம் தான் மகிழ்ச்சிக்கு காரணம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Mental health is the reason for happiness - Health Tips in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்