மனம் என்ற ஏரியில் அலைகள் என்ற விருத்திகள் இருக்கும் வரை ஏரிக்கரையின் அழகை இரசிக்க முடியாது.
பிராணயாமம் செய்யும் முறை
"ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம்
அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத்திரண்டதிரேசகம் மாறுத லொன்றின்கண் வஞ்சகமாமே"
மாத்திரை கண் இமைப்போது/கைந் நொடிப்பொழுது; வாமம் - இடப்பாக்கம்; ஊறுதல் முச்சை
வெல்ல விடுதல்; வஞ்சகம் - வஞ்சனை
பூரகம்
முதல் புற்றில் பாம்பு புற்றுக்குள் செல்வது 16 மாத்திரை அளவு இடப்பக்க
நாசித்துளையில் காற்றை உள்ளுக்கு இழுத்தல்.
கும்பகம்
இரண்டாவது புற்றில் பாம்பு 64 மாத்திரை அளவு உள்ளடங்கி இருப்பது போல் இழுத்த காற்றை உள்ளே
நிறுத்துதல்.
ரேசகம்
மூன்றாவது புற்றில் பாம்பு மெதுவாக 32 மாத்திரை அளவு (வெளியே வருவது போல்) காற்றை மெல்ல விடுவது.
வஞ்சகம் (தவறானது)
நான்காவது புற்றில் காற்றை தவறாது உள்ளிழுப்பது, தவறாக உள்நிறுத்துவது, வெளிவிடுவது.
திருமந்திர திறனாய்வு
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் புற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.
"பிராணாயாம பயிற்சியுடையவர்க்கு மனம் என்ற குதிரை அடங்கி
இருக்கும். முறையற்ற பயிற்சி உடையவர்க்கு மனம் அடங்கி நிற்காது. அவரை மீறி
சென்றுவிடும்."
பதஞ்சலியின் (யோகசூத்திர) பரிணாமங்கள்
மனம் என்ற ஏரியில் அலைகள் என்ற விருத்திகள் இருக்கும் வரை ஏரிக்கரையின் அழகை
இரசிக்க முடியாது. கரையில் உள்ள மரங்களும் தெளிவாக தெரியாது. அதுபோல எண்ண அலைகள்
இல்லா (விருத்திகளற்ற) மனதில் அமைதி என்னும் அழகின் நிலையை உணரமுடியும். யோகம்
எண்ண அலைகளை அடக்க (நிரோதா) வழிகாட்டுகிறது.
ஏரி - மனம்; அலைகள் - விருத்திகள்; அடக்குதல் - நிரோதா;
"யோக சித்த விருத்தி நிரோதா”
ஒரு ஏரியின் மேற்பரப்பைக் காற்று சலனப்படுத்தி அதில் உள்ள பிம்பங்களைக்
கலைப்பது போல, சித்த விருத்தியும் மனதைக் கலைக்கின்றது. ஏரியின் சலனமற்ற நீர்ப் பரப்பு
அதைச் சுற்றிலும் உள்ள இயற்கை அழகைப் பிரதிபலிக்கிறது. மனம் சலனமற்று இருக்கும்
போது, 'தான்' என்பதன் அழகு அதில்
பிரதிபலிக்கிறது. யோகி தொடர்ந்து பயிற்சியாலும், தனது
விருப்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாலும் தன்னை அமைதிப்
படுத்துகிறார்.
திருமந்திரம் கூறும் நியமத்தான்
தூய்மை அருளுண் சுருக்கம் போன்ற செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமம், களவு, கொலையெனக் காண்பவை. நேமியீரைந்து நியமத்தனாமே. உண்சுருக்கம் - குறைந்த
அளவு உணவு, பொறை - பொருமை, செவ்வை -
நேர்மை. நேமி - நியம நெறியில் நிற்பவன். (யோகி)
யோக நெருப்பு - YOGA FIRE
'மனிதனுடைய உடல் மண்ணால் செய்த பாண்டம் போன்றது. அதை யோகம் என்ற
நெருப்பால் சுட வேண்டும்"
"The human frame is mere earthen were
Bake it with the frame of yoga-fire"
"The body invaribly wears among like an unbaked earthen jar immersed
into water. (Therefore) the body should be conditioned by tempering it with the
fire of yoga"
யோகம் ஒரு கத்திமுனை பாதை
யோகம் தன்னை உணர்வதற்கான மார்க்கமாகும். அது சுலபமானதொரு பாதையல்ல; கத்தி முனையில்
நடப்பது போன்றதொரு பாதையாகும் என்றும் ''...எந்த ஒருவனும்
(இந்த பாதையில்) அடிமேல் அடிவைத்து நடக்கிறான்" என்றும் உபநிஷத்துகளில்
சொல்லப்பட்டிருக்கிறது. பல்வேறு பொருள் கொண்ட யோகம்
1. Yoga - Sannahana = to be well-armoured / equipped/trained
2. Yoga - Upaaya = effective strategy
3. Yoga – Dhyaan = meditation
4. Yoga – Samgati = harmony
5. Yoga – Yukti = effective techniques of Yoga like asanas, etc.,
பட்டை தீட்டப்பட்ட வைரம் ஒன்றிற்குப் பல பக்கங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒளியின்
வெவ்வேறு நிறங்களைப் பிரதிபலிக்கின்றன. அதேபோல, யோகா என்ற சொல்லில் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு பொருளைப்
பிரதிபலித்து உள்ளார்ந்த அமைதி மற்றும் ஆனந்தத்தைப் பெறுவதற்கான மனித முயற்சியின்
வெவ்வேறு அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
பிராணாயாமம் (சுவாசத்தின் அறிவியல்)
"Yaktha Simho Gojo Vyaghro
Bhavedva's Yah Sanaih Sanaih,
Tathaiva Sevito Vayuranyatha
Hanti Sadhakam"
"Just as a lion, an elephant or a tiger is tamed by degrees,
similarly, respiration is to be brought under control gradually; other wise it
would harm the aspirant."
'இது வாழ்க்கை சுற்றி வருகின்ற அச்சாணியாகும். சிங்கங்களும்,
யானைகளும், புலிகளும் மிகவும் மெதுவாக வும்,
கவனத்துடனும் பழக்கப் படுவது போல, பிராணாவும்
மெதுவாகவும் ஒருவரது திறன் மற்றும் உடல்ரீதியான குறைபாடுகளைப் பொருத்த வரையில்
படிப்படியாகவும், கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், அது பயிற்சியாளனைக் கொன்றுவிடும்'' இவ்வாறு ஹதயோக பிரதீபிகை எச்சரிக்கை செய்கிறது.
பிராணயாம சாதகனின் மனம்
இட்ட தவிடு இளகாது ரேசித்து
புட்டிப்படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க எமன் இல்லை தானே.
- திருமந்திரம்
மூச்சை உள்ளிழுக்கும் பொழுது உடலில் உள்ள பத்து நாடிகளும் நிறைவாக கிளர்ச்சி
பெற வேண்டும். வெளிவரும் பொழுது மூக்கருகே தவிடு வைத்து (பரிசோதனை) இருந்தால் தவிட்டில்
எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் வண்ணம் முதுவாக வெளிவிட வேண்டும். பிராணன் கும்பகத்தில்
இருக்கும் சில வினாடிகளில் பிராணனோடு அபாணன் இணையும். அப்படி இணைபவர்களுக்கு
எமனுடைய பயம் இல்லை.
ஆறு விரற்கடை மூச்சுக்காற்று வெளியேறினால்
எண்பது ஆண்டு ஆயுள்.
ஏழு விரற்கடை மூச்சுக்காற்று வெளியேறினால்
அறுபது ஆண்டு ஆயுள்.
எட்டு விரற்கடை மூச்சுக்காற்று வெளியேறினால்
ஐம்பது ஆண்டு ஆயுள்.
ஒன்பது விரற்கடை மூச்சுக்காற்று வெளியேறினால்
முப்பது ஆண்டு ஆயுள்.
பத்து விரற்கடை மூச்சுக்காற்று வெளியேறினால்
28 ஆண்டு ஆயுள்.
பதினைந்து விரற்கடை மூச்சுக்காற்று வெளியேறினால்
25 ஆண்டு ஆயுள்.
யோகசாரம்
உறுதியான ஒரு கோபுரத்தை கட்ட நினைப்பவர்கள் முதலில்
உறுதியற்ற ஒரு சாரத்தைக் கட்டுவார்கள். அந்தச் சாரத்தில் நின்றுகொண்டு கோபுரத்தைக்
கட்டி முடிப்பார்கள். உறுதியான கோபுரம் உருவான பிறகு சாரம் விலக்கப்பட்டுவிடும்.
அதே மாதிரி யோகத்தில் உள்ள ஆசனமும் சாரம் போன்றது.
ஆசனம் நன்கு அமைந்து விட்டால் ஞான நிலைக்கு செல்ல வழி வகுக்கும்.
மானுட தேகத்தில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகளும், நரம்புக்கு ஒரு நாடியாக
எழுபத்திரண்டாயிரம் நாடிகளும் செயல்படுவதை ஏற்கனவே படித்திருக்கிறோம்.
இந்த நரம்புகள் மொத்தமும் முதுகுத் தண்டில் உள்ள பிரம்ம
நாடியோடு இணைந்து மூளைக்குச் செல்வதையும் ஆறு ஆதார கமலங்களோடு இணைந்து
இயங்குவதையும் இந்த இயக்கமும் செயல் முறைகளும் 96 வர்மச் சக்கரங்களோடு தொடர்புள்ளதையும்
நாம் அறிந்திருக்கிறோம்.
பயிற்சியாளர் பிராணயாமங்களைப் பயின்றுகொண்டு
இருக்கின்ற வரை அது பிராண சாதகம் என்றும், பிரம்ம நாடியோடு வினை புரிகின்றபோது அதன் பேர் பிராண ராதகம் அல்ல என்றும்
அப்போது அதன் பேர் வாசியோகம்.
இங்கே தான் பிரம்ம ஞானம் அறிய விரும்புபவன்
எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இந்த இடம் பிரம்ம ஞானக் கல்வியின் வடிப்பான்
என்று சொல்லப்படுகிறது.
இந்த இடம் வரை வந்து தவறுபவர்கள் அதிகம். பிரம்ம
ஞானப் பாதையில் பெரும் திருப்பங்களை உண்டாக்குகின்ற சோதனை மிக்க இடம் இந்த இடம்
தான். ஆகவே, இந்த
காலகட்டம் வடிப்பான் என்றும் இருட்டிடம் என்றும் சொல்லப்படுகிறது.
சித்தாசனம்
(கற்பகத்தரு மற்றும் காமதேனு)
இந்த சித்தாசனம் பிரம்மச்சர்யம் என்ற விரதம் நிறைவேற, பிராணமயம் அன்னமய கோசங்களை சரியான
ஸ்தலத்தில் வைக்கிறது. கீரிப்பிள்ளை பாம்பு கழுத்தைப்பிடிப்பது போல் கீழ் மனதை
நறுக்கி விடுகிறது. இந்த தத்துவங்கள் மிக நுட்பமானவை. நாமே ராஜா அகண்ட சச்சிதானந்த
ராஜா. ஆனால், இவற்றை எல்லாம் மறந்து, மனமென்ற
ஒரு அசுரனிற்கு அடிமையாகி விட்டோம்.
நம் சித்தாசனத்தை நாம் அடைய, இந்த அசுர மனது நமக்கடிமையாக
வேண்டும். அதை வெல்ல வேண்டும். மனதை வெல்வதென்றால், அதிலுள்ள
ஆசை, பாச ஆறு வினை தோஷங்களை ஒழிப்பதே இந்த வெற்றிக்குரிய
வழியாகும். இதன் ஒரு பகுதியே சித்தாசனம்.
மனக்கட்டுப்பாடு, பிரம்மச்சர்யம், மனச் சாந்திக்கென்றே ஏற்பட்டது
சித்தாசனம், சித்தாசனம் செய்பவர்கள் ஆண்மை இழப்பான் என்ற
பயம் தேவை இல்லை.
சித்தாசனம் மட்டுமே 84,00,000 ஆசனங்களில் முக்கியமானது.
சித்தாசனம் மட்டுமே 72,000 நாடிகளை சுத்தப்படுத்துகிறது.
மூச்சுப்பயிற்சி என்பது கையைச் சுற்றிய பாம்பை
போன்றது. சரியாகச் செய்ய வில்லையென்றால் பயிற்சியாளனை அது கொன்றுவிடும். அதுபோல்
மூச்சு பயிற்சி என்பது போக்குவரத்து நிறைந்த பாதை போன்றது. அதை ஜாக்கிரதையோடு
கடக்க வேண்டும்.
இராஜயோக
ரகசியம்
இராஜயோக இரகசியத்தை அடையும் வழிமுறை எப்படியென்றால்
ஓர் கயிற்றால் கட்டப்பட்ட பக்ஷி (பறவையானது) அந்தக் கயிற்றை அடிக்கடி எப்படி
இழுத்துக் கொண்டு இருக்கிறதோ, அதுபோல் ரேசக பூரகங்களென்றும், பிராண, அபான வாயுக்களுக்கு மத்தியிலிருக்கும் ஜீவனை, மூச்சானது
மேலுக்கும் கீழுக்கும் அதாவது உள்ளுக்கும் வெளிக்கும் இழுத்துக் கொண்டே இருக்கும்.
அந்த ஜீவன் மூச்சுடன் சேர்ந்து நாசிக்குள்ளும், வெளியும்
நடக்கும் பொழுது அஜபா (ஜெப யோகமாகிய) ஸோஹம்; ஸோஹம் (நான்
அதுவாகிறேன்) என்னும் வாக்கியத்தைத் தனக்குத்தானாகவே ஜபித்துக் கொண்டே போகும்.
இந்த இரகசியத்தை தெரிந்து இராப்பகலாய் ஜபம்
(அப்பியாசம்) செய்து வரப்பட்டவர்களே இராஜயோகிகள் என்று சொல்லப்படும்.
சமையல் செய்ய நெருப்பு எப்படி அவசியமானதோ அதுபோல்
யோகத்தில் பக்குவமடைய வேண்டிய எல்லா செயல்களுக்கும் பத்மாசனம் அவசியம்.
யாத்திரைக்காரர் போல் சதா ஊர்ப்பிரயாணம் செய்து
கொண்டு இருக்கும் மனதை ஒரு நிலைப்படுத்த தூண்டுவது பத்மாசனம் ஆகும்.
மனது எந்த தூண்டுதலுக்கிடமின்று நிற்கும் வரை ஆசன
சித்தி ஏற்படாது. மேலும், இந்த ஆசனத்திலமர்ந்தவுடன் பூமியைத் தாங்கி நிற்கும் ஆதிசேஷன் தானே என்பதனை
மனதில் நினைத்து திடமாக அசைவின்றி ஊன்ற வேண்டும்.
ஆரோக்கியம் குறிப்புகள் : பிராணயாமம் செய்யும் முறை - குறிப்புகள் [ ஆரோக்கியம் குறிப்புகள் ] | Health Tips : Method of Pranayama - Tips in Tamil [ Health Tips ]