1. அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவைக் கூட திறக்கும் வல்லமை உடையது. 2. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதருடன் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 3. அனுபவம் ஓர் உயர்ந்த நகை ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்க பட்டிருக்கிறது. 4. சமுதாயம் காலச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி தன்னை மாற்றி கொண்டால் அங்கே சமூக புரட்சி ஏற்படாது. மாறாக தொடர்ந்து சமூக வளர்ச்சி ஏற்படும். 5. லட்சியம், அடைய வேண்டிய குறிகோள், ஆகியவற்றை மறக்கக் கூடாது. 6. செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்கு செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை. 7. நல்ல எண்ணமும், நல்ல செயலும் ஒவ்வொருவருக்கும் முகத்தில் ஓர் அழகிய ஒளியை கொடுக்கிறது. 8. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கி துன்பத்தை குறைக்கின்றது. அது இன்பத்தை இரட்டிப்பாக்குகிறது. 9. ஒருவர் பார்க்கும் அழகின் ஒரு பகுதி அவரது பார்வையிலேயே இருக்கிறது. 10. நட்பும் உடைய கூடிய பொருளே அரிய பொருளை எப்படி கையாளுவோமோ அத்தகைய கவனத்துடன் நட்பையும் கையாள வேண்டும்.
மனதை பண்படுத்தும் பொன்மொழிகள்!
1. அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவைக் கூட திறக்கும்
வல்லமை உடையது.
2. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு
அஞ்சும் மனிதருடன் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
3. அனுபவம் ஓர் உயர்ந்த நகை ஏனென்றால் அது மிகவும்
கூடுதலான விலை கொடுத்தே வாங்க பட்டிருக்கிறது.
4. சமுதாயம் காலச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி தன்னை
மாற்றி கொண்டால் அங்கே சமூக புரட்சி ஏற்படாது. மாறாக தொடர்ந்து சமூக வளர்ச்சி ஏற்படும்.
5. லட்சியம், அடைய வேண்டிய குறிகோள், ஆகியவற்றை மறக்கக் கூடாது.
6. செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்கு செலுத்தும்
ஒப்பற்ற பிரார்த்தனை.
7. நல்ல எண்ணமும், நல்ல செயலும் ஒவ்வொருவருக்கும் முகத்தில் ஓர்
அழகிய ஒளியை கொடுக்கிறது.
8. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கி துன்பத்தை குறைக்கின்றது.
அது இன்பத்தை இரட்டிப்பாக்குகிறது.
9. ஒருவர் பார்க்கும் அழகின் ஒரு பகுதி அவரது பார்வையிலேயே
இருக்கிறது.
10. நட்பும் உடைய கூடிய பொருளே அரிய பொருளை எப்படி
கையாளுவோமோ அத்தகைய கவனத்துடன் நட்பையும் கையாள வேண்டும்.
11. நமக்காக நம் குற்றங்களை கண்டுபிடித்துச் சொல்லி
அவற்றை மற்றவர்கள் அறிந்து விடாதபடி மறைத்து கொள்பவன் சிறந்த நண்பன்.
12. நாம் பெறும் கருத்துகளின் அறிவை செயலில் பயன்படுத்தா
விட்டால் நூல்கள் வெறும் பழைய தாள்களே ஆகும்.
13. பிறருடைய அன்பையும், மதிப்பையும் நீங்கள் பெற விரும்பினால் அவரிடமிருந்து
வேறு எதையும் பெற நினைக்காதீர்கள்.
14. ஈட்டி முனையில் சாதிக்க முடியாததைக் கூட இதயக்கனிவால்
சாதிக்க முடியும்.
15. அறிவை விட ஆர்வமே அதிக செயல்களை செய்ய வல்லது.
16. ஒரு போதும் மனம் தளராதீர்கள். இடமும், நேரமும் சரியாக ஒத் துழைத்தால் அலை கூடத் தணியும்.
17. ஒரு செயலுக்கு கிடைக்கும் வெகுமதி ஆனது மற்றொரு
செயலை நிறைவேற்ற தேவையான சக்தி ஆகின்றது.
18. ஒரு புத்தகம் முழு வதையும் வேகமாய் படிப்பதை விட
ஒரு பக்கத்தை நன்றாக உணர்ந்து கொள்வது மேலான செயலாகும்.
19. அன்பும், பரிவும் எங்கிருக்கிறதோ அங்கு ஆசையும் பணிவும்
அடைக்கலம்.
20. தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதையும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின்
சிறந்த பண்பு இதுவே.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : மனதை பண்படுத்தும் பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | self confidence : Mind-cultivating mottos! Let's find out about - Notes in Tamil [ ]