அதிசயம்! அதிசயம்! ஆனால் உண்மை... உண்மை...

பிரகதீஸ்வரர் ஆலயம்

[ சுவாரஸ்யம்: தகவல்கள் ]

Miracle! Miracle! But the truth... the truth... - Prahadeeswarar Temple in Tamil

அதிசயம்! அதிசயம்! ஆனால் உண்மை... உண்மை... | Miracle! Miracle! But the truth... the truth...

தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் தொடர்பு உண்டா? தஞ்சாவூர்ல மட்டும் அந்த பொம்மை தயாரிக்கப்படுகிறதே அதை விடவா தொடர்பு இருந்து விடப் போகுது? வேற என்ன தொடர்பு இருக்க முடியும்?? வாருங்கள் பதிவில் பாப்போம்.

அதிசயம்! அதிசயம்! ஆனால் உண்மை... உண்மை...

 

*தலையாட்டி பொம்மையும்..!!*

 

 *தஞ்சை பெரியகோவிலும்..!!*

 

பிரகதீஸ்வரர் ஆலயம்

தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் தொடர்பு உண்டா?

தஞ்சாவூர்ல மட்டும் அந்த பொம்மை தயாரிக்கப்படுகிறதே அதை விடவா தொடர்பு இருந்து விடப் போகுது? வேற என்ன தொடர்பு இருக்க முடியும்?? வாருங்கள் பதிவில் பாப்போம்.

என்ன சுவாரசியம் இருக்கும். இருக்குமா?

இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மை என்று சொல்கிறோமே அதில் ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க என்றால் நம்பமுடிகிறதா? நம்பத்தான் செய்ய வேண்டும். அது தான் தமிழர்களின் வரலாறு. வாருங்கள் மேற்கொண்டு பார்ப்போம்.

களிமண்ணை வைத்து தஞ்சாவூரில் செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் தமிழர்களின் மத்தியில் மிகவும் பிரபலம் மற்றும் பாரம்பரியமானவை என்று கருதப்படுகிறது. அதாவது கொட்டாங்குச்சி எனப்படும் தேங்காய் பகுதியில் அதன் பாதி சிரட்டையின் மேல் பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்டு உருவாகிய ராஜா ராணியின் உருவ பொம்மைகளாக தஞ்சாவூரில் வைத்து செய்யப்படுகிறது. அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு மேற்பகுதி களிமண்ணால் நிரப்பி வைக்கப்படுகிறது. அப்படி தயாரித்து வைக்கப்பட்டுள்ள பொம்மையானது தரையில் வைக்கும் போது அந்த பொம்மை எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி பழைய நிலையிலேயே அதாவது கடைசியில் நேராகி நின்று விடும். ! இதுவே ஒரு விசித்திரம் அல்லவா? அதுமட்டுமா? இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா?

நம்ம தஞ்சாவூர் பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடும் பணி அதாவது குழி தோண்டுவதற்க்காக ஆழ்துளை கிணறு தோண்டி இருக்கிறார்கள். அதுவே தோண்ட தோண்ட களிமண்ணோ, அல்லது செம்மண்னோ வரவில்லை. மாறாக  ஒருவகையான வித்தியாசத்தில் மணல் வந்திருக்கிறது. வேற ஒண்ணுமில்லை அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல் ஆகும். சரி அந்த சாதரண ஆற்று மணலுக்கும், அந்த பாறை மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

சாதாரண ஆற்று மணலில், அந்த மணலை விட, காட்டாறுகளில் காணப்படும் மணலில் காணப்படும்  பாறைத்துகள்கள் அதிகம் காணப்பட்டு நிறைந்து இருந்தது. அது மட்டுமல்ல மேலும் சாதாரண மணலை காட்டிலும் அந்த மண்ணின் கடினத்தன்மை அதிகம் இருந்தது. அந்த மணலை கொண்டு தான் கோவிலை கட்டுவதற்குமுன் அடிப்பகுதியில் நிரப்பி இருக்கிறார்கள். இந்த தகவலை அறிந்த உடன் தஞ்சை பெரிய கோயில் மீட்புக் குழுவின் முயற்சியால் போர் போடும் வேலையை உடனடியாக நிறுத்தி தடுக்கப்பட்டது. ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் பல அழுத்தங்களை தாங்கியும் மற்றும் நான்கு புறமும் அகலிகளால் சூழப்பட்டு மிகவும் கம்பீரமாக நமக்கு காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் ! என்றால் நம்ப முடிகிறதா? இவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா? அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது !

அந்த அதிசயமே அந்த மணலில் அகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராக்கிக் கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ! just imagine now !

இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.

அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !

சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு இந்த உலகில் வேறு எவரும் ஈடாக மாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று !

கட்டிடக்கலையில் உலக அதிசயம் என்று சொல்கிறோமே பைசாவின் சாய்ந்த கோபுரம் அனைவருக்கும் தெரிய வருகிறது. உலகின் அதிசயமான முக்கிய கட்டிடமாக கருதப்படும் இந்த உலகில், தன்னைத் தானே நேராக்கி கொள்ளும் சக்தி உள்ள தஞ்சை பெரியக் கோவில் கோபுரம், அதாவது பிரகதீஸ்வரர் ஆலயம் தற்கால நம் தமிழர்களின் அடையாளமாக இருக்க வேண்டுமே! ஆனால் அது மக்களுக்கு தெரிய இயலாமையின் அடையாளத்தை அல்லவா காட்டுகிறது. நாம் இதை தமிழர்கள் மத்தியில் பரப்பி மேலும் இறைவன் ஆசியுடன் நம் முயற்சியில் நம் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இந்த தகவலை உலகறியச் செய்வோம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

சுவாரஸ்யம்: தகவல்கள் : அதிசயம்! அதிசயம்! ஆனால் உண்மை... உண்மை... - பிரகதீஸ்வரர் ஆலயம் [ தகவல்கள் ] | Interesting: information : Miracle! Miracle! But the truth... the truth... - Prahadeeswarar Temple in Tamil [ information ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்