திருக்கோயில்களில் நமஸ்காிக்கும் முறை

நவகிரக வழிபாடும், பலன்களும் பற்றிய பதிவுகள், எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Mode of Namaskar in Temples - Posts about Navagraha worship and benefits, what benefits will you get if you worship any planet in Tamil

திருக்கோயில்களில் நமஸ்காிக்கும் முறை | Mode of Namaskar in Temples

திருக்கோயிலில் உள்ளே போனவுடன் பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ண வேண்டும்.

 திருக்கோயில்களில் நமஸ்காிக்கும் முறை

👏👏👏👏👏👏👏👏

 

திருக்கோயிலில் உள்ளே போனவுடன் பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ண வேண்டும்.

கிழக்கு நோக்கிய கோயில்களிலும் மேற்கு நோக்கிய கோயில்களிலும் வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும். தெற்கு நோக்கிய கோயில்களிலும் வடக்கு நோக்கிய கோயில்களிலும் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கக் கூடாது.

ஆடவா்கள் தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்க வேண்டும்.

அதற்கு அட்டாங்க நமஸ்காரம் என்று பெயா் .

பெண்கள் தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்க வேண்டும்.

இதற்கு பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயா்.

 

நவகிரக வழிபாடும், பலன்களும் பற்றிய பதிவுகள்

 

கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான்

 

நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.

 

அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்

 

எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது

 

எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்

 

சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்

 

சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்

 

செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்

 

புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்

 

குருபகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்

 

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்

 

சனிபகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்

 

ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்

 

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்

 

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்

 

பலன்தரும்பாடல்

 

திருஞானசம்பந்தரின் ‘கோளறு' திருப்பதிகத்தின் முதல் பாடல்

 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

 

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்

 

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்

 

ஓம் நமசிவாய


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருக்கோயில்களில் நமஸ்காிக்கும் முறை - நவகிரக வழிபாடும், பலன்களும் பற்றிய பதிவுகள், எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் [ ] | Spiritual Notes : Mode of Namaskar in Temples - Posts about Navagraha worship and benefits, what benefits will you get if you worship any planet in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்