131. ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஓழுக்கம் உடைமை 131. ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். நல்லொழுக்கம் பெருமை தருவதால், அவ்வொழுக்கத்தை உயிரைவிட மேலாகக் கருத வேண்டும். 132. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்: தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. பகுத்தறிவுடன் ஆராய்ந்து பார்த்தால், வாழ்க்கைக்கு ஒழுக்கமே துணையாகும், அதனைக் கெடாமல் காக்க வேண்டும். 133. ஒழுக்கம் உடைமை குடிமை: இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். நல்லொழுக்கம், உடையவராதலே. நல்ல குடிக்குரிய தன்மை, ஒழுக்கம் இழந்தவர், இழிந்த குடிப்பிறப்பினரேயாவர். 134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும்: பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். கற்ற கல்வியை மறந்தாலும், பின் கற்றுக் கொள்ளலாம். அந்தணன் ஆனாலும், ஒழுக்கம் கெட்டால். பெருமை கெடும். 135. அழுக்காறு உடையான்கள் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. பொறாமை உள்ளவனிடம் செல்வம் இல்லாதது போல் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வும் இல்லையாகும். 136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து. நல்லொழுக்கம் தவறினால் குற்றம் உண்டாகும் என்பதை அறிந்து. மனவலிமை உடையவர்கள் நல்லொழுக்கம் தவறமாட்டார்கள். 137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. ஒழுக்கத்தால் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறினால் தீராப்பழியை அடைவர். 138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். நல்லொழுக்கம் நன்மைக்கு மூலமாகும். தீயொழுக்கம் எந்நாளும் துன்பத்தையே கொடுக்கும். 139. ஒழுக்கமுடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். மறந்ததும் தீய சொற்களையும் தம் வாயால் சொல்லுதல் ஒழுக்கமுடையவர்களுக்கு இயலாத ஒன்றாகும். 140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உலக நெறிகளோடு சேர்ந்து நடப்பதே கற்றவர்களது கடமையாகும். இல்லையாயின் அறிவற்றவரேயாவர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம் : 14
திருக்குறள்: பொருளடக்கம் : ஓழுக்கம் உடைமை - அதிகாரம் : 14 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Moral possession - Authority : 14 in Tamil [ Tirukkural ]